Friday, December 30, 2011

மக்கள் போராளிகள் - 2011


உலகம் முழுக்க அணுமின் நிலையங்களுக்கு எதிராக எழும் முழக்கங்களில் சுப.உதயகுமாரனின் குரல் மிக முக்கியமானது. இன்றைய கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட நெருப்புக்கு 80 - களிலே கனல் எடுத்தவர் இவர். கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மீனவக் கிராமத்து மக்கள் இவரது தலைமையில் உறுதியாகத் திரண்ட போது இந்திய அரசே நடுங்கியது. அமைதிக் கல்வியில் முனைவரனா இவர், எத்தியோப்பியாவில் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்தவர். தெருமுனைப் பிரசாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், அறிவியல் மேடைகள், பட்டினிப் போராட்டங்கள் என ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

அணுஉலைகள், அணுக் கழிவுகளின் பாதிப்புகள் குறித்த களப் பணிகளுக்காக ஜெர்மன், ஜப்பான்,சீனா போன்ற நாடுகளுக்குச் சென்று வந்தவர். கூடங் குளம் அணு உலைகள் பற்றி இவர் உருவாக்கிய 'தி கூடங்குளம் ஹேன்ட்புக்'
என்ற புத்தகம் இன்று முக்கியமானதொரு ஆவணம். 'அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்' என்ற அமைப்பின் மூலம், ஜைதாபூர், ரவத் பாட்டா, தாராப்பூர் என அணு உலைகள் அமைந்து இருக்கும் இந்தியாவின் அனைத்துத் தளங்களிலும் போராட்ட நெருப்பைப் பற்றி எரிய செய்கிறார் உதயகுமாரன்.


பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து ஒலிக்கிறது, சண்முகத்தின் உயிர் குரல். 1992 -ஆம் ஆண்டு வாச்சாத்தி மழைக் கிராமத்தில், காவல் துறையும், வனத் துறையும் செய்த பாலியல் வன்முறையில், 18 பெண்கள் பாதிக்கப்பட்ட கொடுரத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர்களில் முக்கியமானவர். வாச்சாத்தி மக்கள் சார்பாக வழக்குத் தொடுத்து, 19 ஆண்டுகள் இடைவிடாத சட்டப் போராட்டம் நடத்திய மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்.

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக, குற்றம் சாட்டப்பட்ட 216 பேருக்கும் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தது நீதிமன்றம். இந்திய நீதித் துறை சரித்திரத்தில் இது ஒரு மைல் கல். அந்த எளிய மக்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்கப் போராடிய சண்முகம், தீண்டாமைக்கும் அதிகார வன்முறைக்கும் எதிராகத் தீப்பந்தம் எந்துவதையே தன் வாழ்க்கையாக்கி கொண்டவர்.


பிரின்ஸ் கஜேந்திரபாபு

கருணாநிதி ஆட்சியில் அமலாக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக, சமச்சீர்க் கல்விக்கு ஜெயலலிதா தடை போட்டபோது, கல்வியாளர்களுடன் பிரின்ஸ் கஜேந்திரபாபு சுழற்றிய போராட்டைச் சாட்டை அரசை மிரள வைத்தது. 'பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை' என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல ஆண்டுகளாகவே பொது மக்களுக்கான விழிப்பு உணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருபவர். பொதுக் கூட்டமேடைகள், அரங்கக் கூட்டங்கள், ஊடங்கங்கள் மூலமாக சமச்சீர்க் கல்விகாகத் தொடர்ந்து இவர் மேற்கொண்ட பிரச்சாரம் ஒரு தலைமுறைக்கு இவர் தந்த கொடை.வைகோ

தேர்தல் அரசியலையே தூக்கி வீசிவிட்டு, தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீறுகொண்டு முன் நின்ற வைகோ மீது மரியாதை பெருகி இருக்கிறது. தூத்துக்குடியின் தூய்மைக்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இவர் பற்றவைத்த விசாரணை நெருப்பு இன்னும் தணியவில்லை. பேரறிவாளன், முருகன்,சாந்தன் மீதான தூக்குத் தண்டனையை எதிர்த்து நீதிமன்றங்களில் 'கரும் புலி'யாக உலவினார்.

