Tuesday, November 15, 2011

சொல் வனம் !


"வறுமையிலும் அறியாமையிலும் வாடும் தம் சகோதரர்களுக்குப் பணிசெய்வது கற்றவர் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். கற்றறிந்த இவர் ஒரு உன்னதமான நிலையை அடைந்ததும் கல்வி அறிவு அற்ற தம் சகோதரர்களை மறந்துவிடுகிறார். ஆயிரக்கணக்கான தம் சகோதரர்கள் பால் இவர் அக்கறை கொள்ளாவிட்டால் அச்செயல் நம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு வழிக்கோலும்."


- டாக்டர் பாபாசாஹெப் அம்பேத்கர்.



நன்றி : தமிழச்சி பெரியார்.

Monday, November 14, 2011

தகவல் களம் !

ஆஸ்கார் நாயகன் வாரன் பெட்டி

ஒரே படத்துக்காக சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதையாசிரியர், சிறந்த தயாரிப்பாளர் என நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கார் பரிசுகள் பெற்ற ஒரே மனிதர் வாரன் பெட்டி (Warren Beatty). படம் : ஹெவன் கேன் வெயிட்.
ஆண்டு : 1978.



இவர் இதே போல மீண்டும் இதே நான்கு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். 1981 ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவர் சாதனையை இது வரை வேறு யாரும் முறியடிக்கவில்லை.


விடுமுறை

பொதுவாக ஞாயிறுக் கிழமைதான் வார விடுமுறை என்றாலும் சில நாடுகளில் வேறு கிழமைகளிலும் விடுமுறை விடப்படுகின்றன.


கீரிஸ் - திங்கட் கிழமை, சிரியா - புதன் கிழமை, எகிப்து - வியாழக் கிழமை, ஐக்கிய அரபு நாடுகள் - வெள்ளிக் கிழமை, இஸ்ரேல் - சனிக் கிழமை.



'மாஃபியா' வார்த்தை பிறந்த விதம்


19 - ம் நூற்றண்டில் இத்தாலியின் வசம் இருந்தது சிசிலி தீவு. இதன் பிறகு பிரஞ்சுக்காரர்களின் வசம் வந்தது இத்தீவு.

இத்தாலியர்கள், பிரஞ்சுக்காரர்களின் பிடியிலிருந்து சிசிலி தீவை மீட்க ஒரு தீவிரவாத அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பே 'மாஃபியா' என்று அழைக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு கோஸா நோஸ்ட்ரா(Cosa Nostra) அல்லது கருங்கைகள் என்ற பெயரும் உண்டு.


தகவல் : முக்கிமலை நஞ்சன்.

Wednesday, November 9, 2011

நம்பினால் நம்புங்கள் !


2000 ஆண்டுகளுக்கு முன் சீன சமையல் கலைஞரால் கண்டுபிடிக்கப்பட்டதே தீக்குச்சி.




உலக அளவில் ஆண் ஓட்டுனர்களை விட பெண் ஓட்டுனர்களே மிகவும் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுகிறார்கள்.




அமெரிக்காவின் வேறெந்த மாகாணத்தைவிடவும் அலாஸ்காவில் உள்ளவர்கள் அதிக அளவில் நடந்தே வேலைக்கு செல்கிறார்கள்.





முள்ளம் பன்றிகளால் நீரில் மிதக்க முடியும்.



தகவல் : முத்தாரம் இதழ்

காற்றிலிருந்து நீரைப் பிழிந்து பயிர்களுக்கு நீர்ப்பாசனம்

ஆஸ்திரேலிய இளைஞர் உருவாக்கியுள்ள ஏற்பாட்டில்
வேர்களுக்கே நேரடியாக நீர் கிடைக்கிற்து


பாலைவனத்திலும் இனி செடிகளை வளர்ப்பது சாத்தியமாகலாம். ஆஸ்திரேலிய இளைஞர் செய்துள்ள கண்டுபிடிப்பு நடைமுறைக்கு வந்தால் காற்றில் அடங்கிய நீர்ப்பசையை நீராக மாற்றி தாவரங்களுக்கு நீர் பாய்ச்ச முடியும். இந்த கண்டுபிடிப்புக்காக அவருக்கு ரூ 7,30,000 பரிசு கிடைத்துள்ளது. அந்த மாண்வரின் பெயர் எட்வர்ட் லினாக்ரே.

