Sunday, August 28, 2011

சிசேரியன் வார்த்தை பிறந்த விதம் !


அந்த நாட்களில் குழந்தை பிறந்ததும் சில தாய்மார்கள் இறந்துபோக நேர்ந்துவிடுவதை 'தாயின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு பிறந்தது' என்று குழந்தையைக் குறிப்பிட்டுச் சொல்வார்கள். இப்போது பெரும்பாலான பிரசவங்கள் தாய்மார்களின் வயிற்றைக் கிழிந்தபடிதான் நடக்கின்றன. மருத்துவர்கள் இந்தப் பிரசவத்தை 'சிசேரியன்' என்று சொல்கிறார்கள். இந்த சிசேரியன் என்ற சொல் பிறக்க காரணமானவர் ரோமாபுரி மன்னன் ஜீலியஸ் சீசர்.


சீசர் தன் தாயின் வயிற்றில் இருந்தபோது, பிரசவ நேரத்தில் இயற்கையான முறையில் பிரசவிக்கச் செய்ய இயலாது என்றறிந்த அந் நாளையை மருத்துவர்கள், தாயின் வயிற்றைக் கிழித்து குழந்தையை வெளியே எடுத்தார்கள். பிற்காலத்தில் அதுபோன்ற பிரசவங்களுக்கு சீசர் பெயர் மருவி 'சிசேரியன்' ஆகியது.


தகவல் : முத்தாரம்.

சமூகப் புரட்சியாளர் சாகு மகராசர் !


இந்திய நாட்டில் பல சமூகப் புரட்சியாளர்கள் தோன்றி மறைந்துள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஜோதி ராவ் புலே, நாராயண குரு, சாகு மகராசர், தந்தை பெரியார் மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோராவர்.

இவர்களில் சாகுமகராசர் மகாராட்டிர மாநிலத்தின் கோல்காப்பூர் சமாஸ்தான மன்னர் ஆவார். இந்திய நாட்டில் நூற்றுக்கணக்கான மன்னர்கள் ஆட்சி செய்தனர். அவர்களில் சமூகப் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒரே மன்னர் சாகுமகராசர் அவர்களே ஆவார்.

சாகுமகராசர் 1874 ஆம் ஆண்டு பிறந்து தனது 20 ஆவது அகவையில் அதாவது 1894 ஆம் ஆண்டு கோலாப்பூர் சமஸ்தான மன்னராக முடிசூட்டிக் கொண்டார். சாகுமகராசர் இறை நம்பிக்கையுள்ளவர். ஆரிய சமாசத்தை ஆதரித்தவர். அரசுப் பதவிகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் இருப்பதற்குக் காரணம், பார்ப்பனரல்லாதாருக்குக் கல்வி மறுக்கப்பட்டதே என்பதை உணர்ந்தார். இதனை மாற்றி அமைக்கப் பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் கல்வி போதிக்க முழு முயற்சியில் ஈடுபட்டார்.

கோல்காப்பூரில் அனைத்து மாணவர்களும் தங்கிப் படிக்க ஒரே ஒரு விடுதி இருந்தது. ஆனால் அந்த விடுதியில் பார்ப்பனரல்லாத மாணவர் ஒருவர் கூடத் தங்கியதில்லை என்பதை அறிந்து வருந்தினார். எனவே, பார்ப்பனரல்லாதார் தங்கிப் படிக்க பல விடுதிகளை ஏற்படுத்தினார்.

சாகுமகராசர், தான் பிறந்த மராத்திய சாதி, சமுதாயத்தில் சத்திரியர் எனும் நிலைக்கு உரியது எனக் கூறினார். ஆனால் பார்ப்பனர்கள் அவர் பிறவியில் சத்திரியர் அல்லர், சூத்திரர் எனக்கூறி அவருக்கு வேத மந்திரங்களை ஓத மறுத்தனர். புராண மந்திரங்களையே ஓதி வந்தனர். இதனை அறிந்த மன்னர் சாகு மகராசர் தன்னை இழிவுபடுத்திய பார்ப்பனர்களைத் தண்டிக்க 1901 ஆம் ஆண்டு, இனி அரண்மனையில் புரோகிதர்கள் வேதச் சடங்குகளையே செய்ய வேண்டும். அப்படிச் செய்ய மறுத்தவர்கள் அரண்மனையை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்தார். ஆனால் தலைமைப் புரோகிதர் மன்னரின் இந்த உத்தரவை ஏற்க மறுத்தார். இதனால் மன்னர் அவருக்கு தானமாகத் தந்த நிலங்களைப் பறிமுதல் செய்ய ஆணை பிறப்பித்தார்.

பார்ப்பனர்களுக்கும் மன்னருக்கும் இடையே மோதல் முற்றிக்கொண்டே போனது. இந்நிலையில் மன்னர் சாகுமகராஜ் மராட்டியத்தில் உள்ள மற்ற மன்னர்களுக்கும் இது பற்றிக் கடிதம் எழுதினார். அவர்களும் பார்ப்பனர்களால் தாங்கள் இழிவுபடுத்தப்பட்டு வருவதை அறிவித்தனர். பரோடா மன்னர் கெய்க்வாடு சாகு மகராசரின் முயற்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க முன்வந்தார்.

இந்நிலையில் மன்னரின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் சங்கர மடத்தில் வாரிசுகளை நியமிக்கும் முன் அதற்கான ஒப்புதலை மன்னரிடம் பெறவேண்டும். ஆனால் பிலவதிகர் என்ற சங்கராச்சாரி மன்னரின் அனுமதி பெறாமல் பிரம்மனாலகர் என்பவரைத் தமது வாரிசாக அறிவித்தார். இதனை அறிந்த மன்னர் சங்கர மடத்தின் சொத்துக்களைப் பறிமுதல் செய்தார். உடனே பாலகங்காதரத் திலகர் தலையிட்டு மன்னரின் ஆணையை நிறைவேற்ற உறுதி அளித்து பறிமுதல் செய்த சொத்துக்களைத் திரும்பப் பெற்றார். அரண்மனைப் புரோகிதர்களும் வேத மந்திரம் ஓத ஒப்புக்கொண்டனர்.

1902 ஆம் ஆண்டு, தனது நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் வேலைவாய்ப்பில் 50 விழுக்காடு இடங்களை ஒதுக்கி ஆணை பிறப்பித்தார். இந்திய நாட்டில் இதுதான் முதல் சமூகநீதி ஆணையாகும். பிறகு தென்னகத்தில் பல பகுதிகளில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிப்பதற்கு இதுவே வழிகாட்டியாகவும் இருந்தது. மேலும், கோல்காப்பூரில் மாணவர் விடுதி ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போது “சாதி முறையை ஒழிப்பது தேவையானது. அதை ஆதரிப்பது குற்றமும், பாவமும் ஆகும். முன்னேற்றப் பாதையில் மிகப்பெரும் தடையாக இருப்பது சாதி முறையே'' என்றார். அதோடு சாதியை அகற்றுவது நமது கடமை என்றும் அக்குறிக்கோளை அடைவதற்குத்தான் சாதி மாநாடுகள் நடைபெறுகிறது என்பதை மறவாதீர் என்று மன்னர் சாகுமகராசர் வேண்டுகோள் விடுத்தார்.

 மன்னர் சாகுமகராசர், தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியும், பதவியும் பெறுவதற்குத் தனிக் கவனம் செலுத்தினார்.

 தாழ்த்தப்பட்டோரை அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுடன் சமமாக நடத்திட ஆணைபிறப்பித்தார்.

 தாழ்த்தப்பட்டோர் நகர சபைத் தேர்தலில் பங்கு பெற்று வெற்றிபெற சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கினார்.

 தாழ்த்தப்பட்டோர் பொது கிணறு மற்றும் குளங்களை மற்றவர்களுடன் சமமாகப் பயன்படுத்திக்கொள்ள உரிமை கொடுத்தார்.

 தாழ்த்தப்பட்டோருக்காகத் தனியாகச் செயல்பட்டுவந்த பள்ளிகளை மூடி, பொதுப்பள்ளியில் எவ்வித வேறுபாடுகளுமின்றி அவர்களைச் சேர்த்துக் கல்வி போதிக்க ஆணை பிறப்பித்தார்.

 தாழ்த்தப்பட்டோர் கிராமங்களில் கணக்குப் பிள்ளைகளாகப் பணியாற்ற பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பையும் மீறி நியமன ஆணைகளைப் பிறப்பித்தார்.

 மன்னர் தன்னுடைய தனிப்பட்ட அலுவல்களை கவனித்துக் கொள்ள தாழ்த்தப்பட்டவர்களைச் சேர்த்துக் கொண்டார்.

 அரசாங்க யானை மீது அமர்ந்து அதை வழி நடத்திச் செல்லும் பதவியை ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு வழங்கினார்.

 தாழ்த்தப்பட்ட தோழர்களோடு மன்னரே இணைந்து உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தினார்.

1919 ஆம் ஆண்டு முதல் மன்னர் சாகுமகராசரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு ஏற்பட்டது. அம்பேத்கர் 1920 ஆம் ஆண்டு வெளியிட்ட “மூக்நாயக்'' (ஊமைகளின் தலைவன்) என்ற மாதமிருமுறை இதழ் வெளிவர சாகுமகராசர் அம்பேத்கருக்கு உரிய உதவிகளைச் செய்தார்.

1920 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 21 ஆம் நாள் கோல்காப்பூர் அரசில் மான்கோன் என்ற இடத்தில் நடைபெற்ற “தீண்டப்படாதார் மாநாட்டிற்கு'' அம்பேத்கர் தலைமை தாங்கினார். மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய மன்னர் சாகுமகராசர் “அம்பேத்கர் உருவில் உங்கள் மீட்பரைக் கண்டறிந்துள்ளீர்கள், உங்கள் அடிமை விலங்கை இவர் உடைத்தெறிவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு. காலம் வரும்; அப்போது அனைத்திந்திய அளவில் மதிப்பு வாய்ந்த புகழ்மிக்க தலைவர்களில் ஒருவராக இவர் திகழ்வார் என்று என் மனச்சான்று சொல்கிறது'' என்று குறிப்பிட்டார்.

மன்னர் சாகுமகராசர் அம்பேத்கர் மீது அளவுகடந்த அன்பும் மதிப்பும் கொண்டு இருந்தார். ஒருநாள் திடீரென்று அம்பேத்கர் அவர்களின் வீட்டிற்குச் சென்று அவரோடு சில மணிநேரம் கலந்துரையாடித் திரும்பினார். இதன்மூலம்மன்னர் சாகுமகராசர் அம்பேத்கர் மீது எந்த அளவுக்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை நாம் அறியலாம்.

20 ஆவது அகவையில் ஆட்சிக்கு வந்து 28 ஆண்டுகள் ஒரு சிற்றரசராகப் பதவி வகித்து 48 ஆவது வயதில், அதாவது 1922 இல் மறைந்த சாகுமகராசர் தனது வாழ்நாள் முழுவதும் சமூக நீதியை நிலைநாட்டுவதற்கும் தாழ்த்தப்பட்ட சமூகம் உயர்வதற்கும் பாடுபட்டார். குறிப்பாக 100 ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி பார்ப்பனர்களை எதிர்த்தார். ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்தை உயர்த்திடத் தனது பதவியே பறிபோனாலும் தான் ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து ஒரு போதும் பின்வாங்க மாட்டேன். பார்ப்பனர்கள் ஆங்கிலேயரைத் தனக்கு எதிராகத் திருப்பிவிட்டு எந்த தண்டனை கொடுத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ள நான் தயார் என்று பிரகடனம் செய்தவர் மன்னர் சாகுமகராசர் ஆவார்.

சுதந்திர இந்தியாவில் குறிப்பாக கடந்த 64 ஆண்டுகளில் இதுவரை ஒரு பிரதம மந்திரியோ, அல்லது ஒரு மாகாண முதல் மந்திரியோ இவரைப்போல் துணிவுடன் பார்ப்பனர்களை எதிர்த்து பணியாற்ற முன்வந்தார்களா என்றால் இல்லை என்றே பதில் வரும். ஆட்சிக்கு வருபவர்கள் தங்களது கொள்கை இலட்சியங்களை மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு, தனது பதவியின் காலத்தை வெற்றிகரமாக முடித்து மீண்டும், ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள சில திட்டங்களைத் தீட்டி அவைகளை மட்டுமே செய்து தேர்தலில் போட்டியிடுவதை நாம் காண்கிறோம்.

சாகுமகராசர் தொடங்கிவைத்த பணி இன்னும் முடியவில்லை அவரைப் போன்ற ஒரு வீரமிக்க சமூகப் புரட்சியாளர் நம் சமூகத்தில் மீண்டும் தோன்றிச் சமூக புரட்சிக்கு வழிகாட்ட வேண்டும். வாழ்க சாகுமகராசர் புகழ்.