விடுதலை புலிகளின் மீதான் தடையைத் தகர்க்கவும் இவரே வழக்கறிஞர் ஆனார். முல்லை பெரியாறு பிரச்னையில் எல்லைகளை மறிக்கும் போராட்டத்தில் இவர் குதிததும்தான் கேரளா அரசு மிரண்டது. சட்டமன்றத்தில் கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை. ஆனாலும், அந்த கவலை இல்லாமல் தமிழக நலனுக்காக முழக்கமிட்டு உழைக்கிறார். இலக்கியம், அரசியல், போராட்டம் என சோதனைகளுக்கு நடுவே இவரது இருப்பு மதிப்புக்கு உரியது.


தகவல் மற்றும் நன்றி : விகடன்.

Thursday, December 29, 2011

படம் சொல்லும் சேதி !


தென் கொரியத் தலைநகர் சியோலில் போர் அருங்காட்சியகத்தில் 'உலக மனித உடற்கூறு' கண்காட்சி நடைப்பெற்றது. இறந்த மனித உடலுக்குள் பாகங்களை நீக்கி விட்டு, அதற்குள் பிளாஸ்டிக் திரவத்தைச் செலுத்தி 'பிளாஸ்டினேசன்' என்கிற முறையில் உருவாக்கப்பட்ட உடல்தான் இது.அருங்காட்சியகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்துவதற்க்கு ஏற்ப மொபைல் வாகனத்தை ஏற்பாடு செய்திருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம். இதன் பெயர் 'யுனி - கப்'. பெரிய சக்கரம் மற்றும் நாற்காலி போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இது மின் சக்தியில் ஓடக்கூடியது. அதிகபட்சமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.பார்ப்பதற்கு சிலை போலவே இருக்கும் இது சிலையில்லை. காளை !. சீனாவின் யுனான் மாகாணத்தில் ஜியாங்செங் ஊரில் 'காளைகள் மீது வண்ணம் பூசும் போட்டி' நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற கிராமவாசி ஒருவர் அவர் காளையின் உடல் மீது ஓவியம் தீட்டி பார்வையாளர்கள் முன் அழைத்து வந்த காட்சி.தகவல் : முத்தாரம் இதழ்.

Wednesday, December 28, 2011

முதல் பெண்கள்....


இந்தியாவில் பிறந்த முதல் சோதனைக் குழாய் குழந்தையின் பெயர் ஹர்ஷா செளடா. 1986 ஆகஸ்டு 6 - ல் பிறந்தார்.

இந்தியாவின் முதல் ரயில்வே பெண் ஓட்டுனராக பொறுப்பேற்றவர் சுரேகா யாதவ். ஆண்டு 1991.இந்தியாவின் முதல் உயர்நீதி மன்ற பெண் நீதிபதி அன்னா சாண்டி.

இவர் கேரளா உயர்நீதி மன்றத்தில் 1959 - ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.இந்தியாவின் முதல் பெண் திரைப்பட இசையமைப்பாளர் உஷா கண்ணா.தகவல் : கே.ஜெயலட்சுமி, சி.பரத்.

Tuesday, December 27, 2011

நம்பினால் நம்புங்கள் !

இந்தியாவில் சுமார் 845 மொழிகள் பேசப்படுகின்றன.வாத்துகள் அதிகாலையில் மட்டுமே முட்டை இடும்.844 தீவுகளைக் கொண்டிருக்கிறது பிஜி.இந்தியாவில் தோன்றிய கபடிதான், பங்களாதேசின் தேசிய விளையாட்டு.ஈஸ்டோனியாவில் 75.7 சதவிகிதம் பேர் எந்த மதமும் சாராதவர்கள்.தகவல் : கே.ஜெயலட்சுமி.