ஆப்பிரிக்காவில் நமீபியா என்ற நாட்டில் பெரிய பாலைவனம் உள்ளது. அப்பாலைவனத்தில் காணப்படும் ஒரு வண்டு (Stenocara gracilipes ) மூலம் லினாக்ரே தமது கண்டுபிடிப்புக்கு ஐடியா பெற்றார்.இந்த வண்டின் முதுகு விசேஷ அமைப்பைப் பெற்றுள்ளது. அட்லாண்டிக் கடலிலிருந்து ஈரபபசை கொண்ட காற்று பாலைவனத்தை நோக்கி வீசும்

இந்த வண்டின் முதுகு மீது அமைந்த நுண்ணிய பகுதிகள் காற்றில் அடங்கிய ஈரப்பசையை ஈர்த்து அதை நுண்ணிய நீர்த்துணுக்குகளாக மாற்றும். அந்த நீர் துணுக்குகள் பின்னர் நுண்ணிய வரிப் பள்ளங்கள் வழியே வண்டின் வாய்ப் பகுதிக்குச் செல்லும். வண்டு இவ்விதமாகக் கிடைக்கும் நீரை அருந்தும். சுருங்க்ச் சொன்னால் காற்றில் அடங்கிய ஈரப் பசையை நீராக மாற்றும் திறன் அந்த வண்டுக்கு இருக்கிறது.

நமீபியா பாலைவனத்து வண்டு

உங்களாலும் காற்றில் உள்ள ஈரப்பசையை நீராக மாற்றிக் காட்ட முடியும். ஒரு கண்ணாடித் தம்ளரை எடுத்து சற்றும் ஈரப் பசை இல்லாமல் நன்கு துடைக்கவும். அதை ஒரு மேஜையில் வைத்து விட்டு அதனுள் சில ஐஸ் கட்டிகளைப் போடவும்.

சற்று நேரம் கழித்துப் பார்த்தால் தம்ளரின் வெளிப்புறத்தில் நீர்த் துணுக்குகள் காணப்படும். அத்துணுக்குகள் சேர்ந்து நீராக மாறி தம்ளரைச் சுற்றி நீர் காணப்படும். ஐஸ் கட்டி காரணமாக தம்ளரின் வெளிப்புறம் குளிர்ச்சி அடையும் போது தம்ளரின் வெளிப்புறத்தில் படும் காற்றில் உள்ள ஈரப்பசை நீராக மாறுகிறது.

காற்றில் உள்ள ஈரப் பசையை நீராக மாற்றும் தொழில் நுட்பம் புதிது அல்ல. இந்தியாவிலும் சரி, அலுவலகங்கள், ஆஸ்பத்திரிகள் ஆகியவற்றில் இத்தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நீர் வழங்கும் யூனிட்டுகளைக் காணலாம். நமிபியப் பாலைவன வண்டு செயல்படும் பாணியில் ஈரப்பசையை நீராக மாற்ற அமெரிக்காவிலும் ஒரு ஆராய்ச்சி நடைபெற்று வந்துள்ளது என்றாலும் அது மிக சிக்கலானது. அந்த முறையில அவ்வளவாக வெற்றி கிட்டவில்லை.

எட்வர்ட் லினாக்ரே

ஆனால் லினாக்ரே உருவாக்கியுள்ள தொழில் நுட்பம் செலவு குறைந்தது. கிராமப்புற மக்கள் பயன்படுத்தக்கூடியது. செடி, கொடிகளுக்குப் பாசன வசதியை அளிப்பது. இயற்கையை ஒட்டி அமைந்தது.

ஆஸ்திரேலியாவில் மர்ரே டார்லிங் எனப்படும் பகுதியில் தொடர்ந்து 12 ஆண்டுகளாகக் கடும் வறட்சி நிலவி விவசாயம் படுத்தது. கடன் சுமை தாங்காமல் விவசாயிகள் தற்கொலையில் ஈடுபட்டனர். வாரம் ஒரு விவசாயி தற்கொலை என்ற பரிதாப் நிலை தோன்றியது. இப்படியான நிலைமைக்குத் தீர்வு காண ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் உந்தப்பட்டு லினாக்ரே தமது இந்தக் கண்டுபிடிப்பை உருவாக்கினார்.