(பாசறை முரசு ஜூலை 2011 இதழில் வெளியானது)

நன்றி : கீற்று இணையதளம்.



Saturday, August 27, 2011

பசுமை வேட்டை என்கிற பயங்கரவாதம்-XII

பசுமை வேட்டை நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பதினான்கு கோரிக்கைகளை முன்வைத்து, பிப்ரவரி 16, 2011 அன்று ஒரிசாவின் மல்காங்கிரி மாவட்ட ஆட்சியர் வினீல் கிருஷ்ணா, உதவிப் பொறியாளர் பபித்ரா மோகன் மஜி ஆகிய இருவரும் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டனர். மாவட்ட ஆட்சியராக வினீல் கிருஷ்ணா பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, இப்பகுதியின் கிராம மக்களை நேரடியாகச் சென்றடையும் வகையில், ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்டங்களை செயல்படுத்தியதாலும், கிராம மக்களை தேடிச் சென்று குறைகள் கேட்டு பணி செய்ததாலும், இப்பகுதியின் கிராம மக்கள் அவர் மீது நல்லெண்ணம் கொண்டிருந்தனர். அதிகார வர்க்கத்தின் வஞ்சகமான அணுகுமுறைகள் குறித்து எவ்வித சந்தேகங்களையும் எழுப்பத் தெரியாத பழங்குடிமக்கள், மாவட்ட ஆட்சியரை மாவோயிஸ்டுகள் விடுவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து பேரணி ஒன்றும் நடத்தினர். இதை மாவோயிஸ்டுகளுக்கு எதிரான மக்களின் உளக்கிடக்கை என ஊடகங்கள் சித்தரிக்க முயன்றன.

காடுகளுக்குள் புதிய தார்ச்சாலைகள் அமைப்பது, அரசு எந்திரத்திற்கான அலுவலகங்களை உருவாக்குவது, உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது ஆகியன மேலோட்டமாகப் பார்த்தால், மக்களின் பயன்பாட்டுக்கானது – சமூக வளர்ச்சிக்கானது என்ற தோற்றத்தைத் தான் தரும். ஆனால், கூலிப்படைகள், துணை ராணுவப் படையினர் உள்ளிட்ட பசுமை வேட்டை நடவடிக்கையின் பயங்கரவாதக் கருவிகள், பழங்குடி மக்களின் பகுதிகளுக்குள் இலகுவாகப் புழங்குவதற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளாகவே, இவை காலப்போக்கில் பயன்படுத்தப்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. கனிம வளங்களைக் கொள்ளையிடவும், பழங்குடி மக்களை பலவந்தமாக வெளியேற்றவும், பழங்குடி மக்களைப் பாதுகாக்கும் மாவோயிஸ்டுகளை அழிக்கவும்தான், ஒரிசா, ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் இது போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரிலான இப்பணிகளுக்கு பழங்குடி மக்களால் இடையூறு ஏற்படாமல் இருக்கவே, நலத்திட்டங்கள் என்ற பெயரில் அவர்களுக்கு சில சலுகைகள் திசைதிருப்பும் நோக்கில் வழங்கப்படுகின்றன. அப்படியான நலத்திட்டங்களைத்தான், மல்காங்கிரி மாவட்டத்தில் பழங்குடி மக்களின் எதிர்ப்பு வலுவாக இருக்கும் பகுதிகளில், கடத்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா நடைமுறைப்படுத்தத் துணிந்தார். அதிகார வர்க்கத்தின் முதன்மையான வேலைத் திட்டம் பசுமை வேட்டை நடவடிக்கையே. அதற்கு முட்டுக் கொடுக்கும் நலத்திட்ட உதவிகள் என்ற நயவஞ்சக வேலைத்திட்டத்தை, மற்றவர்கள் தயங்கிய போது கிருஷ்ணா துணிந்து செயலாற்ற முனைந்தார்.

ஆனால், ஊடகங்கள் ஊதிப் பெருக்கும் அரசு எந்திரங்களுக்கு ஆதரவான செய்திகளில் குளிர்காயும் நடுத்தர வர்க்கமோ, மக்கள் சார் பணியாளர் ஒருவரை "தீவிரவாதிகள் கொலை செய்யத் திட்டமிடுகின்றனர்' என்பது வரை கற்பனை செய்து உச்சுக் கொட்டிக் கொண்டிருந்தனர். ஒடுக்கும் – சுரண்டும் சமூக அமைப்பின் அத்தனை கேவலங்களுக்கும் இடங்கொடுத்து வாழப்பழகிக் கொண்ட பிழைப்புவாத வர்க்கங்கள், கொடுமைகளில் சிக்கி உழலும் தலித்துகள், பழங்குடியினர் போன்ற அடித்தள மக்களின் பிரச்சனைகளைத் துளியும் புரிந்து கொள்வதில்லை. மாறாக, பிரச்சனைகள் தீவிரமடையும்போது, நிகழும் உபரி விளைவுகள் மீது தங்கள் கரிசனத்தைக் கொட்டி அங்கலாய்க்கின்றனர்.

அதிகார வர்க்கம் இடும் கட்டளைகளுக்கு இயங்கப் பழகிக் கொண்ட, ஒட்டுமொத்த சமூகத்தின் ஒரு தனி நபர் அங்கமாக மட்டுமல்ல, அரசு எந்திரத்தின் ஓர் உறுப்பாகவும் இருப்பவர்தான் கிருஷ்ணா போன்ற மாவட்ட ஆட்சியர். தனது கொலை வெறி வேட்டைக்கு இந்த மாவட்ட ஆட்சியர் போன்ற தனது உறுப்புகளை அரசு எந்திரம் துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தும்போது, மக்கள் விடுதலைப் போராளிகள் அதே துருப்புச் சீட்டையே தங்கள் கோரிக்கைகளுக்கான பிணைகளாகப் பயன்படுத்த வேண்டிய அவசியம் நேர்கிறது.

"சாஷிமுலியா ஆதிவாசி சங்க'த்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மீதும், ஏனைய பழங்குடி மக்கள் மீதும் கடந்த சில ஆண்டுகளில் 9018 வழக்குகள் புனையப்பட்டுள்ளன. மருந்துக்கும் பயனற்ற இவ்வழக்குகள் மூலம் பழங்குடி மக்களை அலைக்கழித்து, அவர்களின் போராட்ட உணர்வைக் கொன்றுவிடலாம் என ஆளும் வர்க்கம் தப்புக் கணக்கு போடுகிறது. எவ்வித ஆதாரமும் இல்லாத இவ்வழக்கு களைத் திரும்பப் பெறவும், பிணை மறுக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டிருக்கும் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களை விடுவிக்கவும், தங்கள் கட்சியின் முன்னணித் தலைவர்களை சிறையிலிருந்து மீட்கவும், யாவற்றுக்கும் மேலாக பச்சை வேட்டை பயங்கரவாதத்தை நிறுத்தவும் மாவோயிஸ்டுகள் அவ்வப்போது அதிகார வர்க்கத்திற்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வருவதை, ஊடகங்கள் "சிவப்பு அச்சுறுத்தல்' (Red alert) என ஊதிப் பெரிதுபடுத்துகின்றன.

மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்களின் உரிமைகளுக்கான தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற, மாநில அரசிடம் உத்தரவாதங்களைப் பெற்றுக் கொண்ட பிறகே, மக்களின் கருணை ததும்பும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து கிருஷ்ணாவை விடுதலை செய்தனர். மாவோயிஸ்டுகள் முன்வைத்த 14 கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என மாநில உள்துறை செயலாளர் யு.என். பெஹெரா பத்திரிகையாளர் சந்திப்பில் உறுதி அளித்த பிறகே, மாவட்ட ஆட்சியர் விடுவிக்கப்பட்டார். சிறைப்படுத்தப்பட்டிருக்கும் சுமார் 700 பழங்குடி மக்கள், மூன்று மாதங்களில் படிப்படியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதும் இக்கோரிக்கைகளில் முக்கியமான ஒன்று. ஏனைய கோரிக்கைகளும், தம் வாழ்வாதாரங்களை பாதுகாப்பதையும் அரசு ஒடுக்குமுறையிலிருந்து தம்மை விடுவிப்பதையுமே நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்பதை உணர்ந்திருக்கும் பழங்குடி மக்களை மாவோயிஸ்டுகளுக்கு எதிராக ஒருபோதும் இவர்களால் நிறுத்த முடியாது.

ராஜேந்ரா கன்பதே, வயது 58. மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த மகாராட்டிர மாநிலத்தின் கட்சிரோலி மாவட்டத் துணை ஆட்சியர். இம்மாவட்டமும் சட்டீஸ்கரின் எல்லையோர மாவட்டங்களும் பரந்து விரிந்த, அடர்ந்த வனப் பகுதியால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. அரசின் படைகள் நுழைய முடியாத உள்ளடர்ந்த வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாமிட்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அபுஜ்மார் என அழைக்கப்படும் இவ்வனப்பகுதியில் 250 கி.மீ. தொலை வுக்குள் ஆகஸ்ட் 23, 2010 அன்று, பயணம் மேற்கொண்டு திரும்பியிருக்கிறார் கன்பதே. அவரது ஊழியர்கள் எவரும் அவருடன் செல்ல முன்வரவில்லை. ஆபத்து மிகுந்த இப்பயணத்திற்கு காவல் துறை அனுமதிக்கவில்லை; அவரது உயிருக்கு உத்தரவாதம் தர இய லாது எனவும் அச்சுறுத்தியது.

"நாட்டின் எந்தவொரு பகுதிக்கும் சென்று வருவது, தனது அடிப்படை உரிமை' என அவர்களிடம் தெரிவித்து விட்டு, கன்பதே இப்பயணத்தைத் தொடங்கினார். மகாராட்டிர காவல் துறையின் கடைசி சோதனைச் சாவடியிலிருந்து 100 கி.மீ. தொலைவில், எல்லையில் அமைந்திருக்கும் பீனகோண்டா என்ற கிராமத்தை, தன்னுடன் இணைந்து கொண்ட ஏழு தன்னார்வத் தொண்டர்களுடன் எவ்விதக் குறுக்கீடுகளும் இன்றி சென்றடைந்தார். “நக்சலைட் அச்சுறுத்தல் – தீவிரவாதம் என்பதெல்லாம் காவல் துறையால் மிகைப்படுத்தப்படுபவை. நக்சலைட்டுகளை "துர்தேவதை' களாகப் பிரச்சாரம் செய்வதன் மூலம்தான், அவர்கள் ஊதிய உயர்வையும் அதிக அளவிலான நிதி ஒதுக்கீட்டையும் பெற்று வருகிறார்கள்'' என விமர்சிக்கிறார் கன்பதே.

கட்சிரோலி மாவட்ட காவல் துறையின் நக்சல் ஒழிப்புப் பிரிவு, தனது எல்லைக்குள் சீருடை தரித்த நக்சலைட்டுகள் 300 பேர் இருக்கலாம் என அனுமானித்துள்ளது. ஆனால், இவர்களை எதிர்கொள்ள சி.ஆர்.பி.எப்.இன் நான்கு பட்டாலியன்கள், எஸ்.ஆர்.பி.எப்.இன் 11 கம்பெனிகள், ஒரு சி – 60 கமாண்டோ படை மற்றும் மாநில காவல் துறையின் படைப் பிரிவுகளை உள்ளடக்கிய 9,000 அரசுப் படையினர் இம்மாவட்டத்தில் மட்டும் பணியில் இருக்கின்றனர். 1980 முதல் 2010 வரை குண்டு வெடிப்பு மற்றும் மோதல்களில் நக்சலைட்டுகளால் காவல் துறையினர் கொல்லப்பட்ட நிகழ்வுகள், இம்மாவட்டத்தில் மட்டும் 57 என, கட்சிரோலி மாவட்ட திட்டக் குழுவின் அறிக்கை கூறுகிறது ("தெகல்கா', அக்டோபர் 30, 2010). அதாவது, கடந்த 30 ஆண்டுகளில் ஆண்டுக்கு இரண்டு நிகழ்வு கள் நடந்தேறியுள்ளன. “துணை ராணுவப் படையினரைத் திரும்பப் பெற வேண்டுமே யொழிய, படைகளைக் குவிப்பதாலோ, தேடுதல் வேட்டைகளைத் தொடர்வதாலோ, நக்சலைட்டுகளின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது'' எனக் கூறும் கன்பதே, துறைசார் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்.