Thursday, December 22, 2011

மலையாள நண்பர்கள் கவனத்திற்கு...

நூறு ஆண்டுகளை கடந்த அணைகள் வலு இழந்து விட்டது என பொய் பிரச்சாரம் செய்யும் இந்தக் காலக்கட்டத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்த அணைகள் கூட உள்ளன என்பது எத்தனை பேருக்கு தெரியும். வியப்பின் சரித்திர குறியீடுகள் என்று சொல்லும் அளவிற்கு இன்றும் பயன்பாட்டில் உள்ள சில அணைகளைப் பார்ப்போம்.

கல்லணை


உலகின் பழமையான அணைகளில் ஒன்று கல்லணை.தமிழகத்தில் திருச்சிக்கு அருகே காவிரி ஆற்றின் நடுவே கம்பீரமாக இன்றும் காட்சியளிக்கிறது.

கி.பி.1 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் கரிகால் சோழனால் கட்டப்பட்டது இந்த அணை. சுண்ணாம்புக்கல், கடுக்காய் போன்ற பொருட்களை கலந்து பலமாக கட்டப்பட்டது. இன்று வரை பயன்பாட்டில் உள்ள இந்த அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் பிரிந்து செல்கிறது.


டூ ஜியாங் யான் அணை


சீனாவில் உள்ள டூ ஜியாங் யான் அணையும் பழங்காலத்து அணைகளில் ஒன்று. கி.மு.256 - ல் கட்டப்பட்ட அணை இது. சிச்சுவான் மாகாணத்தில் பாசன வசதிக்காக மின் நதியில் இது கட்டப்பட்டது. இந்த அணையால் 5300 சதுர கிலோ மீட்டர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.


மாரிப் அணை


ஏமன் நாட்டில் உள்ள மிகப் பழமையான அணை மாரிப் அணை. மாரிப் ஆற்றின் குறுக்கே கி.மு. 8 - ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அணை. சுட்ட கற்களால் கட்டப்பட்டது இது. 1986 - ல் இந்த அணை அருகே புதிய அணை கட்டப்பட்டது. ஆனால், இன்றும் கூட இந்த பழைய அணை இடிக்கப்படவில்லை.


கோர்ன்லோவோ அணை


கல்லணையைப் போலவே பழமையான அணை கோர்ன்லோவோ அணை. ஸ்பெயினில் படாஜோஸ் மாகாணத்தில் கி.பி.1 முதல் 2 - ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட அணை. பாசன வசதிக்காக அந்தக் காலத்திலேயே சுண்ணாம்புக்கல், கருங்கல் ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்ட இந்த அணை இப்போதும் பயன்பாட்டில் உள்ளது.தகவல் : டி. கார்த்திக்.

தகவல் களம் !

நீயா - நானாபாம்புகளில் ஆண் பாம்பு, பெண் பாம்பு என அடையாளம் காண வழி இருக்கிறது. பொதுவாக எந்த வகை பாம்பாக இருந்தாலும், அவற்றில் ஆண் பாம்பிற்கு அதன் வால் தடிமனாகவும், பெண் பாம்பிற்கு மெல்லியதாகவும் இருக்கும். இதை வைத்து பாம்புகளை அடையாளம் காணலாம்.


பெட்ரோலே துணை


உலகில் எண்ணெய் வளம் உள்ள நாடுகள் - சவூதி, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட். இவற்றில் தற்போது சவூதி அரேபியாவில்தான் எண்ணெய் இருப்பு அதிகம் உள்ளது. 26420 கோடி பீப்பாய் எண்ணெய். நாளொன்றுக்கு சவூதி அரேபியாவில்1.04 கோடி பீப்பாய் எண்ணெய் உற்பத்தியாகிறது. அதே போல் ஏற்றுமதியிலும் சவூதி அரேபியாவே முதலிடம்.


