
கிளிக்குஞ்சு
மரப் பொந்திலிருந்து எடுத்துவரப்படுகிறது
குழந்தை
வீட்டிலிருந்து கூட்டிவரப்படுகிறது
கிளிக்குஞ்சு கூண்டில் அடைக்கப்படுகிறது
குழந்தை பள்ளியில் சேர்க்கப்படுகிறது
கிளிக்குஞ்சு கத்திக்கொண்டே இருக்கிறது
குழந்தை அழத் துவங்குகிறது
பழம் கொடுக்கப்படுகிறது கிளிக்கு
அழுகையை நிறுத்திவிடுகிறது குழந்தை
கிளி பழத்துக்கு அடிமைப்படுகிறது
குழந்தை பாடல்களைக் கற்றுக்கொள்கிறது
சீட்டுகளைக் கலைத்து
நெல்மணியைப் பெற்றுகொள்கிறது கிளி
புததகங்களை அடுக்கி
பாராட்டுப் பெறுகிறது குழந்தை
தனியாகப் பள்ளி செல்லப்
பழகி விட்டது குழந்தை
கவனமாக வெட்டிவிடப்படுகின்றன
கிளியின் சிறகுகள்
வெளிச்சமாயிருப்பதாகச் சொல்லப்படுகிறது
குழந்தையின் எதிர்காலம்
நல்ல காலம் பிறக்குமென
எழுதப்பட்டிருக்கிறது கிளிச் சீட்டில் !
- இளையநிலா ஜான்சுந்தர்.
நன்றி : விகடன்
0 comments:
Post a Comment