பள்ளிக்கூட தலைமை ஆசிரியரின் மகனாகப் பிறந்த கன்பதே, மத்தியப் பிரதேச மாநிலத்தில் காபுவா என்னும் ஊரில் தனது பள்ளிக் கல்வியை அரசு பள்ளிக்கூடங்களில் நிறைவு செய்த பின்னர், நாக்பூர் பல்கலைக் கழகத்தில் கணிதம் மற்றும் இயற்பியலில் முதுநிலை அறிவியல் பட்டத்தைப் பெற்றவர். நாக்பூர் உயர்நிலைப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 1984 இல் மாவட்ட கல்வியியல் அலுவலகத்தில் தனக்கான ஆசிரியர் பயிற்சி சான்றிதழைத் தருவதற்கு, அவர்கள் இரண்டு ரூபாய் கையூட்டு கேட்டபோது, கோபமுற்று தர மறுத்திருக்கிறார். அரசாங்க அமைப்பை முதன்முதலில் எதிர்த்த இந்நிகழ்வை நினைவுகூறும் இவர், 1985இல் குடிமைப் பணியில் சேர்ந்தபோது, இந்த ஊழல் அமைப்பைத் திருத்த வேண்டும் என விரும்பியிருக்கிறார். ஆனால், விரைவிலேயே "நேர்மை என்பது தவறான கொள்கை' என கண்டு கொண்டதாக வருந்துகிறார். 1988இல் துணை வட்டாட்சியராகப் பணியிலிருந்தபோது, சட்டவிரோதமாக வனப் பகுதியில் மரங்கள் வெட்டுபவர்களைப் பிடிக்க வேண்டுமென திட்டமிட்டிருக்கிறார். அதை அறிந்த அவரது உயர் அதிகாரி ஒருவர், "இவ்வாறு செய்வதாக இருந்தால், உங்கள் ஆசிரியர் பணிக்கே நீங்கள் திரும்பிப் போக நேரிடும்' என அறிவுறுத்தியிருக்கிறார் (மிரட்டினார் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபிக்க முடியாது அல்லவா?).

கன்பதே 2010 மார்ச் மாதத்தில்தான் மாவட்டத் துணை ஆட்சியராகப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார். மாவட்ட ஆட்சியரான அதுல் பட்னே, மாவட்டத்திலுள்ள கடைநிலை பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்து அறிக்கை தர வேண்டுமென, தனக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு உத்தரவிட, அவ்வகையில் கன்பதேவுக்கு ஒதுக்கப்பட்ட இடம்தான் பீனகோண்டா கிராமம். “என்னைப் பழி தீர்ப்பதாக நினைத்து, சாலைவசதிகூட இல்லாத, நக்சலைட்டுகளின் செல்வாக்கு மிகுந்த இப்பகுதியை எனக்கு ஒதுக்கினார். ஆனால், நான் செல்வதாக முடிவு செய்த பிறகு, அவர்களால் தடுக்க முடியவில்லை'' என்கிறார் கன்பதே. தனது பயணத்தில் 20 கி.மீ. அளவிலான மலைப்பாதைகளையும் சிற்றாறுகளையும் நடந்தே கடந்து சென்று, தனது குழுவினரோடு பீனகோண்டா கிராம மக்களைச் சந்தித்தார். 35 குடிசைகளும் 219 பேரும் மட்டுமே இருந்த அக்கிராமத்தில் இரண்டு கிணறுகள் இருந்ததாகவும், அவற்றில் ஒன்று தூர்ந்து போயும் மற்றொன்றில் மழை நீர் தேங்கி இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். மேலும், “கலங்கிய நீர் குட்டையிலிருந்துதான் குடிப்பதற்கு அவர்கள் நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். மின்சாரம் இல்லை. பொருட்கள் வாங்குவதற்கான சந்தை அக்கிராமத்திலிருந்து 57 கி.மீ. தொலைவில் இருக்கிறது. அரசாங்கத்தின் அடையாளமாக பழங்குடியின நலத்துறையின் நிதியில் கட்டப்பட்டிருந்த அங்கன்வாடி பள்ளிக்கூடமும், கிராம சுகாதார மய்யக் கட்டடமும் இருந்தன. ஆனால், அவை இயங்கவில்லை'' எனவும் குறிப்பிடுகிறார்.

கன்பதே குழுவினர் அன்று இரவு அக்கிராமத்தில் தங்கினர். நாக்பூரில் இயங்கும் கிராம மேம்பாட்டுக்கான தேசிய மய்யத்தால் நடத்தப்படும் அப்பள்ளிக்கூடத்தை கன்பதே ஆய்வு செய்தார். 188 மாணவர்கள் பயின்று வருவதாகப் பதிவேட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், 39 மாணவர்களே கிராமத்தில் இருந்தனர். ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் 14 பேர் பணியில் இருப்பதாகக் குறிப்பு இருந்தது. ஆனால், மூவர் மட்டுமே பணியில் இருப்பதை அறிந்தார். வருகைப் பதிவேடு உள்ளிட்ட எவ்வித நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை. பராமரிப்பு இன்றி உடைந்தும் சிதிலமடைந்தும் இருந்த அப்பள்ளிக்கூடத்தில், சூரிய ஒளி மின்னாற்றலால் இயங்கும் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக இருந்தது. அரசாங்கத்தின் நலத் திட்டங்கள் எவையும் தமக்குக் கிடைப்பதில்லை என அக்கிராமத்தினர் அவரிடம் முறையிட்டனர்.

“அரசு உதவிகள் பெறுவதற்கான சான்றாதாரங்கள் எவையும் அம்மக்களிடம் இல்லை. பட்டியல் பழங்குடியினருக்கான சான்றிதழ்களை ஒவ்வொரு தனி நபரும் பெறுவதற்கு உதவுவதாக, நான் அவர்களிடம் வாக்குறுதி அளித்துள்ளேன்'' என்கிறார் கன்பதே. “நீண்ட தூரம் பயணம் செய்வதற்கு மிதி வண்டியும், டார்ச் மற்றும் அரிக்கேன் விளக்குகளுமே அவர்களின் உடனடித் தேவையாக இருக்கின்றன. அரசாங்கம் அவர்களின் இத்தேவைகளை உடனடியாக நிறைவேற்ற முடியும். இரண்டு கான்ஸ்டபிள்களின் ஆண்டு வருமானத்தைவிட, இத்தொகை அதிகம் இல்லை. ஆனால், துணை ராணுவப் படைகளுக்கு ஆயிரக்கணக்கான கோடிகளை ஆண்டுதோறும் செலவிட்டு வருகிறது அரசு. அப்படைகள் தேவையற்றவை'' என்கிறார் கன்பதே.

2005 இல் நாக்பூர் உயர் நீதிமன்றத்தில் ஒரு தொண்டு நிறுவனம், எவ்விதக் குடிமை உரிமைகளும் வழங்கப்படாமல் பீனகோண்டா கிராமம் புறக்கணிக்கப்படுவதாகப் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தது. "மாவட்ட ஆட்சியர் அக்கிராமத்திற்கு ஆய்வுக்கு செல்ல வேண்டும்' என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் விளைவுதான் அக்கிராமத்தில் தோண்டப்பட்டிருக்கும் இரண்டு கிணறுகள். 2007 பிப்ரவரியில் மாவட்ட ஆட்சியராகயிருந்த நிரஞ்சன்குமார், தேர்தல் பணி நிமித்தம் அக்கிராமத்திற்குச் சென்றிருக்கிறார். கன்பதே அக்கிராமத்திற்குச் சென்றிருக்கும் மூன்றாவது குடிமைப் பணி அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகளாக, கட்சிரோலி மிகவும் பின்தங்கிய மாவட்டமாக வரையறுக்கப்பட்டு, ஆண்டுதோறும் 40 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு பெறுகிறது. 2010 ஆகஸ்டில் மாநில திட்டக்குழு 565 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. “அரசாங்கம் வளர்ச்சித் திட்டங்களில் அக்கறையோடுதான் செயல்படுகிறது. ஆனால், ஊழல் அதிகாரிகள்தான் ஒதுக்கப்படும் நிதிகளைச் சூறையாடி விடுகின்றனர்'' எனக் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறார் கன்பதே.

பீனகோண்டாவும் கட்சிரோலியும் இந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவும் அரசு எந்திரத்தின் செயல்பாட்டையும் ஊழல் அதிகார வர்க்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அடையாளங்கள் என்று சொன்னால் அது மிகையல்ல. 10 லட்சம் மக்கள் தொகை கொண்ட இம்மாவட்டம், 18 கி.மீ. நீளமே கொண்ட இருப்புப் பாதைகளையும், ஒரே ஒரு ரயில்வே நிலையத்தை யுமே உள்ளடக்கியிருக்கிறது. சுஜன்கார் என்னுமிடத்தில் உருவாகி வரும் சுரங்கப் பகுதியின் தேவைக்காகவே, அங்கு இருப்புப் பாதை விரிவுபடுத்தப்பட இருக்கிறது. கன்பதேவும் அவரது சகாக்களும் 48 மணி நேரத்திற்கு வெளியுலகத் தொடர்பற்று இருந்தனர். இவர்களை மாவோயிஸ்டுகள் கடத்திச் சென்று விட்டனர் என காவல் துறை வதந்தி பரப்பியது. இது, மாநில உள்துறை அமைச்சகம் வரை சென்று, இவர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 26 அன்று, கன்பதேவும் அவரது குழுவினரும் வனப் பகுதியிலிருந்து வெளியேறி, லஹேரியில் உள்ள காவல் துறையின் சோதனைச்சாவடியை வந்தடைந்தனர்.


“எங்களை அவ்விடத்திலிருந்து அழைத்துச் செல்ல வட்டாட்சியர் வண்டி காத்திருந்தது. நாங்கள் திரும்பிக் கொண்டிருந்த வழியில், அரசு முத்திரை பொறித்த வண்டி எனத் தெரிந்திருந்தும், ஒரு சோதனைச் சாவடியில் எங்கள் வண்டியை நிறுத்திய ஒரு கான்ஸ்டபிள், துப்பாக்கி முனையில் வட்டாட்சியரைக் காரிலிருந்து வெளியே வரச் சென்னார். காவல் துறைக் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் எங்கள் வண்டி சோதனையிடப்பட்டது. நக்சலைட்டுகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதியில்கூட, எங்களை எந்தவொரு நக்சலைட்டும் துப்பாக்கி முனையில் எதிர்கொள்ளவில்லை. ஆனால், வட்டாட்சியரின் வண்டி எனத் தெரிந்திருந்தும், அக்காவலர் அப்படி நடந்து கொள்வதைப் பார்த்தபோது, கிராம மக்களை இவர்கள் எப்படியெல்லாம் நடத்துவார்கள் என்பது எனக்கு உறைத்தது'' என தான் உணர்ந்ததை நமக்கும் உணர்த்துகிறார் கன்பதே.

மகாராட்டிர உள்துறை அமைச்சகம் கன்பதேவை அழைத்து, அவரது பயணம் குறித்த அறிக்கை ஒன்றையும் அதை வெளியிட்டு விடாமல் ரகசியம் காக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதாகத் தெரிய வருகிறது. அதே நேரத்தில் மாவட்ட ஆட்சியர் பட்னே, பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர் கடத்தப்பட்டதாகக் கசிந்த வதந்தி குறித்து தெளிவுபடுத்தி வருமாறும், அரசுக்கு எதிராக எதுவும் சொல்லிவிடக் கூடாது எனவும் கன்பதேவை அறிவுறுத்தியிருந்தார். ஆனால், கன்பதே உண்மைகளை மறைக்க விரும்பவில்லை. “நான் வன்முறையை எதிர்க்கிறேன். அது நக்சலைட்டுகளின் வன்முறையாயிருந்தாலும்; சட்டப்பூர்வமாக்கப்பட்ட அரசின் வன்முறையாயிருந்தாலும். நக்சலைட்டுகளின் வன்முறை எல்லைக்குட்பட்டது. அவர்களின் இலக்கு வரையறுக்கப்பட்டது. ஆனால், காவல் துறையின் வன்முறையோ கட்டவிழ்த்து விடப்பட்டது. கிராமப்புற மக்கள் நக்சலைட்டுகளைவிட, காவல் துறை குறித்தே மிகுந்த அச்சம் கொண்டிருக்கின்றனர். நக்சலைட்டுகளை நியாயப்படுத்த முன்வரவில்லை. ஆனால், அரசுப்படைகள் மோசமானவை என நான் உறுதியாகக் கூறுவேன்'' என அதிகார வர்க்கத்தின் செவிட்டில் அறைந்தார் கன்பதே.

