
தெற்கு பிரான்சில் இருக்கும் மென்டன் நகரில் அறுவடை நேரத்தில் நடக்கும் 'எலுமிச்சை திருவிழா' (Lemon Festival in Menton, France) காட்சி இது. கடந்த 79 ஆண்டுகளாக இந்தத் திருவிழா நடக்கிறது. பிரான்ஸ் முழுக்க விவசாயிகளும், சுற்றுலாப் பயணிகளும் வருவார்கள். அவர்களை வரவேற்க 145 டன் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு பழங்களை வைத்து 300 பேர் உழைத்து உருவாக்கிய ஈஃபிள் டவர்.

உலகின் மிகச் சிறிய பச்சோந்தியை ஆப்பிரிக்காவின் மடகாஸ்கர் தீவில் கண்டுபிடித்திருக்கிறார்கள் விலங்கியல் அறிஞர்கள். 'ப்ரூக்கேசியா மைக்ரோ' (Tiny Brookesia Micro) என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்தப் பச்சோந்தி மூக்கு நுனியிலிருந்து வால் வரை அளந்தால் மூன்று சென்டிமீட்டர் அளவில் இருக்கிறது. வாலைச் சுருட்டிக் கொண்டு நம் கட்டை விரல் நகத்துக்குள் அடங்கிவிடும் அளவு உள்ளது.

உலகின் மிக உயிர்ப்பான நடனம் என்று சம்பா நடனத்தைச் சொல்வார்கள். அந்த ஒப்பனையும், அளவான ஆடையும், துடிப்பான இசையும் கலந்து கூட்டம் கூட்டமாக ஆடும் ஆட்டம். பிரேசில் நாட்டின் இந்த ஆட்டத்தின் மீது உலகமே மோகம் கொண்டு அலைகிறது. பிரேசில் தலைநகர் சாவ்பாலோவில் ஆண்டுதோறும் நடக்கும் 'சம்பா கார்னிவல்' தான் (Samba Carnival,Brazil) இது.
தகவல் : முத்தாரம் இதழ்.
2 comments:
arumayana seithi :)
நன்றி கார்த்திக்.
Post a Comment