Friday, January 20, 2012
ஃபாசில் என்றால்.......?
ஒரு புகைப்படத்தையும், அதன் பின்னணியையும் பார்த்து அது எடுக்கப்பட்ட காலத்தை நாம் அறியலாம். அதுபோல மகரந்ததூளின் சின்னஞ்சிறு படிமத்தை (ஃபாசில் - Fossil) ஒரு நுண்ணோக்கியை (Microscope) வைத்து பார்க்கும் போது அதன் வடிவம் தெளிவாக புலப்படும்.
அது எந்தத் தாவரத்தினுடையது, எப்படி அந்தத் தாவரம் தோன்றியது, அந்தக் காலகட்டத்தில் பருவநிலை எப்படி இருந்தது ..... இப்படி எத்தனையோ செய்திகளை அந்தத் துகளிலிருந்தே அறிய முடியும். ஒரு படிமத்தை ஆராயும்போது அந்த உயிரினம் ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு வளர்ச்சியடைந்தது, எத்தனை வயதில் இறந்து போனது போன்றவையும் தெரிய வரும். அதற்கு இழைதழைதான் உணவா அல்லது ஆடு-மாடுகளை ஒரு கட்டு கட்டுமா என்பதைக் கூட இப்போது அறிய முடியும்.
இப்படி தனிப்பட்ட உயிரினங்களின் பண்புகளை அறிய முடிவது மட்டுமல்ல.... ஒட்டுமொத்த உயிரின உலகத்தையும், ஆவணமாகப் பாதுகாக்கும் பதிவாளர் பணியையும் படிமங்களே செய்கின்றன. சில சமயங்களில் உயிரினங்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் இருந்ததையும், சில வேளைகளில் படு மந்தமாக இருந்ததையும் கூட இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
சில உயிரினங்கள் முழுக்கவே அழிந்துபோன சோகத்தை படிமங்கள் மூலம் அறிய முடிந்தாலும், அதற்கான காரணங்கள் பற்றிய விவாதங்கள் விஞ்ஞானிகள் மத்தியில் இன்னும் தொடர்கின்றன. க்ரிட்டேசியஸ் காலகட்டத்தில்
டைனோசர்களோடு வேறு பல உயிரினங்களும் மொத்தமாக மறைந்தன. பூமியில் விண்கல் விழுந்ததால் ஏற்பட்ட விளைவு இது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
தகவல் : முத்தாரம் இதழ்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"அன்பு நண்பரே உங்கள் வலையினை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம் நன்றி
நன்றி நண்பரே
Post a Comment