பத்து நாட்களுக்குப் பிறகு, மாவட்ட ஆட்சியருக்கு காவல் துறைக் கண்காணிப்பாளரிடமிருந்து ரகசியக் கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில், “கன்பதே, அரசுக்கும் காவல் துறையின் நிர்வாகத்திற்கும் எதிராகப் பேசியிருக்கிறார். பொதுமக்களின் எண்ணத்தில் அரசு நிர்வாகம் குறித்து குழப்பத்தை உருவாக்கியிருக்கிறார். காவல் படையினர், தம் குடும்பத்தினரை விட்டு விலகி, பாதுகாப்பற்ற பகுதிகளில் தங்கியிருக்கின்றனர். அவர்களின் கண்ணியத்தை கன்பதே குலைத்திருக்கிறார். ஒரு பொறுப்பான அதிகாரி, நக்சலைட்டுகள் மீது அனுதாபம் உருவாக்க முயன்றிருக்கிறார். ஆகவே, மகாராட்டிர குடிமைப் பணிகள் விதிகள் – 1981 அய் அவர் மீறியிருக்கிறார். அவர் மீது துறைசார் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென நாங்கள் விழைகிறோம்'' என கடுமை காட்டியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

இக்கடிதத்தின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், (கீஞுண்டிஞீஞுணtடிச்டூ) தலைமையிடத் துணை ஆட்சியரின் வழியாக, "அவரது விளக்கத்தின் அடிப்படையில் அவர் மீதான நடவடிக்கை பற்றி முடிவு செய்யப்படும்' எனக் குறிப்பெழுதி, எச்சரிக்கும் விதத்தில் விளக்கம் கேட்டு, கன்பதேவுக்கு அறிவிக்கை அனுப்பியிருக்கிறார்.

“இம்மாவட்டத்தில் ஏராளமான காவல் துறையினர் உயிர்த் தியாகம் செய்திருக்கின்றனர். காவல் துறையின் கண்ணியத்தைக் குறைவுபடுத்தியும் நக்சலைட்டுகளைப் புகழ்ந்தும், ஒரு தவறான முன்னுதாரணத்தை கன்பதே உருவாக்கியிருக்கிறார்'' என இப்பிரச்சனை குறித்து சந்தித்த "தெகல்கா' பத்திரிகையிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர். ஆனால், “கன்பதேவுக்குத் தரப்படும் இத்தகைய துறைசார் நெருக்கடி, "எதிர்த் தரப்பின் நியாயங்களைப் பேச முன்வரும் ஒருவர், எதிரியாகத்தான் இருக்க முடியும் என்ற முத்திரையைச் சுமக்கப் பணிக்கப்படுவார்' என்பதை உணர்த்துகிறது'' என தனது விமர்சனத்தை முன்வைக்கிறது, தொடர்ந்து மக்கள் சார் நியாயங்களைப் பேசிவரும் "தெகல்கா' பத்திரிகை.

மாவோயிஸ்டுகளின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் பழங்குடி மக்களின் நியாயங்களைப் பேசுவதும் செயல்படுவதும், மறுமொழியாக, மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாகப் பேசுவதாகவும் செயல்படுவதாகவும்தான், முதலாளித்துவ வணிக ஊடகங்களாலும் அரசு எந்திர உறுப்புகளாலும் கணிக்கப்படுகின்றன. இக்கண்காணிப்பின் அதிகாரத்திலிருந்து, கன்பதே மட்டும் தப்பிவிட முடியுமா என்ன? 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, 9.7 லட்சம் மக்கள் தொகை கொண்ட கட்சிரோலி மாவட்டம் 1,521 கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. இவற்றில் 720 கிராமங்கள் எவ்விதத் தகவல் தொடர்பு வசதிகளும் அற்றவை. 398 கிராமப்புற பள்ளிக்கூடங்கள் இடியும் நிலையில் இருக்கின்றன. 397 அங்கன்வாடிகள் கட்டடங்கள் இல்லாதவை. 392 பள்ளிக்கூடங்கள் மின்சாரம் மற்றும் கழிப்பறை வசதிகளும் பெறாதவை.

ஆனால், நக்சலைட்டுகள் செல்வாக்கு மிகுந்த பகுதி என்பதால், காவலர்களுக்கு மாத ஊதியம் 50 சதவிகிதம் அதிகம். அதிகாரிகளுக்கு 15 சதவிகிதம் அதிகம். 12,000 ஹெக்டேர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, சுரங்க முதலீடுகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அனைத்து வசதிகளும் வாய்ப்புகளும் பெற்று, வளம் பெற்றிருக்கும் மாவட்டம் என இந்தியாவில் எதுவும் இல்லைதான் – சில மாநகரங்களைத் தவிர. ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களுக்கும் குறைபட்டுக் கொள்ள ஏராளம் இங்கு உண்டு தான். இருப்பினும் மிகவும் பின்தங்கிய, முற்றிலும் புறக்கணிக்கப்பட்ட மக்கள் குழுமத்தின் பகுதிகள் இன்று பேசுபொருளாக்கப்பட்டுள்ளன. காரணம், நச்சலைட்டுகள் என அழைக்கப்படும் மாவோயிஸ்டுகள், இப்பகுதிகளில் ஓர் அரசியல் ஆற்றலாகத் தம்மை நிலைநிறுத்தி இருப்பதால் என, மதிப்பிட்டால் அது மிகையல்ல.

பீனகோண்டா இங்கு பேசுபொருளாக்கப்படும் நிலையில், நம் நினைவில் எழுகிறது தமிழகத்தின் குண்டுப்பட்டி எனும் மலைக் கிராமம். கொடைக்கானலிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள பூம்பாறையிலிருந்து இரண்டு மலை மடிப்புகள் அளவிலான 8 கி.மீ. தொலைவில் இருக்கிறது குண்டுப்பட்டி. 1960களில் லால்பகதூர் சாஸ்திரி – சிறீமா பண்டாரநாயக ஒப்பந்தத்தின் அடிப்படையில், இலங்கை மலையகத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழர்கள் – சாதியால் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் – குடியமர்த்தப்பட்ட பகுதிதான் இந்த குண்டுப்பட்டி. தங்கள் கடும் உடலுழைப்பினால் இம்மலைச் சரிவுகளை விளைநிலங்களாக்கிய இம்மக்கள், விளைபொருட்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல சாலை போக்குவரத்து வசதிகள் கேட்டு நெடுநாள் போராடினர். 1997இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை தம் கோரிக்கையை முன்வைத்து புறக்கணித்தனர். தங்கள் வாக்கு வங்கியை இழந்ததால், ஆத்திரமுற்ற தி.மு.க. கட்சியின் குண்டர்களும் காவல் துறையும் இணைந்து, குண்டுப்பட்டி மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். ஒருவர் கொல்லப்பட, உடைமைகள் சூறையாடப்பட்டன. வாழ்க்கை உத்தரவாதம் இழந்து நின்ற மக்களைச் சில அரசியல் கட்சியினரும் சில தன்னார்வ அமைப்புகளும் தேடி வந்து ஆறுதல்படுத்தின. அந்த அக்கறை யின் பின்னே, அக்கட்சிகளுக்கும் அமைப்புகளுக்கும் அரசியல் – பொருளியல் பயன்கள் இருந்தன. மதுரையை அடித்தளமாகக் கொண் டிருக்கும் ஒரு தன்னார்வ மனித உரிமை நிறுவனம், அற்ப நிவாரணத் தொகையை அரசிடமிருந்து பெற்று, அம்மக்களிடம் வழங்கி விட்டு, அவர்களின் கோபாவேசத்தை குறுகத் தரித்தது. குண்டுப்பட்டி, கொடியங்குளம், மாஞ்சோலை என காவல் துறையின் கைரேகை பதிந்த இடங்களெல்லாம் பின்னா ளில் அரசியல் உள்ளீடற்று, பாதிப்பின் ரத்த சாட்சியங்களாக மட்டுமே நிலை பெற்றன.

ஆனால், தெலுங்கானா வேளாண்குடிகள் நடுவில் ஓர் அரசியல் ஆற்றலாக முகிழ்த்து, ஆந்திரா – ஒரிசா வனப் பகுதிகளில் வளர்ந்து, பீகாரின் வயல்வெளிகளில் சுரண்டப்பட்டுக் கொண்டிருந்த தலித் மக்களை அரவணைத்துக் கொண்டு, ஜார்கண்ட் – சட்டீஸ்கர் மலை முகடுகளில் பழங்குடி மக்களின் நம்பிக்கை ஒளியாகவும் நீடித்து வாழ்கிறது நக்சல்பாரி இயக்கம். கரீம் நகர், வாரங்கல், மங்காங்கிரி, லால்கர், பஸ்தார், தண்டகாரண்யம், கட்சிரோலி என பேசு பொருளாக்கப்பட்டிருக்கும் பெயர் களெல்லாம் பாதிப்பின் சாட்சியங்கள் அல்ல. மாறாக, அரசுப் படைகளுக்கு நெடுநாட்களாக அச்சம் ஊட்டிக் கொண்டிருக்கும் எதிர்ப்பின் அடையாளங்கள். தம்மைத் தற்காத்துக் கொள்ள ஆயுதங்களும் தேவை என்பதை, அரசியல் சிந்தனையாகவும் போராட்ட வழிமுறையாக வும் ஏற்றுக் கொண்டிருக்கும் தளப்பகுதிகள்.

இந்தியாவின் பிற பகுதிகளில் தலித் – பழங்குடி மக்களை நடத்துவது போல, சாதி வெறியர்களும் அரசுப் படைகளும் இப்பகுதிகளில் அவ்வளவு எளிதில் அணுகிவிட முடியாது. அப்படியேயாயினும், அதற்கான விளைவுகளை அவர்கள் கால தாமதமின்றி அனுபவிக்க நேர்கிறது. மக்களின் மீதான உண்மையான அக்கறையும், நீடித்த செயல்திட்டங்களும், வலுவான அரசியல் கட்டமைப்பும் இன்றி வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தலித் அமைப்புகள் யாவையும் போராடும் மக்களுடன் நிரந்தரமாகப் பயணிப்பவை அல்ல. நக்சல்பாரிகளோ மக்களுடனேயே வாழ்கின்றனர்.

துறைசார் நெருக்கடியையும் நடவடிக்கைகயையும் புறந்தள்ளி, மீண்டுமொரு முறை கட்சிரோலியின் உள்ளடர்ந்த அபுஜ்மார் வன கிராமங்களுக்குச் செல்லவும் நக்சலைட்டுகளைச் சந்திக்கவும் ஆவல் கொண்டிருப்பதாகக் கூறும் கன்பதே, "அநீதியை எதிர்ப்பதில் நீங்கள் உண்மையாகவும் உறுதியாகவும் இருந்தால், ஏன் துப்பாக்கியைத் தூக்க வேண்டும்?' என அவர்களிடம் கேட்க விரும்புவதாகக் கூறுகிறார். இதே கேள்வியை பீனகோண்டா கிராம மக்களிடம் கன்பதே எழுப்பியபோது, “நாங்கள் எங்களை அர்ப்பணிக்கும்போதுதான், எங்கள் மீதான அநீதிகளையும் நக்சலைட்டுகளால் துடைத்தெறிய முடியும்'' என உறுதிபடக் கூறியுள்ளனர் அம்மக்கள்.

அர்ப்பணிப்பு என்ற பதத்தின் பொருளை கோழைகள் அறியமாட்டார்கள். அது சக மனிதனுக்காக தன் சுக துக்கங்களைத் துறந்து, தன்னைச் சூழ்ந்திருக்கும் சமூக வாழ்க்கையின் பொறுப்புகளிலிருந்து விலகி நிற்காமல் இருப்பது. எதிரியிடம் அடிபணியாமல் தன்னை நிலைநிறுத்துவது. அடிப்படையில் அது சுயமரியாதையை வெளிப்படுத்துவது. போராட்ட உணர்வைத் தீர்மானகரமாக்குவது – அர்ப்பணிப்பு ஆற்றலே. ஆயுதங்கள் வெறும் கருவிகள் மட்டுமே. அவை போராளிகளின் தற்காப்பு உபகரணங்கள், அவ்வளவே. மேலும், அவற்றின் தேவையைத் தீர்மானிப்பது போராளிகளோ மக்களோ அல்ல. ஒடுக்கி, அழிக்க விழையும் எதிரிகளே. மக்களை விலைபேசும் தலைவர்கள் கோழைகள் மட்டுமல்லர், துரோகிகளும்கூட. ஆனால், மக்களோடு உரையாடவும் போராளிகளோடு விவாதிக்கவும் முன்வரும் கன்பதே போன்றவர்களோ எக்காலமும் பெருமதிப்புக்கு உரியவர்களே!

நன்றி: தலித் முரசு மற்றும் கீற்று இணையதளம்.

குறிப்பு: இதன் முதல் பகுதியிலிருந்து, பதினொன்றாம் பகுதி வரை ஜீலை மாதம் பதியப்பட்டுள்ளது. படிக்க விரும்புவோர் படித்துக் கொள்ளலாம்.

பார்வையாலே நகலெடுத்தவர் !


ஜான் ஆல்பர்ட் ராண்டி என்பவர் 18-ம் நூற்றாண்டில் போலாந்து நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர். வாழ்ந்த புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்.

இவர் சுவீடனில் உள்ள உப்சாலா, ஸ்டாக்ஹோம் நகரங்களுக்குச் சென்று அங்குள்ள அரசு நூலகங்களில் சில முக்கிய வரலாற்று நூல்களைப் பிரதியெடுக்க விரும்பினார்.

