
இங்கிலாந்தில் உள்ள பழமையான அரண்மனைகளில் ஒன்று, பளிங்கு அரண்மனை எனப்படும் கிரிஸ்டல் பேலஸ். 1851 - ல் கட்டப்பட்ட மாளிகை இது. கண்ணாடியால் இழைக்கப்பட்ட மாளிகை இது. 564 மீட்டர் நீளம், 34 மீட்டர் உயரமுடைய இந்த மாளிகையில் 9 லட்சம் கண்ணாடிகள் பதிக்கப்பட்டுள்ளன.

அந்தரத்தில் தண்டவாளத்தில் தொங்கி கொண்டு சுரங்க பாதையில் ஒற்றை தண்டவாளத்தில் செல்லும் இந்த ரயில், மோனோ ரயில். 1964 - ம் ஆண்டு ஜப்பானில் முதன் முதலாக ஓடிய இந்த மோனோ ரயில், தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.

பனை, மரம் என்று தமிழில் அழைக்கப்பட்டாலும், தாவரவியல் ரீதியாக புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரமே. இதன் தாவரவியல் பெயர் 'பொராசஸ் பிலபெலி ஃபேரா. பனைகள் பொதுவாக பயிரடப்படுவதில்லை. தாமாகவே வளர்ந்து பெருகுகின்றன. பனை வளர்ந்து முதிர்ச்சி அடைவதற்கு 15 ஆண்டுகள் ஆகின்றன. 30 மீட்டர் வரை வளரக் கூடியது.
தகவல் : டி.கார்த்திக்.
2 comments:
தொடர்ந்து சிறப்பான பதிவுகளை தரும் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்..
வாழ்த்துக்களுடன்
நன்றி நண்பரே !
Post a Comment