அவர் உருவாக்கிய ஏற்பாட்டில் ஒரு யந்திரம் (டர்பைன்) காற்றை உறிஞ்சி அதைக் குழாய்கள் வழியே நிலத்துக்கு அடியில் கொண்டு செல்கிறது. நிலத்துக்கு அடியில் பல குழாய்கள் இருக்கும். அங்கு காற்று குளிர்ந்து காற்றில் உள்ள ஈரப்பசை நீராக மாறும். இந்த நீர் நிலத்துக்கு அடியில் உள்ள தொட்டியில் போய்ச் சேரும். தொட்டிக்குள் அமைந்த மோட்டார் இயங்கும் போது அந்த் நீர் சிறு சிறு குழாய்கள் மூலம் செடிகளின் வேர்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது.

காற்றை உறிஞ்சும் டர்பைன் இயங்குவதற்கு வெளி மின்சார இணைப்பு தேவையில்லை.சூரிய ஒளிப் பலகைகள் வெயிலை மின்சாரமாக மாற்றித் தருகின்றன. இந்த டர்பைன் கடும் காற்றிலும் செயல்படக்கூடியது. காற்று மெல்ல வீசினால் பாட்டரிகள் மூலமும் மின்சாரத்தைப் பெற முடியும். நிலத்துக்கு அடியில் தொட்டிக்குள் சிறு மிதவை உண்டு.தொட்டியில் தண்ணீர் மட்டம் குறைந்தால் பம்பு தானாக செயல்படாமல் நின்று விட இந்த மிதவை உதவுகிறது.
லினாக்ரே விவசாயிகளுக்கான கருவிகளை உருவாக்கும் நிறுவனங்கள், விவசாயிகள் ஆகியோருடன் அந்தந்தக் கட்டத்தில் கலந்தாலோசித்து தான் தமது கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளார். வீட்டைச் சுற்றி தமது தாய் போட்டிருந்த தோட்டத்தில் இதைப் பயன்படுத்தி சோதித்தார். ஆகவே இது நடைமுறையில் பயன்படுத்தத்தக்க ஒன்றாக உள்ளது. அவர் தமது இந்த்க் கண்டுபிடிப்பை Airdrop Irrigation system என்று குறிப்பிடுகிறார். இந்த ஏறபாடானது சொட்டு நீர்ப் பாசனத்தை விட ஒரு படி மேலானது. அதாவ்து இது நேரடியாக வேர்களுக்கே நீரை அளிக்கிறது.

இந்தியாவில் பாசன வசதியில்லாத் நிலங்கள் எவ்வளவோ உள்ளன. இக்கருவியின் விலை கட்டுபடியாகக் கூடியதாக இருக்குமானால் இந்திய விவசாயிகளும் காய்கறி சாகுபடி போன்றவற்றுக்கு இதைப் பயன்படுத்த இயலும். ஆனால் இக்கருவி வர்த்தக ரீதியில் பெரும் எண்ணிக்கையில் உற்பத்தி செயயப்படுவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம்.

லினாக்ரே ஆஸ்திரேலியாவில் மெல்போர்ன் நகரில் உள்ள ஸ்வின்பர்ன் தொழில் நுட்பப் பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற மாணவர். இப்பல்கலைக் கழகம் ஆஸ்திரேலியாவின் பிரபல பல்கலைக் கழகமாகும். இதில் இந்திய மாணவர்கள் பலரும் படிக்கிறார்கள்.

இங்கிலாந்தைச் சேர்ந்த கோடீசுவரர் ஜேம்ஸ் டைசன் டிசைன் எஞ்சினியரிங் படிக்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அறக்கட்டளை ஒன்றை 2002 ஆம் ஆண்டில் நிறுவினார். அந்த அறக்கட்டளை புதிய கண்டுபிடிப்புகளைச் செய்யும் டிசைன் எஞ்சினியரிங் மாணவர்களுக்கு பரிசுகளை அளிக்கிறது. லினாக்ரேவுக்கான பரிசு ந்வம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அவர் படிக்கும் பல்கலையின் டிசைன் எஞ்சினியரிங் துறைக்கும் அதே அளவிலான தொகை பரிசாகக் கிடைக்கும்.

லினாக்ரேக்கு பரிசு கிடைத்ததைத் தொடர்ந்து உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் அவருடன் தொடர்பு கொண்டுள்ளன.



நன்றி : அறிவியல்புரம் வலைப்பூ.
(http://tamil-science.blogspot.com)

சயாமீஸ் இரட்டையர்


ஒட்டிப் பிறக்கும் இரட்டையரைத் தான் 'சயாமீஸ் இரட்டையர்' என்கின்றனர்.