அரசாங்கம் அதற்கு அனுமதி தரவில்லை. நூல்களை அங்கேயே உட்கார்ந்து படிக்கலாமே தவிர பிரதி எடுக்க கூடாது என்று கூறிவிட்டனர்.

எனவே, ஆல்பர்ட் ராண்டி அந்த நூலகத்தில் அமர்ந்து தேவைப்படும் நூல்களைக் கவனத்துடன் படித்து மனதில் பதியவைத்துக் கொண்டார். பின்னர் இரவில் அவற்றை ஞாபகப்படுத்தி, எழுதிவைத்துக் கொண்டார். இவ்வாறு, தேவையான நூல்களின் முக்கியப் பகுதிகளைப் பிரதி எடுத்துவிட்டார் ராண்டி.


தகவல் : தினத்தந்தி.

குறிப்பு : திரு.ஜான் ஆல்பர்ட் ராண்டியின் படம் கிடைக்கவில்லை. இது உதாரணத்திற்க்கு வைக்கப்பட்ட படம்.

146 மொழிகள் கற்றவர் !


டென்மார்க்கைச் சேர்ந்த பேராசிரியர் கிறிஸ்டியன் ராஸ்க். இவர் 1832-ம் ஆண்டு வரை 45 ஆண்டுகள் வாழ்ந்தார் . இவருடைய மிக முக்கிய சிறப்பு என்னவென்றால் , இவர் அறிந்திருந்த மொழிகள் மொத்தம் 146.

எந்த மொழியிலும் நல்ல தேர்ச்சி இருந்தால்தான் அம்மொழியில் அகராதியைத் தொகுக்க முடியும். 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் அகராதியைத் தொகுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல், பல பூர்வகுடிகளின் மொழிகளையும் அறிந்திருந்தார். இதுவரை யாரும் சாதித்திராததைச் செய்து காட்டிய பேராசிரியர் கிறிஸ்டியன் ராஸ்க்கை 'பிறவி மேதை' என்றே குறிப்பிடுகிறார்கள்.


தகவல் : தினத்தந்தி.

Friday, August 26, 2011

காலத்தின் மதிப்பு !


பிக்காஸோ புகழ்பெற்ற ஒரு ஒவியர். இன்றும் அவரது ஒவியங்கள் பல கோடி ரூபாய் விலைக்கு விற்கிறது. ஒரு முறை அவர் பூங்கா ஒன்றில் தனிமையில் உலவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் அவரை அடையாளம் கண்டு கொண்டாள். அவரிடம் வந்து, " நீங்கள் பிக்காஸோதானே ?" என்று சந்தேகத்துடன் கேட்டாள். பிக்காஸோவும் சிரித்துக் கொண்டே "ஆமாம்" என்றார்.

உடனே அந்த பெண் " நீங்கள் பெரிய ஒவியர் என்று கேள்விப்பட்டிருக்கிருக்கிறேன். என்னை உங்களால் வரைய முடியுமா ?" என்று கேட்டாள். இது போன்ற கோரிக்கை பிக்காஸோவுக்கு வந்ததில்லை. அந்தப் பெண்ணின் ஆர்வத்தை அவர் மறுக்க விரும்பவில்லை. உடனே ஒரு காகிதத்தை எடுத்து அந்தப் பெண்ணின் முகத்தை வரைந்து கொடுத்துவிட்டார். அதற்கு அவர் எடுத்துக் கொண்ட நேரம் முப்பது வினாடிகள்.

பெண்ணுக்கு ஆச்சரியம் ! "ரொம்ப அழகாக வரைந்துள்ளீர்கள்!" என்று மகிழ்ச்சியடைந்தார்.

" இந்த ஒவியத்தை நீ விற்றால் பல லட்சம் டாலர் கிடைக்கும்" என்று அவளிடம் சொன்னார் பிக்காஸோ. இதைக் கேட்டதும் அந்தப் பெண்ணுக்கு இன்னும் ஆச்சரியம்.

"என்னது பல லட்சம் டாலரா ? படம் வரைய முப்பது வினாடிகள்தானே ஆயிற்று ?"

உடனே, பிக்காஸோ சிரித்துக் கொண்டே, "ஆமாம், ஆனால் இந்த நிலையை அடைய எனக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று" என்றார்.


தகவல் : குமுதம் வார இதழ்.

Thursday, August 25, 2011

ஏழு கிழமைகள் உருவான விதம்!

வாரத்தின் ஏழு கிழமைகளுக்கும் பெயர் வைத்தவர்கள் பண்டைக்கால ஸ்காண்டிநேவிய நாட்டு அறிஞர்கள்தான்.

உலகுக்கெல்லாம் ஒளி பரப்பி, எல்லா உயிர்களையும் காக்கும் ஞாயிறுக்கு நன்றி சொல்லும் விதமாக வாரத்தின் முதல் நாளை ஞாயிற்றுக் கிழமை (Sunday) என்றழைத்தார்கள்.
அந்த சூரியனிடமிருந்து சக்தி பெற்று இரவில் ஒளிதரும் திங்களுக்கும் நன்றி இரண்டாம் நாள் திங்கட்கிழமை (Monday) ஆனது.


ஸ்காண்டிநேவியரின் போர்க்கடவுளான Tyr-க்கு மரியாதை தரும் வகையில் மூன்றாம் நாள் (Tuesday) என்றானது.


அவர்களுடைய மன்னன் பெயரான Wodin பெயரை நான்காம் நாளுக்கு ( Wednesday) என்று வைத்தார்கள்.

ஐந்தாம் நாள் அவர்களுடைய இடி கடவுளான Torஐ நினைவூட்டும் வகையில் (Thursday) என்றழைக்கப்பட்டது.

அந்நாட்டு மகாராணியின் பெயர் Frigg. இவரை சிறப்பிக்க ஆறாம நாளை (Friday) என்று கொண்டாடினார்கள்.

அவர்களுடைய விவசாய தெய்வமான Saturn. ஏழாம் நாளான சனிக்கிழமைக்கு (Saturday) பெயர் தந்தார்.


தகவல் : முத்தரம்

வறுமை - தத்துவவாதிகள் சொத்தா ?

தத்துவத்துக்கு வறுமை, செல்வம் இரண்டும் ஒன்றே !

பிளாட்டோ, ரஸ்ஸல் போன்ற மிக வசதியாக வாழ்ந்த தத்துவ மேதைகளும் உண்டு. மார்க்கஸ் அரேலியஸ், ரோம் நாட்டின் மன்னர். அதுவே, டயோஜினீஸ் போல, கோவணத்துடன் அழைந்த தத்துவவாதிகளும் உண்டு.

கி.மு.341-ல் பிறந்த எபிக்யூரஸ் என்கிற தத்துவ அறிஞர் 'மனிதனுக்கு உடல்ரீதியாக மகிழ்ச்சியான, சுகமான, ருசியான விருந்து என்பது உன்னதமான ஒன்று. அதுவும் நல்ல நண்பர்களோடு அமர்ந்து விருந்து உண்பதற்கு இணையே கிடையாது !' என்றார். இது கேட்டு மற்ற தத்துவ அறிஞர்கள் கடுப்படைந்தார்கள்.










எபிக்யூரஸ்







அகராதியின் படி Epicurean என்றால் மகிழ்ச்சிக்காக வாழ்வது (devoted to pleasure) என்று பொருள். ஆனால்,உண்மையில் எபிக்யூரஸ் எளிமையான வாழ்க்கையைத்தான் பின்பற்றினார் என்பது பிற்பாடுதான் தெரிய வந்தது. எபிக்யூரஸ் சொன்ன இன்னொரு விளக்கம் ' செல்வம் ஒரு பிரச்சனை அல்ல. அதற்காக கூச்சப்படவும் வேண்டியது இல்லை.

ஆனால், நிறைய பணம் இருந்தும் சிறந்த நண்பர்கள், சுதந்திரம், ஆராயப்படாத வாழ்க்கை இல்லாமல் போனால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. பணம் இல்லை என்றாலும், இதெல்லாம் இருந்தால் போதும். மகிழ்ச்சியாக வாழ முடியும். அதுவே, இதெல்லாம் இல்லாமல் பணம் மட்டுமே இருந்தால். அது மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லை.


தகவல் : மதன், விகடன்

Wednesday, August 24, 2011

'நானே தூக்கில் ஏறும் கடைசி ஆளாக இருக்கட்டும்!''


ழப் படுகொலைகள் உண்​டாக்கிய துயரமே தமிழக மனங்​களில் ரணமாக வடியும் நிலையில், தூக்குக் கயிறு வடிவில் மீண்டும் துரத்தத் தொடங்கி இருக்கிறது துயரம். ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் மரணத்தின் நிழலில் நிற்கிறார்கள். தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தளர்த்தக்கோரி இவர்கள் அனுப்பிய கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டுவிட்டது. மூவரை​யும் காப்பாற்றக் கோரி கட்சி வேறு​​பாடுகளைக் கடந்து தமிழகம் முழுக்க உணர்வும் உருக்கமுமான போராட்​டங்கள் நடக்கின்றன. மரணத்தின் துரத்தலில் வாடும் அந்த மூவரின் மனப் போராட்டங்களையும் அறிய முடிவெடுத்​தோம். வழக்கறிஞர்கள் ராஜீவ் காந்தி, பாலாஜி மூலமாக கேள்விகளை அனுப்பி வைத்தோம். அதன் தொகுப்பு இங்கே...

முதலில் பேரறிவாளன்...

''எந்த நேரத்திலும் தூக்கு அறிவிப்பு வரலாம் என்கிற நிலையை எப்படி எதிர்கொள்​கிறீர்கள்?''

'முதலில் எங்களுக்காகப் போராடும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம். தூக்குத் தண்டனை அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே மரணத்தின் நிழலில்தான் நிற்கிறோம். கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதில் மரண நிழல் எங்களைப் பெரிதாக சூழ்ந்திருக்கிறது. மக்களின் ஒருமித்த கைகோப்பு எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் வெளிச்சத்தையும் உருவாக்கி இருக்கிறது. 19 வயதில் உள்ளே வந்தவன். 21 வருடங்கள் இந்தச் சிறையிலேயே பெருவலியோடு கழிகிறது. தூக்கு அறிவிப்பை இந்த வலியில் இருந்து விடுபடும் நாளாக எண்ணி என்னைத் தேற்றிக்கொள்ளும் நிலையில்தான் இருக்கிறேன்!''

''தமிழக மக்களிடம் நீங்கள் சொல்ல நினைக்கும் கருத்து?''

''அரசியல் பாகுபாடு பார்க்காமல் அனை​வரும் எங்களுக்காகப் போராடுவது எங்களின் கண்ணீரைத் துடைத்து இருக்கிறது. இன உணர்வு மட்டும் அல்லாது, மனிதநேயமும் ஒருசேர்ந்த போராட்டம் எங்களை சிலிர்க்க வைத்திருக்கிறது. பொதுமக்களும் அனைத்துத் தலைவர்களும் ஒரே அணியில் நின்று தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராட வேண்டும் என்பதுதான் எங்களின் விருப்பம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒருமித்த உணர்வோடு திரண்டு தமிழக முதல் அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்தால், நிச்சயம் அவர் எங்களின் விடிவுக்கு வழி செய்வார். அவருடைய குரல் எங்களுக்காக காத்திருக்கும் கயிறை நிச்சயம் அறுத்தெரியும்!''

''தமிழக முதல்வரிடம் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?''

''மிகுந்த அறிவும் ஆய்ந்தறியும் பேராற்றலும் கொண்டவர் நீங்கள். இந்த வழக்கில் இருக்கும் குளறுபடிகளை நிச்சயம் அறிந்திருப்பீர்கள். அம்மா, மரணம் கோரப்பசியோடு துரத்தும் இந்த நேரத்தில் மட்டும் அல்ல... 20.07.07 அன்றே உங்களுக்கு நான் ஒரு கடிதம் எழுதினேன். 'வழக்கில் சிக்குபவர்களுக்கு வசதி இல்லை என்றால், அவர்களின் தரப்பு நியாயம் அம்பலம் ஏறாமல் போய்விடும். அத்தகைய குறைபாடு கொண்ட கட்டமைப்புதான் இன்றைக்கு நிலவுகிறது. என்ன தவறு செய்தோம் என்றே தெரியாமல் இத்தனை நாள் மரணத்தின் மடியில் படுத்துக் கிடப்பவனாகக் கேட்கிறேன்... தயவுசெய்து தூக்குத் தண்டனைக்கு எதிராகக் குரல் கொடுங்கள்!’ என அந்தக் கடிதத்தில் உங்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். பிறருக்கு முன்னுதாரணமான சட்டத் திருத்தங்களைக் கொண்டுவருகிற சக்தி உங்களுக்கு மட்டுமே இருக்கிறது.மனசாட்சியின் கண்ணீர்க்குரலாகச் சொல்கிறேன்... எங்களுக்குத் தெரிந்து எதுவும் நடக்கவில்லை. சித்திரிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்காக இத்தனை வருடங்கள் வாடும் எங்களுக்காக உங்களின் ஒற்றைக் குரல் ஒலித்தால் போதும் அம்மா!''

''கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் மரணம் நெருங்கிவிட்டதாக நினைக்கிறீர்களா?''

''99-ம் ஆண்டு மனித உரிமை ஆர்வலர் ஹென்றி டிஃபேன் என்னைப் பார்க்க வந்தார். 'வெளியே வந்தால் என்ன செய்வீர்கள்?’ எனக் கேட்டார். 'தூக்குத் தண்டனைக்கு எதிராகப் போராடுவேன்’ எனச் சொன்னேன். காரணம், தூக்கு அறிவிக்கப்பட்ட ஒருவனின் ஒவ்வொரு நிமிஷமும் எத்தகையக் கொடூரமானது என்பதை அனுபவப்பூர்வமாக அறிந்தவன் நான். வெளி உலகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க இப்போது ஆசையாக இருக்கிறது. சிறு குழந்தையின் தவிப்பாக மனது ஏங்குகிறது. எங்​களுக்காகப் போராடும் மக்களை நேரில் பார்த்து கைகூப்பத் தோன்றுகிறது. ஆனால், ஏற்கெனவே பரப்பிய பழிகள் போதாது என 'சாத்தானின் படைகள்’ என்கிற புத்தகத்தை நான் அச்சடித்ததாக சிலர் இப்போது கிளப்பிவிடுகிறார்கள். அந்தப் புத்தகத்தை யார் உருவாக்கியது என்பது சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நன்றாகத் தெரியும். அப்படி இருந்தும் என்னை இட்டுக்கட்டுவது ஏன்? ஜோடிக்கப்பட்ட இந்த வழக்கில் ஒருவேளை மரணம் எங்களை வென்றுவிட்டால், கயிற்றின் முன்னால் நின்று நான் சொல்ல நினைப்பது... தூக்குக்குப் பலியாகும் கடைசி ஆள் நானாக இருக்கட்டும் என்பதுதான்!''


அடுத்து முருகன்...

''தமிழகத்தில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறதா?''

''மரணத்தைவிட மரணத்தின் நாளுக்காகக் காத்திருப்பது கொடுமையானது. அதை ஒவ்வொரு கணமும் அனுபவிக்கும் இந்த சூழலில், மக்களின் ஆதரவுதான் எங்​களை நம்பிக்கையோடு நிமிர வைக்கிறது! தனித்தனியான போராட்டங்களை முன்னெடுக்​காமல், எங்களுக்காக எல்லோரும் ஒருமித்து நிற்க வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கை. இதர மாநிலங்களில் தண்ணீர் பிரச்னைக்குகூட அனைத்துக் கட்சிகளும் ஒன்றாகத் திரளுகின்றன. எங்களின் கண்ணீர் பிரச்னைக்கும் அதேபோல் அனைத்துக் கட்சிகளும் திரண்டு, முதல்வரிடம் கோரிக்கை வைக்க வேண்டும். மூன்று உயிர்களுக்காக மொத்த தமிழகமும் கைகோத்து நின்றதை காலக் கல்வெட்டு தமிழனின் உயர்ந்த உணர்வாகப் பதிவு செய்ய வேண்டும்!''

''தமிழக மக்களிடம் ஏதாவது சொல்ல விரும்பு​கிறீர்களா?''

''எங்கள் மீதான குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மை இல்லை. மரணத்துக்குப் பயந்து இந்த வார்த்தை​களைச் சொல்லவில்லை. எங்களின் கவனத்துக்குத் தெரியாமல் நடந்த சம்பவத்துக்கு இத்தனை வருட சிறைவாசமே பெரிய கொடுமை. ஒப்புதல் வாக்குமூலத்தில் நாங்களே பல விஷயங்களை ஒப்புக்கொண்டதாக விசாரணை அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், ஒப்புதல் வாக்குமூலத்தை அவர்களே தயாரித்து எங்களை அதில் கையெழுத்துப் போடச் சொன்னார்கள். அதற்காக அவர்கள் செய்த சித்ரவதைகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மரணக் கொட்டடியின் நெருக்கடிகள் எங்களுக்குப் பழகிப்போனாலும், என்றைக்காவது ஒருநாள் வெளியே வருவோம் என்கிற நம்பிக்கை இருக்கிறது. உறவுகளின் உணர்வுகளால் அந்த நம்பிக்கைப் பலப்படுகிறது. ஒரே வார்த்தையில் எங்களின் உணர்வைச் சொல்வதானால்.... நன்றி!''

அடுத்து ம.தி.சாந்தன்...

''ராஜீவ் கொலை விசாரணையில் நிறைய குளறு​படிகள் நடந்ததாகச் சொல்கிறார்களே...?''

''கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத நாங்கள் குற்றவாளிகளாக நிற்கிறோம். இந்த வேதனையைக் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால்தான் புரியும்.

கொழும்பு வழியாக வெளிநாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது பாதுகாப்பானது அல்ல என்பதாலேயே நான் இந்தியாவுக்கு வந்தேன். இலங்கை அரசு தந்த உண்மையான பாஸ்போர்ட்டுடன் வந்தேன். அதை சி.பி.ஐ. கைப்பற்றி உள்ளது. ராஜீவ் போன்ற பெரிய தலைவரைக் கொல்ல வருபவன் தன்னைப் பற்றிய தகவலைச் சொல்லும் உண்மையான பாஸ்போர்ட்டுடன் வருவானா?

நான் சுமக்கும் மரண தண்டனைக்குப் பெயர் குழப்பமும் ஒரு காரணம். இந்த வழக்கில் கைதாகி விடுதலையான இரும்பொறை என்பவரை நான் ராஜீவ் இறப்பதற்கு முன்னர் சந்தித்ததாகவும், 15 ஆயிரம் பணம் கொடுத்ததாகவும், 'முக்கியமான ஒரு நபரைக் கொல்லப் போகிறோம்’ என்று சொன்னதாகவும் மரண தண்டனையை உறுதி செய்தபோது மாண்புமிகு நீதிபதி கே.டி.தாமஸ் அவர்கள் கூறுகிறார். ஆனால், மாண்புமிகு நீதிபதி வாத்வா அவர்கள் அது இறந்துபோன எதிரி திருச்சி சாந்தன் என்கிறார். இன்னொருவர் சொன்னதை நான் சொன்னதாகச் சொல்லி என்னைத் தூக்கில் நிறுத்தப் போகிறார்கள்.

'நானும் சிவராசனும் நளினியை மிரட்டி இந்த​சதிக்கு உடன்பட வைத்தோம்’ என்று நீதிபதி தாமஸ் சொல்கிறார். ஆனால், நீதிபதி வாத்வா, 'ராஜீவ் இறந்த அடுத்த நாள்தான் நளினியை சாந்தன் அறிவார்’ என்கிறார்.

நான் புலிகள் அமைப்பின் உளவுப் பிரிவில் முக்கியமான ஆள் என்பதற்கு ஆதாரம் இருப்பதாக நீதிபதி தாமஸ் தீர்ப்பில் சொல்கிறார். இவை எதற்கும் ஆதாரம் இல்லை. விடுதலையான இரும்பொறையுடன் நான் சம்பந்தப்பட்டிருந்தேன் என்றோ, நளினியை மிரட்டினேன் என்றோ சி.பி.ஐ.கூடச் சொல்லவில்லை. ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை அவரிடம் கூறி அவரது பதிலை விசாரணை நீதிமன்றம் பதிவு செய்ய வேண்டும். ஆனால் என் விஷயத்தில் இது செய்யப்படவில்லையே.. எப்படி?

சிவராசனின் பணத்தை முதலில் காந்தன் என்பவர் கையாண்டார். அவரிடம் இருந்து நான் அந்தப் பொறுப்பினை எடுத்துக்கொண்டதாக நீதிபதி வாத்வா அவர்கள் தீர்ப்பில் கூறுகிறார். சிவராசனின் பணத்தை நான் பாதுகாத்து கொடுத்ததாகவோ கையாண்டதாகவோ விசாரணை நீதிமன்றம் என்னிடம் கேட்டுப் பதிவு செய்யவில்லை. இப்படி எல்லாம் குளறுபடிகள் நடந்தன. குளறுபடிகளே எங்களுக்கான முடிவுப் படிகளாக மாறிவிட்டன!''

''கருணை மனு நிராகரிக்கப்பட்டது தெரிந்த உடன் என்ன நினைத்தீர்கள்?''

''என் தந்தை ஆறுமுகம் தில்லையம்பலம் அவர்களின் நினைவு வந்தது. அவருக்கு இப்போது 70 வயது. இறுதிக்கட்டப் போருக்குப் பிறகு அவரிடம் இருந்து எந்தத் தகவலும் இல்லை. அதற்கு முன்னர் அங்கு விவசாயம் செய்துகொண்டு இருந்தார். அவர் எப்படி இருக்கிறார் என்கிற கவலை என்னைப் பெரிதாக வருத்துகிறது. பெற்ற தகப்பன் இருக்கிறாரா இல்லையா என்பதை நினைத்து அழுவதா? நான் இருப்பேனா மாட்டேனா என்பதை நினைத்து அழுவதா? இந்த அப்பனும் மகனும் விதியெனும் கையில் சிக்கிய விளையாட்டுப் பொம்மைகளாய் அல்லாடுகிறோம்!''

- இரா.சரவணன்

நன்றி : விகடன்


நம்புங்க நண்பா....


ஏப்ரல் முதல் தேதியான முட்டாள் தினத்தன்றுதான் ஆப்பிள் கணினி கண்டுபிடிக்கப்பட்டது.



இடது கைப் பழக்கம் உள்ளவர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆண்களே.



தண்ணீரின் எடையில் 98 சதவிகிதம் ஆக்சிஜனே.




பழங்களின் தோல்களில்தான் அதிகபட்ச வைட்டமின் சி இருக்கிறது.



யானை அதன் கட்டை விரல் நுனியை ஊன்றியே நடக்கின்றன.

Tuesday, August 23, 2011

முதன் முதலாய்......


முதல் தொலைக்காட்சி நிலையம் டெல்லியில் 1951 செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலாக தபால் முறையைக் கொண்டு வந்தவர் ராபர் கிளைவ். காஷ்மீரில் உள்ள ஏரி தபால் நிலையமே நாட்டின் மிதக்கும் தபால் நிலையம்.

1858ம் ஆண்டு மும்பையிலிருந்து வெளியான ஸ்திரிபோதா என்ற பத்திரிக்கைதான் முதன் முதலாக வெளியான பெண்கள் பத்திரிக்கை.

முஸ்லிம் மன்னர்களில் ஒருவரான அலாவுதீன் கில்ஜிதான் மதுவிலக்கைச் சட்டபூர்வமாக்கினார்.

நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம்தான் தமிழகத்தின் முதல் ஆஸ்தான அரசக்கவி.


தகவல்: முக்கிமலை நஞ்சன், நீலகிரி.

தகவல் 1.2.3.4.5.......

தலைகவசத்தை உருவாக்கியவர் உலகின் தலை சிறந்த நரம்பியல் சிகிச்சையின் மேதை சர்ஹக் கெயிர்னஸ்.

Add Image
அமெரிக்காவில் 1000 பேர்க்கு 950 பேர் நான்கு சக்கர வாகனம் பயன்படுத்துகின்றனர். அதுவே இந்தியாவில் 1000க்கு 8 என்ற விதத்தில் உள்ளது.
வெள்ளை பூண்டில் 43 வகையான சத்துக்கள் உள்ளன.

ஜியோ என்ற கிரேக்க வார்த்தையின் பொருள் உலகம்.

சாக்லேட்டில் உள்ள நச்சுப் பொருள் நிக்கல்.


தகவல் : ராஜசேகர், செய்யாறு.

Monday, August 22, 2011

யானைகளுக்கும், மனிதர்களுக்குமான புரிதல்கள்....



கர்நாடகத்தில் வனப்பகுதி அருகே அமைந்துள்ள வரலாற்று நகரம் மைசூர். இங்கு காட்டு யானைகளுக்கு பஞ்சம் இல்லை. கடந்த ஜீன் மாதம் 8-ந்தேதி மைசூர் நகரில் திடீரென்று 4 காட்டு யானைகள் புகுந்தன. அதிகாலை 5 மணியளவில் மைசூர்-பெங்களூர் சாலையில் சர்வசாஹ்டாரணமாக உலா வந்த இந்த யானைகளால் பொதுமக்கள் நிம்மதி இழந்து அதிர்ச்சியுடன் காணப்பட்டனர்.