அஞ்சலும் - அர்த்தமும்


பின் கோட் எனப்படும் அஞ்சல் குறியீட்டு எண்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு அர்த்தம். முதல் இலக்கம் மண்டலத்தை குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தையும், மூன்றாவது இலக்கம் அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தையும், கடைசி மூன்று இலக்கங்கள் அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தையும் குறிக்கும்.
தகவல் : டி. கார்த்திக்.

Wednesday, December 21, 2011

நம்பினால் நம்புங்கள் !


100 மோனார்க் (Monarch) வண்ணத்துப்பூச்சிகளின் மொத்த எடையே ஏறக்குறைய 25 கிராம்தான் இருக்கும்.


கோல்ப் கண்டுபிடிக்கப்பட்ட போது, அது ஆண்கள் மட்டுமே ஆடும் விளையாட்டாகவே இருந்தது.சிலி நாட்டிலுள்ள 'யஹான்' மொழியை ஒரே ஒருவர் மட்டுமே பேசுகிறார்.சீனப் பெருஞ்சுவரின் பெரும்பகுதி சிதைவடைந்து கொண்டிருக்கிறது.அமெரிக்காவில் நடக்கின்ற ஐந்தில் ஒரு விவாகரத்திற்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன.
தகவல் : முத்தாரம் இதழ்.

படம் சொல்லும் சேதி


இங்கிலாந்தில் உள்ள பழமையான அரண்மனைகளில் ஒன்று, பளிங்கு அரண்மனை எனப்படும் கிரிஸ்டல் பேலஸ். 1851 - ல் கட்டப்பட்ட மாளிகை இது. கண்ணாடியால் இழைக்கப்பட்ட மாளிகை இது. 564 மீட்டர் நீளம், 34 மீட்டர் உயரமுடைய இந்த மாளிகையில் 9 லட்சம் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன.


அந்தரத்தில் தண்டவாளத்தில் தொங்கி கொண்டு சுரங்க பாதையில் ஒற்றை தண்டவாளத்தில் செல்லும் இந்த ரயில், மோனோ ரயில். 1964 - ம் ஆண்டு ஜப்பானில் முதன் முதலாக ஓடிய இந்த மோனோ ரயில், தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.


பனை, மரம் என்று தமிழில் அழைக்கப்பட்டாலும், தாவரவியல் ரீதியாக புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமே. இதன் தாவரவியல் பெயர் 'பொராசஸ் பிலபெலி பேரா. பனைகள் பொதுவாக பயிரடப்படுவதில்லை. தாமாகவே வளர்ந்து பெருகுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சி அடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகின்றன. 30 மீட்டர் வரை வளரக் கூடியது.தகவல் : டி.கார்த்திக்.

Tuesday, December 20, 2011

தகவல் துளி !

இந்தியாவில் காது கேளாதவர்களுக்காக உள்ள ஒரே கல்லுரி 'செயின்ட் லூயிஸ் காது கேளாதோர் கல்லூரி' (St. Louis Institute for Deaf & Blind) சென்னை அடையாரில் 1993 செப்டம்பர் 9 - ல் தொடங்கப்பட்டது.தாமிர பரணி ஆற்றின் பழங்காலப் பெயர் 'பொருநை நதி'.பல்கலைக்கழக மானியக் குழுவை (யூ.ஜி.சி) உருவாக்கியவர் அபுல் கலாம் ஆசாத்.


அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை பிரிக்கும் கால்வாயின் பெயர் 'டென் டிகிரி கால்வாய்'.தகவல் : சடையப்பன், சி.பரத்.

Saturday, December 17, 2011

வறுமை நமக்கு தந்த மூலதனம் !