19 - ம் நூற்றாண்டில் இருந்துதான் இந்த பெயர் வந்தது.

தாய்லாந்து நாட்டின் முன்னாள் பெயர்தான் சயாம். இங்கு 1811 - ல் சாங், இங் என்ற ஆண் குழந்தைகள் ஒட்டி பிறந்தன. இதில் இருந்து ஓட்டிப் பிறக்கும் குழந்தைகளுக்கு 'சயாமீஸ் இரட்டையர்' என்ற பெயர் வந்து விட்டது.

இரட்டையர்களாக பிறப்பது ஒரு அரிய நிகழ்வுதான். 25 ஆயிரம் குழந்தைகளுக்கு ஒன்றுதான் இப்படியாக பிற
க்கின்றனர்.

தாயின் ஒரு முட்டையின் கருவில் உருவாவதால் பால், தோற்றம் என்று எல்ல விசயங்களிலும் ஒரே மாதிரியான ஒற்றுமை காணப்படுகிறது. இதனால், இவர்களின் வாழ்கையில் சில அதிசய சம்பவங்கள் நடந்து விடுகின்றன.

வட அமெரிக்காவுக்கு சென்ற சாங், இங் இருவரும் அங்கேயே இரட்டைச் சகோதரிகளைத் திருமணம் செய்து கொண்டனர். அதேபோல், இருவரும் 1874 - ல் தான் காலமானார்கள். இது போன்ற இரட்டையர்களின் வாழ்வில் ஏராளமான சம்பவங்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காணலாம்.




தகவல் : தினத்தந்தி

Tuesday, November 8, 2011

அவ்வளவுதான் நண்பர்களே !


அவ்வளவுதான் நண்பர்களே...
நீங்கள் திகைப்புறும்படியாக
ஏதும் நடந்துவிடவில்லை
வெண்மணியில் ஒரு குடிசை
சில உயிர்கள் தகனம்...
உத்தப்புரத்தில் ஒரு சுவரில்
ஒரு கிராமம் துண்டிப்பு...
பரமக்குடியில் ஏழு தலித்துகள்
(தலா ஒரு லட்சம் பெறுமதியானவர்கள்)
குண்டந்தடியில்
சிதைந்த தலைகள்
சில லிட்டர் குருதி
அவ்வளவுதான்

வீதிகள் கழுவிவிடப்பட்டாயிற்று
நூற்றாண்டுகளுக்கு பிறகு
அணிய அனுமதிக்கப்பட்ட
காலணிகளும் துண்டுகளும்
லத்திக் கம்புகளால் சேகரிக்கப்பட்டு
எரியூட்டப்பட்டாயிற்று
அவ்வளவுதான்

சாதிக் கொழுப்பூற்றி வார்க்கப்பட்ட
துப்பாக்கிச் சன்னங்களும்
தண்ணீரிலும் அடர்த்தி குறைந்த
கறுப்புக் குருதியும்
சந்தித்துக் கொண்டன
அவ்வளவுதான்

நீங்கள் வருத்தப்பட வேண்டாம்
கழுவிவிடப்பட்ட வீதிகளில்
ஒரு துளிக் கறையுமில்லை.
இனியென்ன...
திண்ணியத்தில் திணிக்கப்பட்ட
மலம் போலும் வாசனை பரத்தும்
'தீர்ப்பு'கள் நாளையும் வரும்
அவ்வளவுதான் நண்பர்களே
அவ்வளவுதான் !


--- கவிஞர் தமிழ்நதி.


கவிஞர் தமிழ்நதி.


நன்றி - விகடன்

சற்றே.... சின்ன தகவல்கள்.



கிரகங்களில் வாழும் உயிரினங்கள் பற்றிய படிப்புக்கு எக்ஸ்பயாலஜி (Exobiology) என்று பெயர்.




தமிழில் படம் வருவதற்கு முன் முன்னோட்டம் (Trailer) எடுத்து திரையரங்கில் காட்டுவது 'திரும்பிப்பார்' படத்தின் மூலம் ஆரம்பமாயிற்று.



தமிழகத்தின் முதல் மகளிர் பல்கலைக்கழகம் அன்னை தெரசா பல்கலைக்கழகம் ஆகும்.




கிரேக்க மொழியில் இருந்து உருவானதுதான் ரஷ்ய மொழி.




புளூட்டோ கிரகம் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு கி.பி.1630 .






தகவல் : சி. பரத், சென்னை.