அந்த யானைகளில் ஒன்று ஏ.டி.எம்.காவலாளி ஒருவரை மிதித்து கொன்றது. இதனால் மக்களின் பீதி மேலும் அதிகரித்தது. யானைகளால் ஏற்பட்ட இந்த அதிர்ச்சியை நினைத்து மைசூர் மக்கள் இன்று நடுங்குவது உண்டு.

இந்த நிலையில் மைசூரில் நேற்று 2 யானைகள் மதம் பிடித்ததை போல இங்கும் அங்கும் ஒடி மக்களை மீண்டும் பீதிக்கு உள்ளாக்கியது. இந்த பரபரப்பான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

மைசூர் சாமுண்டிமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது சுத்தூர் மடம். இந்த மடத்தில் "மாஸ்தி" என்ற 22 வயது ஆண் யானையும், "லட்சுமி" என்ற 12 வயது பெண் யானையையும் பராமரித்து வருகின்றனர். தினந்தோறும் இந்த இரண்டு யானைகளையும் அதன் பாகன்கள் நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்று வருவது வழக்கம். நேற்று காலையில் வழக்கம் போல 2 யானைகளையும் நடைபயிற்சிக்காக அதன் பாகன்கள் அழைத்துச் சென்றனர்.

நஞ்சன்கூடு சாலை வழியாக நடைபயிற்சி சென்ற அந்த யானைகள் மீண்டும் நஞ்சுமளிகே சாலை வழியாக மடத்தை நோக்கி நடந்து வந்து கொண்டு இருந்தன. " மாஸ்தி" யானை முன்னால் நடந்து செல்ல, அதை பிந்தொடர்ந்து "லட்சுமி" சென்று கொண்டிருந்தது. சாமுண்டிபுரத்தில் உள்ள சர்க்கிள் அருகே யானைகளை அதன் பாகன்கள் அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது இந்த யானைகளுக்கு பின்புறத்தில் இருந்து ஆம்புலன்ஸ் வேன் ஒன்று ஒலி எழுப்பியபடி வந்தது.

அந்த சத்தத்தை கேட்டு "மாஸ்தி" ஆண் யானை மதம் பிடித்தது போல மிரண்டு ஒட்டம் பிடித்தது. யானை மீது அதன் பாகனும் அமர்ந்து இருந்தார். "மாஸ்தி" யானை ஒடுவதை கண்டு "லட்சுமி" யானையும் ஒடியது. 2 யானைகளும் சாலையை விட்டு திசை மாறி தெரு தெருவாக ஒடத் தொடங்கியது. இதனால் மிரண்டு போன பொது மக்கள் அங்கும் இங்குமாக சிதறி ஒடினர். சிலர் தங்கள் வீட்டுக்குள் கதவை பூட்டிக் கொண்டனர். ஒரு வழியாக லட்சுமி யானையை அதன் பாகன் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். ஆனால் "மாஸ்தி" யானை மட்டும் கட்டுக்குள் அடங்காமல் தொடர்ந்து ஒட்டம் எடுத்தது.

எனவே "மாஸ்தி" யானைக்கு மதம் பிடித்து இருக்கலாம் என்று கருதிய பாகன்கள் அதனுடன் "லட்சுமி" யானையை சேர்க்க முடிவு செய்தனர். அதன்படி லட்சுமி யானையை அருகில் அழைத்துச் சென்றனர். ஆனால், அதை கண்டு கொள்ளாத " மாஸ்தி" தனது தந்தத்தால் "லட்சுமி"யை குத்தி விரட்டி அடித்தது. இதனால் லட்சுமி யானையும் அங்கிருந்து ஒட்டம் பிடித்தது. லட்சுமியின் பாகனையும் மாஸ்தி யானை தந்தத்தால் குத்த முயன்றது. இதனால் அங்கு பெரும் பீதி ஏற்பட்டது.

யானையின் மீது அமர்ந்து இருந்த பாகன் "மாஸ்தி"யை அடக்க முயன்றும் முடியவில்லை. தொடர்ந்து ஒடிய "மாஸ்தி", அருகில் இருந்த மரத்தில் தலை மற்றும் முதுகுபுறத்தால் உரசியபடி இங்கும் அங்கும் வேகமாக அசைந்தது. இதனால் பயந்து போன பாகன் யானை மீது இருந்தே அந்த மரத்தில் தாவி அமர்ந்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த யானை, அந்த மரத்தை அசைக்கத் தொடங்கியது. மரத்தின் மீதிருந்த பாகனை நோக்கி துதிக்கையை தூக்கிய வண்ணம் நின்று கொண்டே இருந்தது.

இதற்கிடையே இதுபற்றிய தகவல் மைசூர் நகரில் காட்டுத் தீப்போல பரவியது. ஏராளமான மொதுமக்கள் அங்கு திரண்டனர். உயிரை கையில் பிடித்தபடி இந்த பரபரப்பான காட்சியை பார்த்த பொதுமக்கள் அலறி அடிது ஒட்டம் பிடித்தனர். யானையை அடக்குவதற்கு பாகன் எவ்வளவோ சிரமப்பட்டார். ஆனால், அவரது பேச்சுக்கு யானை கட்டுப்படவில்லை. தொடர்ந்து அட்டகாசத்தில் ஈடுப்பட்டது.

இந்நிலையில் மைசூர் தசரா யானைகள் நேற்று காலையில் நடைபயிற்சி முடிந்து அரண்மனை நோக்கி சென்று கொண்டிருந்தது. உடனடியாக இதுப்பற்றி தகவல் தசரா யானை பாகன்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்படி கஜேந்திரா உள்ளிட்ட 6 தசரா யானைகளும் சம்பவ இடத்துக்கு கொண்டு வரப்பட்டன. அட்டகாசம் செய்து கொண்டிருந்த மாஸ்தி என்கிற ஆண் யானை, தசரா யானைகளின் கூட்டத்தை கண்டதும் அமைதி அடைந்தது. இதைத் தொடர்ந்து பாகன்கள் மாஸ்தி யானையின் காலில் சங்கிலியை கொண்டு கட்டினர். பின்னர் லட்சுமி மற்றும் மாஸ்தியை மடத்துக்கு அழைத்துச் சென்றனர். அதற்கு தேவையான உணவுகளை பாகன்கள் வழங்கினார்கள். இதனால் மாஸ்தி இயல்பு நிலைக்கு திரும்பியது.

வளர்ப்பு யானை என்பதால் மாஸ்தியால் பொது மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அட்டகாசம் செய்த ஒரு சில மணி நேரத்தில் அதை பாகன்கள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். இதுவே காட்டு யானை என்றால் அதனை இயல்பு நிலைக்கு கொண்டு வர கடுமையான போராட்டம் நடத்தி இருக்க வேண்டும்.

இது போன்ற செய்திகள் குறித்து சுற்றுபுற சூழல் ஆர்வலர் பா.சதீஸ் முத்து கோபால் கருத்து தெரிவிக்கையில் :-

ஒரு நாள் யானை ஊருக்குள் புகுந்து செய்த நாசங்களை இவ்வளவு தெளிவாக காட்டும் ஊடகங்கள், மனிதர்கள் காட்டிற்குள் சென்று செய்யும் அக்கிரமங்களை காட்டியதில்லை.

மாடுகளின் மேய்ச்சலுக்காக வனங்கள் தீ வைக்கப்படுகின்றன. அவை கட்டுக்கடங்காது பரவி பல சமயங்களில் ஏராளமான வனப் பகுதிகள் தீக்கிரையாகின்றன.

வனப் பகுதிகளில் சாலைகள் போடப்படுகின்றன.

வனப் பகுதிகளில் ரயில் பாதைகள் அமைக்கப்படுகின்றன. அவற்றால் பல யானைகள் உயிரிழந்தன.

வாகனங்கள் பயன்படுத்தும் அதிக டெசிபல் ஒலிப்பான்களால் வன விலங்குகள் அச்சமடைந்து வேறு பகுதிக்குள் நுழைகின்றன.

ஞெகிழிக் கழிவுகள் வனங்களில் போடப்பட்டு, அவற்றை உண்டு ஏராளமான உயிர்கள் மடிகின்றன.

வெட்டப்படும் மரங்களால் உணவு பற்றாக்குறை ஏற்படுகிறது. இன்று வனங்களில் விலங்குகளுக்கு போதுமான தண்ணீர் கூட இல்லாத சூழல் நிலவுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக தந்தங்களுக்காக யானைகள் வேட்டையாடப்படுகின்றன.

இவை எல்லாவற்றையும் என்றைக்காவது, தொடர்ந்து ஆறு மணி நேரம் எந்த ஊடகமாவது செய்தி ஒளிபரப்பியதுண்டா? எல்லா தீமைகளையும் செய்யும் மனிதர்கள் பற்றி எதுவும் சொல்வதில்லை. ஒரு நாள் யானை ஊருக்குள் வந்தால் தாம் தூம் என குதிக்கின்றன ஊடகங்கள்.


இயற்கை வன உயிர் ஆய்வாளர்கள் ச.முகமது அலி மற்றும் யோகனந்த் அவர்களின் புத்தகமான அழியும் பேருயிர் : யானைகள் நூல் குறித்து சதீஸ் முத்து கோபால் விமர்சனம் இதோ : -

"அழியும் பேருயிர் : யானைகள்" என்ற நூலை வாசித்து முடிக்கும் போது, எத்தனையோ ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சி பெற்று உலகின் மிகப் பெரிய தரை வாழ் விலங்காக விளங்கும் யானைகள் எப்படி அழிவை சந்திக்கின்றன என்னும் பேருண்மை நம் முகத்தில் அறைகிறது. நம் பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் யானைகள் பிரிக்க முடியாதவை. ஆனால் அவற்றின் இன்றைய நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. கடந்த ஒரு நூற்றாண்டில் மட்டும் இந்தயாவில் லட்சக்கணக்கான யானைகள் கொல்லப்பட்டுள்ளன.

ஆப்ரிக்க யானைகளும் லட்சகணக்கில் தந்தங்களுக்காக வேட்டையாடப்பட்டுள்ளன. இன்று யானைகள் அழிந்து வருவதற்கு நம் மக்களின் மூட நம்பிக்கையும், இயற்கையைப் பற்றிய புரிதல் இல்லாததுமே எனச் சாடுகிறார் ஆசிரியர். இன்றைய சூழ்நிலையில் கூட, ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் யானைகளை ஒரு கொடூர விலங்காக சித்தரிப்பதை கடுமையாக எதிர்க்கிறார்.

"மனிதர் அன்போடு வளர்ப்பதாகக் கூறப்படும் யானைகள் வண்டி இழுத்தன, கடும் வெயிலில் ஏர் உழுதன, மூட்டை சுமந்தன, கல்லையும், கட்டைகளையும் இழுக்கின்றன. வழிபாட்டுத்தலங்களில் வெந்ததைத் தின்று விதி வந்து சாகும்வரை வதைபட்டு பெருமை காட்டுகின்றன. சர்க்கஸ் செய்கின்றன, தன் சகோதரனுடன் சண்டையிட வைக்கப்பட்டன. மன்னர்கள் என்ற மமதை கொண்ட குண்டர்களைத் தூக்கிச் சுமந்தன, பிச்சை எடுக்கின்றன, அடிமையாக சந்தைகளில் விற்பனைக்குள்ளாகின்றன, கெட்டவார்த்தைகளால் திட்டு வாங்குகின்றன, அடி உதைகளால் ரத்தம் சிந்தி அழுகின்றன.

வேண்டிய நீரும், உணவும், நிழலும் கிடைக்காமல் துடிக்கின்றன, அழுக்கடைந்த, கூச்சல் மிகுந்த வீதிகளில் அலைக்கழிக்கப்படுகின்றன, தனிமையில் தவிக்கின்றன, மொட்டை வெயில், புகைதூசிகளால் மன உளைச்சலடைகின்றன, இயற்கையான சத்துள்ள ஆகாரமின்றி நோயால் கஷ்டப்படுகின்றன, தன் வாழ்விடத்தை தானே அழிக்கவும், தன் இனத்தை தானே பிடிக்கவும் உள்ளாக்கப்படுகின்றன. “இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’’ என கொல்லப்பட்டு தனது தந்தத்திலேயே செய்த தன் உருவத்தைச் சுமக்கும் கொடுமைக்கு ஆளாகின்றன. ஆனால் இவ்வளவையும் பரிதாபத்திற்குரிய யானைகள் மகிழ்ச்சியோடு செய்வதாகவே நினைக்கிறது `ஆறறிவு கொண்ட’ மாந்தரினம்" என்ற இவருடைய எழுத்துக்கள், யானைகள் மீது ஆசிரியர் கொண்டிருக்கும் ஈடுபாட்டையும், நம் சமூகத்தின் மீதான கோபத்தையும் பிரதிபலிக்கிறது.


