
தென் கொரியத் தலைநகர் சியோலில் போர் அருங்காட்சியகத்தில் 'உலக மனித உடற்கூறு' கண்காட்சி நடைப்பெற்றது. இறந்த மனித உடலுக்குள் பாகங்களை நீக்கி விட்டு, அதற்குள் பிளாஸ்டிக் திரவத்தைச் செலுத்தி 'பிளாஸ்டினேசன்' என்கிற முறையில் உருவாக்கப்பட்ட உடல்தான் இது.

அருங்காட்சியகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்துவதற்க்கு ஏற்ப மொபைல் வாகனத்தை ஏற்பாடு செய்திருக்கிறது ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம். இதன் பெயர் 'யுனி - கப்'. பெரிய சக்கரம் மற்றும் நாற்காலி போன்ற வடிவத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இது மின் சக்தியில் ஓடக்கூடியது. அதிகபட்சமாக 10 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும்.

பார்ப்பதற்கு சிலை போலவே இருக்கும் இது சிலையில்லை. காளை !. சீனாவின் யுனான் மாகாணத்தில் ஜியாங்செங் ஊரில் 'காளைகள் மீது வண்ணம் பூசும் போட்டி' நடைபெற்றது. போட்டியில் பங்கேற்ற கிராமவாசி ஒருவர் அவர் காளையின் உடல் மீது ஓவியம் தீட்டி பார்வையாளர்கள் முன் அழைத்து வந்த காட்சி.
தகவல் : முத்தாரம் இதழ்.
0 comments:
Post a Comment