கார்ல் என்ரிச் மார்க்ஸ்

இன்னும் 7 ஆண்டுகள் கடந்தால் கார்ல் மார்க்ஸ் பிறந்து 200 -வது ஆண்டு. 1818 மே மாதம் 5 - ஆம் தேதி பிறந்த கார்ல் என்ரிச் மார்க்ஸ் (Karl Heinrich Marx) இன்றைக்கு ஜெர்மனி என்று அறியப்படுகிற அன்றைய பிரஷ்யா நாட்டில் பிறந்தார். அவர் பிறந்தது ஏழ்மையான குடும்பத்தில் என்றும் சொல்ல முடியாது. மிகப் பெரிய பணக்காரக் குடும்பம் என்றும் சொல்லிவிடமுடியாது. ஆனால், அவருடைய வாழ்க்கை ஏழை-பணக்காரன் என்கிற சிந்தனையிலே ஒரு புதிய மாற்றத்தை இந்த உலகத்திற்கு கொண்டுவந்தது.

எல்லோரும் உலகத்தை விளக்கி கொண்டிருந்த வேளையில், அவர்தான் உலகத்தை மாற்றுவதற்கான சிந்தனையை வெளியிட்டார் என்று சொல்ல வேண்டும். அவர் முதலில் சட்டம், வரலாறு, தத்துவம் என்கிற மூன்று துறைகளிலும் பயின்றார். ஒரு பேராசிரியர் ஆக வேண்டும் என்றே ஆசைப்பட்டார். வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஒரு தொடர் வண்டி துறையில் எழுத்தர் வேலைக்கு போனார். "உன்னுடைய கையெழுத்து சரியில்லை. அதனால், உன்னை வேலைக்கு சேர்த்து கொள்ள முடியாது" என்று சொல்லி விட்டார்கள்.

பிறகு பத்திரிக்கையிலே எழுதினார். ஒரு பத்திரிகைக்கு ஆசிரியரே ஆனார். அந்த பத்திரிக்கை புரட்சிகரமான செய்திகளை வெளியிடுகிறது என்று சொல்லி அவரை நாடு கடத்த வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.

பொதுவாக நாடு கடத்தப்பட்டவர்கள் என்று சொல் உண்டு. கார்ல் மார்க்ஸ் மட்டும்தான் "நாடுகள்" கடத்தப்பட்டார் என்று சொல்ல வேண்டும். அவரை பிரான்ஸ் நாடு கடத்தியது. அவர் பிறந்த பிரஷ்யா கடத்தியது.

1849 - வது ஆண்டு அவர் லண்டனுக்கு வந்து சேர்ந்தார். இறுதி காலம் வரை லண்டனில்தான் வாழ்ந்தார் எனபதை விட, தன் இறுதி காலம் வரை லண்டனில் வறுமையில்தான் வாழ்ந்தார் என்று குறிப்பிட வேண்டும். லண்டனில் இருந்துதான் தன் அறிவு கதிர்களைப் பரப்பினார் என்று சொல்லலாம்.

நான் ஒரு முறை லண்டனுக்கு பயணம் செல்ல நேர்ந்த போது, அங்கு விமான நிலையத்தில் கேட்டார்கள், "நீங்கள் லண்டனில் எங்கெல்லாம் சுற்றிப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள் ?" என கேட்ட போது, "பல இடங்கள் உள்ளன" என்றேன்.

"அரண்மனையை சுற்றிப் பார்க்கிறீர்களா ?" என கேட்கும் போது,

"அரண்மனையையும் சுற்றி பார்க்க வேண்டும், அதோடு மட்டுமில்லாமல், முக்கியமாக ஒரு கல்லறையை பார்க்க வேண்டும் " என்று சொன்னேன்.


கார்ல் மார்க்ஸின் கல்லறை

அது ஹைகேட் என்கிற இடத்தில் உள்ள கார்ல் மார்க்ஸின் உடைய கல்லறை. மேலும், அவருடைய காதலியான துணைவியார் ஜென்னியினுடைய கல்லறை மற்றும் அவருடைய குழந்தை எஸ்தருடைய கல்லறை, இன்னொரு பக்கத்திலே மேலும் இரண்டு குழந்தைகளின் கல்லறை என 5 கல்லறைகள் அந்த இடத்திலே உள்ளன.

