Tuesday, September 6, 2011

உயிரினங்கள் பலவிதம் ! ஒவ்வொன்றும் ஒருவிதம் !

எறும்புகள்
எறும்புகள் மோப்ப சக்தியை இழந்துவிட்டால் இறந்துவிடும்.

எறும்புகள் தன் எடையைவிட 50 மடங்கு எடையை தூக்க முடியும்.

பிரிந்து போன எறும்பு ஒன்று 6 மாதம் கழித்து வந்தாலும், மற்ற எறும்புகள் அதனை அடையாளம் கண்டுகொள்ளும்.


பட்டுப் பூச்சி


ஒரு பட்டுப்பூச்சியில் 1000 மீட்டர் நீள பட்டு உற்பத்தி செய்ய முடியும்.


தேனீக்கள்



ஒரு கிலோ எடை கொண்ட தேனை சேகரீக்க தேனீக்கள் 6.68 லட்சம் பூக்களைச் சந்திக்கின்றன.

தேனீ ஒரு செய்தியை தன் இனத்தில் உள்ள மற்றொரு தேனீயிடம் 8 என்ற எண் வடிவத்தில் நடனமாடித் தெரிவிக்கிறது.


மின்மினிப் பூச்சிகள்


40 மின்மினிப் பூச்சிகள் சேர்ந்தால் ஒரு மெழுகுவர்த்தியின் ஒளி கிடைக்கும்.

புயல் வருவதற்கு முன் மின்மினிப்பூச்சிகள் அதிகமாக ஒளிவிடும்.


தகவல் :ஜோ. ஏசுதாஸ், திண்டுக்கல்.

சொல்வனம்


நாம் ஒவ்வொருவரும் தனக்குத் தானே தலைவனாக இருக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். நீயே உனக்கு தலைவனாக முடியா விட்டால் வேறு யார் தலைவனாக இருக்க முடியும்?

[புத்தர்].

நன்றி : தோழர் தமிழச்சி

Monday, September 5, 2011

அதென்ன பனானா ?


வாழைப்பழம் முதலில் தோன்றியது ஆசியாவில்தான். கி.மு.327ல் அலெக்ஸாண்டர் இந்தியாவுக்கு படையெடுத்து வந்தபோது வாழைப்பழத்தை விரும்பி சாப்பிட்டிருக்கிறார்.

திரும்பி போகும்போது கிரேக்க நாட்டிலும் மேற்கு ஆசியா மற்றும் மேலை நாடுகளிலும் வாழைப்பழத்தை அறிமுகப்படுத்திவிட்டு அவர் சென்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அரேபியாவில் வாழைப்பழம் விற்பனைக்கு வந்தபோது பெரிய அளவில் விரல் போன்று வாழைப்பழம் இருந்ததால், அதை 'விரல்' என்றே அழைத்தார்கள். விரல் என்றால் அரபி மொழியில் 'பனானா' என்று அர்த்தம்.

நாளடைவில் ஆங்கிலத்திலும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டு, இன்று உலகெங்கும் 'பனானா' என்றே அழைக்கப்படுகிறது.


தகவல் : முத்தாரம்.

நம்பினால் நம்புங்கள் !


பிரான்ஸ் நாட்டில் சட்டப்படி இறந்து போனவரைக் கூட திருமணம் செய்து கொள்ள முடியும்.

கலர் சேர்க்கப்படாவிட்டால் கோலா பானம் பச்சை நிறத்தில்தான் இருக்கும்.

நம் உடல் ரத்தத்தை ஒரு முறை சுத்தம் செய்ய சிறுநீரகத்திற்க்கு வெறும் நான்கு நிமிடம் போதுமானது.


பார்வையற்றவரான லூயி ப்ரெய்லி தன் 15 வயதிலேயே ப்ரெய்லி எழுத்துமுறையை கண்டுபிடித்துவிட்டார்.


காந்தி திரைப்படத்தில் மொத்தம் 3 லட்சம் துணை நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Saturday, September 3, 2011

தகவல் பேழை !






நாடக மாமேதை பெர்னாட்ஷாவின் எந்த ஒரு நாடகங்களிலும் காதல் இருந்ததில்லை.



"வயலின்" இசைக் கருவிகளின் இளவரசி என்றழைக்கப்படுகிறது.



ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.


முதலை இறக்கும் வரை வளர்ந்துகொண்டே இருக்கும்.



கையெழுத்துகளையும், எழுதுபவர்களின் குணாதிசயங்களையும் பற்றி படிக்கும் படிப்பிற்கு "கிரோபோலாஜி" என்று பெயர்.



இலங்கையில் அனாதை யானைகள் பின்னவள யானைகள் அனாதை மடத்தில் பராமரிக்கப்படுகின்றன. இது 1975ல் அமைக்கப்பட்டது. (தமிழர்கள் ??....)


தகவல் : செய்யாறு ராஜசேகர், முக்கிமலை நஞ்சன்.

Friday, September 2, 2011

சொல் முக்கியமா, செயல் முக்கியமா ?



"இரண்டும்தான். சமயங்களில் ஒரு சொல், செயலைவிட வீரியமானதாகிவிடுகிறது. சாதகமாகவோ, பாதகமாகவோ !

அதனால்தான் 'ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒர் அரசியல் இருக்கிறது' என்றார் கார்ல் மார்க்ஸ்.

சமீபத்திய உதாரணம் ஒன்று, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளவன் உள்ளிட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று தங்கபாலு பேட்டி அளித்தார்.

அப்போது 'ராஜீவ் கொலையாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்கிறீர்கள். ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்த ராஜபக்சேவுக்கு இந்தியாவில் காங்கிரஸ் வரவேற்பு கொடுக்கிறதே ?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தங்கபாலு அளித்த பதில்,

'இலங்கை வன்முறையை காங்கிரஸூம் கண்டித்து உள்ளது. எங்கு படுகொலை நடந்தாலும் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கும்;.

நன்றாக கவனியுங்கள், இலங்கையில் நடந்தது வெறும் 'வன்முறை' மட்டும்தானாம்.

ஆனால், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதோ 'படுகொலை'யாம். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை 'வன்முறை' என்று சுருக்கும் சொல்லும் வன்முறையானதுதானே ?"



தகவல் : ஆதிரை, காயல்பட்டினம்.

Thursday, September 1, 2011

நம்பினால் நம்புங்கள் !


ஸ்பானிஷ் மொழியில் "Wife" என்ற வார்த்தைக்கு 'கைவிலங்கு' என்ற பொருளும் உண்டு.




ஒட்டகச் சிவிங்கி நாள் ஒன்றுக்கு 30 நிமிடமே உறங்கும்.



இந்தியாவில் திரையரங்குகள் அதிகமுள்ள மாநிலம் ஆந்திர பிரதேசம்தான்.


அமெரிக்காவில் ஒரு லட்சத்தை நூறு ஆயிரம் என்றே அழைக்கிறார்கள்.