லண்டனுக்கு போய் சேர்ந்த மறு ஆண்டே அவர்கள் தங்கள் முதல் குழந்தையை இழந்து போனார்கள். 1852 - ல் இன்னொரு பெண் குழந்தையையும் இழந்து போனார்கள். காய்ச்சலிலே அவதியுற்ற அந்த குழந்தையை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.

ஒரு நண்பருக்கு ஜென்னிமார்க்ஸ் கடிதம் எழுதுகிறார் "அந்தக் குழந்தைப் பிறந்த போது தொட்டில் வாங்குவதற்கும் எங்களிடம் பணம் இல்லை. அது இறந்தபோதும் சவப்பெட்டி வாங்குவதற்கும் பணம் இருந்ததில்லை" என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

உலகில் அறிவார்ந்த செல்வர்களை உருவாக்கியவரின் குடும்பம் மிக கொடிய வறுமையில் வாழ்ந்து இருக்கிறது என்பதைத்தான் அக்கடிதம் நமக்கு உணர்த்துகிறது.


கார்ல் மார்க்ஸ் - ஜென்னி

ஒருமுறை மார்க்ஸிடம் வேடிக்கையாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. "உங்களுக்கு இன்னொரு பிறவி என்று இருந்தால் என்ன செய்து கொண்டு இருப்பீர்கள்" என கேட்ட பொழுது, "இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறேனோ, அதைதான் அப்போதும் செய்து கொண்டு இருப்பேன், திருமணம் செய்வதை தவிர" என்று குறிப்பிட்டார்.

இதனால், அவருக்கு திருமணத்தின் மீது வெறுப்போ, தன் துணைவி ஜென்னியின் மீது வெறுப்போ என்பதாக அர்த்தம் இல்லை. இன்னொரு பிறவி என்று ஒன்று இருந்தால், அதிலாவது தன் அன்புக்குரிய காதலி ஜென்னியையும், குழந்தைகளையும் துன்பபடுத்த வேண்டாம் என்று எண்ணித்தான் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

தொடக்கத்திலே, கார்ல் மார்க்ஸ் ஹெகல் (Hegel) என்கிற தத்துவ ஞானியின் மாணவராக இருந்தார். அவருடைய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டு தன் கருத்துக்களை வெளிப்படுத்த ஆரம்பித்தார். மூன்று துறைகளிலும் பட்டம் பெற்ற கார்ல் மார்க்ஸ் பொருளாதாரத் துறையிலும் பல நூல்களைக் கற்றார். அவ்வாறு அவர் கற்றதன் பயனாக நமக்கு மூலதனம் என்கிற பொருளாதார நூல் கிடைத்தது.

ஹெகல்

எனவே நான்கு துறைகளில் வல்லுனராக இந்த கார்ல் மார்க்ஸ் ஹெகலின் மாணவராக இருந்தார். ஹெகல் அடிப்படையில் ஒரு கருத்து முதல் வாதி. கருத்து முதல் வாதி என்றால் ஆன்மீக வாதி என்று எளிமையாக குறிப்பிடலாம்.

ஆனால், பிற்காலத்தில் கருத்து முதல் வாதியாக இருந்த கார்ல் மார்க்ஸ், பொருள் முதல்வாதியாக மாறினார்.


பயர்பாக்

பொருள் முதல் வாதம் என்பது ஒரு பகுத்தறிவு வாதம் என்றும் எளிதாக புரிந்து கொள்ளலாம். அதற்கு காரணமாக இருந்தாவர் பயர்பாக் (Feuerbach). அவருடைய புத்தங்களை படித்த பிறகுதான் ஹெகலியனாக இருந்தாலும் கூட, அந்த கருத்து முதல் வாதத்தில் இருந்து மாறுபட்டு, ஒரு பொருள் முதல் வாதி என்கிற சிந்தனைக்கு வந்து சேர்ந்தார்.

அவர் பிரான்ஸ் நாட்டில்தான் முதல்முறையாக எங்கல்சை (Engels) சந்தித்தார். அப்போது அறிமுகமாகிய அந்த நட்பு, ஆயுட்கால நட்பாக மாறியது. எங்கல்ஸ் என்கிற ஒரே ஒரு நண்பணை, ஒரே ஒரு மனிதனை சந்தித்திருக்கவிட்டால், கார்ல் மார்க்ஸை வறுமை எனும் கொடிய நோய் முன்பே கொன்றிருக்கும். எனவே வறுமையிலிருந்து அவரை மீட்டு, இந்த சமூகத்துக்கு நன்மைகளை கொண்டு வந்ததில் எங்கல்ஸ் எனும் மாமனிதனின் பங்கு அளப்பரியது.

எங்கல்ஸ்

கார்ல் மார்க்ஸும், எங்கல்சும் சேர்ந்து 1848 - ல் கம்யூனிஸ்ட் அறிக்கையை - பொதுவுடமைக் கட்சியின் அறிக்கையை தந்தார்கள். மார்க்ஸ் ஒரு கடிதத்தில் குறிப்பிடுகிறார் "நான் துன்பத்தை அனுபவித்து இருக்கிறேன். நான் கொஞ்சி விளையாடிய என் குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாக இறந்த போது, துன்பத்தின் அடி ஆழத்தை உணர்ந்தேன்.

ஆனாலும் இன்னமும் கூட, நான் உயிர் வாழ வேண்டும் என்று கருதுவது கூட, இந்த சமூகத்திற்கு நாம் இரண்டு பெரும் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன என்கிற எண்ணமும், அதற்கு உன் உதவி இருக்கும்" என்று எழுதுகிறார்.


ஆக, இன்றும் கூட பல பேர் கம்யூனிசம் இறந்து விட்டது என்று கூறுவதுண்டு, எங்கெல்லாம் ஒரு மனிதன் துன்பபடுகிறானோ, எங்கெல்லாம் தொழிலாளர்கள் துன்பபடுகிறார்களோ அங்கெல்லாம், அடிமை விலங்கை ஒடிக்க கார்ல் மார்க்ஸ் - எங்கல்ஸ் எனும் மாமனிதர்களின் சிந்தனைகள் பிறக்கும்.
நன்றி :

நூல் : ஒன்றே சொல் ! நன்றே சொல் !
- பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.


Wednesday, December 14, 2011

தகவல் களம் !

தேன் சிந்தும் எறும்பு


பொதுவாக எறும்புகள் பூமிக்கு அடியில் கூடுகள், புற்றுகள் கட்டிக் கொள்கின்றன. சிலவகை எறும்புகள் மட்டும் உயர்ந்த மரங்களில் புற்று கட்டி வாழ்கின்றன. இவற்றில் சற்று வித்தியாசமாக தேன் எறும்புகள் என அழைக்கப்படும் எறும்புகள் தங்கள் வயிற்றிலேயே தேன் போன்ற பொருள்களைச் சேமித்து வைக்கின்றன.

இதனால் இவற்றின் வயிறு பருத்து தேன் குடமாகக் காட்சியளிகின்றன. தேன் கிடைக்காத காலங்களில், வாய் வழியே தேனைத் துப்பி மற்ற எறும்புகளுக்குக் கொடுக்கும்.

சுறுசுறுப்பு மன்னன்


மாவீரன் நெப்போலியன் தான் பயன்படுத்தும் பொருட்களில், குறிப்பாக தன்னுடைய சிம்மாசனம் உள்பட அனைத்திலும் தேனீ உருவத்தை பொறித்திருந்தார்.

கணினி மயம்


பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள 'பிரிட்டிஷ் நூலகம்' தங்களிடம் உள்ள பழமையான தினசரிகளை சேகரித்து அவற்றை, கணினி மயமாக்கி வருகின்றனர்.

குறிப்பாக 18 - ம், 19 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த தினசரிகள் இதில் அடங்கும். இதன் மூலம் இந்த பழமையான தினசரிகளை இணையதளம் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம். சுமார் 40 லட்சம் பக்கங்களை கணினி மயமாக்கிவிட்டர்கள். அடுத்த பத்தாண்டில் 4 கோடி பக்கங்களை இணையத்தில் பதிவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

தலைகீழ் கட்டிடம்நாம் வசிக்கும் கட்டிடம் தலைகீழாக இருந்தால் எப்படி இருக்கும். கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். அந்த திகிலை டெல்லியைச் சேர்ந்த ஏ.பி.ஏ கட்டிட நிறுவனம் உண்மையாக்கியுள்ளது. இந்நிறுவனம் கட்டியுள்ள 'கார்செல்லா கேளிக்கை விடுதி' தலைகீழாகக் கட்டப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றம் மட்டுமே தலைகீழாக கட்டப்பட்டுள்ளது. உட்புறம் வழக்கமான முறையில் பல அறைகள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ரோமானிய கட்டிட தொழில் நுட்பத்தைப் பயன்ப்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த கேளிக்கை விடுதி, உலகிலேயே மூன்றாவதாக கட்டப்பட்டுள்ள தலைகீழ் கட்டிடமாகும்.தகவல் : ப்ரியா.

Tuesday, December 13, 2011

நம்பினால் நம்புங்கள் !


இந்தியாவில் விமானங்கள் ரத்தாவதால் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 12 ஆயிரம் பயணிகளுக்கு மேல் பாதிக்கப்படுகிறார்கள்.

யூ டியூப் இணைய தளத்தில் ஒவ்வொரு நிமிடமும் 24 மணிநேர நீளம் கொண்ட காணொளிகள் சேர்க்கப்படுகின்றன.மருத்துவ அலட்சியம் காரணமாக ஏற்பட்ட இழப்புக்கு, இந்தியாவில் வழங்கப்பட்ட அதிகபட்ச நிவாரணத் தொகை ரூ.1.7 கோடி.சிங்கம் சராசரியாக தினமும் 20 மணிநேரம் உறங்குகிறது.
தகவல் : முத்தாரம் இதழ்.

கொஞ்சம் தமிழும் - கொஞ்சம் தகவலும் !

எமப்பூட்டு - துமிக்கி

எமப்பூட்டு, துமிக்கி என சொல்லப்படுவது எது தெரியுமா ?

துப்பாக்கி! அதே போல் குண்டு குழாய் என்றால் பீரங்கி. சுழலி என்றால் ரிவால்வர். இப்படி தூய தமிழ் சொற்களை நமக்கு உருவாக்கி தந்தவர் 'மொழி ஞாயிறு' தேவநேயப் பாவாணர்.

ஓலை சுவடி


சங்க கால ஓலை சுவடிகளில் வார்த்தைகள் இடைவெளியின்றி தொடர்ந்து வரும். புள்ளி, புள்ளி எழுத்துகளும் இருக்காது. அவ்வாறு ஒரு வார்த்தைக்கு இடம் விட்டு, அடுத்த வார்த்தை எழுதும்போதோ, க், ச் போன்ற புள்ளி எழுத்துகள் எழுதும்போதோ, எழுத்தாணி ஓலையில் ஓட்டையிட்டு,
சேதப்படுத்திவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.

ஆனால், தற்போது நடைமுறை உள்ள தமிழ் வாக்கியங்களிடையே கமா,கோலன், செமி கோலன் போன்ற குறியீடுகளை அறிமுகப்படுத்தியவர் வீரமா முனிவர் என அறியப்படுகிற ஜி.யூ.போப்.

முதன் முதலாக


தமிழில் வெளிவந்த முதல் பத்திரிக்கை 'தமிழ் இதழ்' (1831).

தமிழில் வெளிவந்த முதல் வாரப்பத்திரிக்கை 'தின வர்த்தினி' (1856).

தமிழில் வெளிவந்த முதல் மாத இதழ் 'ஜன விநோதினி' (1870).

தமிழில் வெளிவந்த முதல் வரலாறு நாவல் 'மோகனாங்கி' (1875).தகவல் : சி.பரத், கே.ஜெயலட்சுமி, ராஜசேகர், வித்யுத்.