யானைகள் அக ஒலி மூலம் பேசிக் கொள்கின்றன என்ற செய்திகள் என்னை மிகவும் ஆச்சர்யப்படுத்தியது. ஐந்து கி.மீ தொலைவிலுள்ள யானைகள் அக ஒலி மூலம் தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன எனும் செய்தி வியப்பை அளிக்கிறது. இதில் மேலும் ஒரு ஆச்சர்யம் அந்த ஒலி மனிதர்களால் உணர முடியாத அளவுக்கு மிக நுட்பமாக இருப்பதுதான்.

மேலும் ஆப்ரிக்க மற்றும் ஆசிய யானைகளுக்கு இடையேயான வேறுபாடுகளையும் அவற்றின் வாழிடப் பரவலையும் எளிமையாக விளக்கியிருக்கிறார் ஆசிரியர். ஆசிய யானைகளின் தும்பிக்கை ஒரு விரல் நுனியையும் ஆப்ரிக்க யானைகளின் தும்பிக்கை இரண்டு விரல் நுனியையும் கொண்டிருப்பது போன்ற செய்திகள், யானைகளை எளிதில் வேறுபடுத்தி புரிந்து கொள்ள உதவுகிறது.


பள்ளிபருவத்திலேயே எல்லோரும் இந்த புத்தகத்தை வாசித்து விட வேண்டுமென விரும்புகிறேன்...



இது போன்ற சம்பவங்களை நினைக்கும் போது இக்கவிதை நம்மை சுடுகிறது.


யானை பற்றிய சில கேள்விகள்


யானை எத்தனை பெரியது என்றாய் ?
பார்த்ததும்
எத்தகைய பெரியவர்களையும்
சிறு குழந்தைகளாக்கிவிடும்
அத்தகைய பெரியது என்றேன்

யானையின் தும்பிக்கை பார்த்த பின்பு
ஆல மரத்துக்கு மட்டும் ஏன்
இத்தனை தும்பிக்கைகள் என்றாய்

அப்போதுதான் யோசித்தேன்
யானையின் தும்பிக்கை
அதற்கு வேரா, விழுதா என்று

திருவிழா பார்க்க ஊர் சென்றவர்கள்
யானையை வியந்தபடியே செல்கிறார்கள்
தேர் பார்க்க சென்றதை மறந்து

பெரிய கோயிலில்
எந்த சாமி பிடித்தது என்றேன்
யானை சாமி என்றாய்

ஏன் என்றேன்
யானைதானே ஆசிர்வாதம் தந்தது என்கிறாய்

யானை எப்போது வீட்டுக்குப் போகும் என்றாய்
யானைக்கு வீடு இல்லை என்றேன்
ஏன், வீட்டைத் தொலைத்துவிட்டதா
என்கிறாய்

இல்லை
நாம்தான்
அதன் காட்டைத் தொலைத்துவிட்டோம்
என்றேன் !

- இரமேசு கருப்பையா.


தகவல்: மைசூர் சம்பவம் குறித்தான செய்திகள் தினத்தந்தி(23.08.11.)
நன்றி : யானைகள் குறித்த தகவல்களுக்கு http://ivansatheesh.blogspot.com

நன்றி : ஓவியர் சிவபாலன்

பேராசிரியர் கல்யாணி (பிரபா.கல்விமணி)

"காக்கா கூட்டத்தைப் பாருங்க. அதுக்குக் கத்துக் கொடுத்தது யாருங்க ?" என்னும் எளிமையான பாடலைத் தமிழகத்தின் ஒவ்வொரு வீதியிலும் பெரிய பலகையில் எழுதி வைக்கலாம். பகுத்தறிவு இல்லாத காக்கைகள் ஒன்றாகச் சேர்ந்து குரல் கொடுக்கத் தெரிந்து வைத்திருக்கின்றன. ஆனால், நாம் ஒவ்வொரு பிரச்சனை பற்றியும் தனித்தனியாகப் புலம்ப மட்டுமே பழகியிருக்கிறோம். 'தனி மரம் தோப்பாகாது!" என்கிற பழமொழியின் அர்த்ததை நாம் உணர்ந்துவிட்டால் போதும்.... தெருவிளக்கு எரியவில்லை என்கிற ஒரு தெருவின் பிரச்சனை தொடங்கி, காவிரிக்குத் தண்ணீர் வரவில்லை என்கிற ஒரு மாநிலத்தின் பிரச்சனை வரை எல்லோருமே தீர்ந்துவிடும் !

'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே' தோன்றியதாகப் பெருமைப்பட்டு கொள்ளும் தமிழனத்துக்கு ஒன்று சேர்ந்து போராடுகிற பக்குவம் மட்டும் வரவே இல்லை.

" மக்களே ஆயுதம் ! மக்களே கேடயம்!

ஒரணியில் திரண்டு, கடந்த காலத்தில்

சூழ்ச்சிகள் பலவற்றை முறியடித்தோம்.

சாதனைகள் பல படைத்தோம்..."

என்கிற பாடல் திண்டிவனம் பகுதியில் உள்ள எல்லாக் கடைகளிலும்,வீடுகளிலும் துண்டுப் பிரசுரமாக இருக்கும்.

விழுப்புரம் மாவட்டத்தின் பெரிய நகரங்களில் திண்டிவனமும் ஒன்று. 1986-ஆம் ஆண்டு வரை அங்கே அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளி இல்லை. 'பெண்கள் நாட்டின் கண்கள்' என்று அரசு விளம்பரங்கள் வெளியிட்டால் மட்டும் போதாது. பெண் குழந்தைகள் படிக்க பள்ளி வேண்டும் என்கிற கோரிக்கையுடன் திண்டிவனத்தில் உள்ள அனைத்து தரப்பு இயக்கங்களும் ஒன்று சேர்ந்து போராடினோம்.சீருடை முதல் நோட்டுப் புத்தகங்கள் வரை குத்தகை விட்டு, ஏழை மக்களின் ரத்தத்தை உறிஞ்சி வந்த தனியார் பள்ளிகளின் முதலாளிகள், அரசு பள்ளி வருவதை எல்லா வகையிலும் தடுக்கப் பார்த்தார்கள். அதிகார மட்டம், அரசியல் வட்டம் என எல்லாத் தரப்பையும் சரிக்கட்டிக் கொடிக்கட்டிப் பறந்தவர்களை எதிர்க்க "நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு" என்கிற ஒர் அமைப்பைத் தொடங்கினோம். அதில் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், பெண் பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பும் இடம் பெற்றனர்.

'நம் வீட்டுப் பிள்ளைகள் படிக்க யாரோ சிலர் தடையாக இருப்பதா ?" என தெருமுனைக் கூட்டங்கள் போட்டு பேசினோம். ஆளுங்கட்சியைத் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும், தொண்டு நிறுவனங்களும் ஒன்றினைந்து பணம் படைத்த, பலம் படைத்தவர்களுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினோம். ஒன்றிணைந்த மக்கள் சக்திக்கு முன் அரசும், அதன் அதிகாரங்களும் பணிந்தன. இன்று திண்டிவனம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பல ஆயிரம் பெண்கள் படித்து வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

ஒரு பள்ளிக்காக ஒரே முறை ஒன்று திரண்ட மக்களின் சக்தி, பிறகு ஒவ்வொரு பிரச்சனைக்காகவும் போராட ஆரம்பித்தது. அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் நன்கொடை என்கிற பெயரில் பகல் கொள்ளை அடிப்பதை எதிர்த்து, 'நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு' போராடியது. அரசு நிர்ணயம் செய்த கல்விக் கட்டணங்களையும்,ஒவ்வொரு தனியார் பள்ளியும் வசூலிக்கிற கட்டணங்களையும் குறிப்பிட்டு ஆயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து வீடு வீடாகக் கொடுத்தோம்.

98 ரூபாய் கட்டணத்துக்குப் பதில் 500 ரூபாய் கட்டணம் வாங்குகிறார்கள் என்று ஆதாரங்களுடன் சொன்னதால், எல்லாப் பள்ளிகளும் பின்வாங்கின.

தங்கள் பள்ளியில் 100% தேர்ச்சி என்று பெருமையடித்துக் கொள்வதற்காக, தன் பள்ளி மாணவர்களையே காப்பி அடிக்க வைத்த சிறுமைத்தனத்தை சில பள்ளிகள் செய்து வந்தன. அதையும் நேர்மையோடும், நெஞ்சுறுதியோடும் கண்டித்தது, நகரக் கல்வி மேம்பாட்டுக் குழு.

அது பெரிய விவகாரமாகி, தேர்வு அதிகாரி நியமிக்கப்பட்ட நிலையில், அந்த ஆண்டு நடந்த தேர்வில் அந்த பள்ளிகளில் 50% அளவுகூட தேர்ச்சி இல்லை. ஒவ்வொரு பள்ளியின் கல்விதரமும் வெட்ட வெளிச்சமாகியது. அவர்களைவிட அரசு பள்ளி நல்ல தேர்ச்சி விகதம் காட்டியது.

இப்படிக் கல்வியில் தொடங்கி அடிப்படை விசயங்கள் ஒவ்வொன்றுக்காகவும் போராட ஆரம்பித்தோம். 1992-ல் திண்டிவனம் அரசுக் கல்லூரிக்குச் செல்ல, 25 லட்சம் செலவில் 3 கி.மீ. தூரத்துக்குச் சாலை போடப்பட்டது. இது 15 ஆண்டுகாலக் கோரிக்கை. ஏமாற்ற வாய்ப்பு தராமல் இருக்க, ' சாலை கண்காணிப்புக் குழு' அமைக்கப்பட்டது. அதில் மாணவப் பிரதிநிதிகளும் இடம் பெற்றனர். 'இப்படி ஒரு குழு சாலை போடுவதைக் கண்காணிக்கிறது' என்பதை நெடுஞ்சாலைத் துறைக்குத் தெரிவித்தோம். இவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்துமே, ஊழலிலேயே ஊறிப்போன ஒப்பந்தக்காரர் 60 லாரிகள் சல்லிக்கல் கொட்ட வேண்டியதற்குப் பதில் 28 லாரிகள்தான் கொட்டினார். உடனடியாகப் புகார்கள் பறக்கத் தொடங்கியதோடு, கல்லூரி மாணவர்கள் போரட்டத்தில் குதித்துப் பேரணி நடத்தினர். இதற்குப் பொதுமக்களும் ஆதரவு அளிக்க, தயாரானது தரமான சாலை.

சுகப் பிரசவம் ஆக வேண்டிய ஒரு பொண்ணுக்குப் பணத்தாசையால் சிசேரியன் செய்தது ஒரு தனியார் மருத்துவமனை. அதில் அந்த பெண் இறந்து போனார். சுகப் பிரசவம் என்றால் 5 ஆயிரம் ரூபாய்தான் கட்டணம். சிசேரியன் என்றால், குறைந்தது 20 ஆயிரம் ரூபாய் கட்டணம். உயிர் காக்கும் மருத்துவத்தின் பெயரால் மனித உயிர்களைப் பணயம் வைத்து அடிக்கப்படும் கொள்ளைக்கு எதிராகவும் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த மருத்துவமனைக்கு எதிராகக் கொடுக்கப்பட்ட வழக்கை காவல் நிலையத்தில் ஏற்க மறுத்தார்கள். உயர்நீதிமன்றம் வரை போராட்டம் தொடர்ந்தது. 'யாருக்கோ நடந்ததுதானே என்று ஒவ்வொரு முறையும் எல்லோரும் அமைதியாக இருக்கிறோம். இன்று யாருக்கோ நடந்தது நாளை நமக்கும் நடக்கும்' என்பதை வீதி வீதியாகச் சென்று விளக்கினோம்.தனியார் கொள்ளையார்களை மட்டும் எதிர்க்காமல், அரசின் ஊழலையும், அதிகாரத்தின் ஊழலையும் துணிச்சலுடன் ஒன்றிணைந்து எதிர்தோம்'.

நடைமுறையில் பெரும்பாலும் காவல் துறையினர் குற்றம் இழைத்தவர்களுக்குப் பாதுகாப்பாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தியும் சட்டம் - ஒழுங்கைச் சீர் குலைக்கின்றனர்' என்று 'காவல் துறையினரால் பாதிக்கப்பட்டோர் மனித உரிமை' மாநாட்டை நடத்தினோம். போலீஸாரால் பாதிக்கப்பட்டவர்களை மக்கள் முன் தகுந்த ஆதாரங்களுடன் நிறுத்தினோம். அப்பாவிகள் மீது சித்ரவதை நடந்த காவல் நிலையம், சித்ரவதை செய்த அதிகாரிகளின் பெயர்களை வெளியிட்டோம். உண்மையை மட்டுமே முன்வைத்துப் போராடியதால் ஒவ்வொரு முறையும் வெற்றியே கிடைத்தது. மனசாட்சிக்கு விரோதமாக யார் மிதும் புகார் சொல்லாததோடு, நேர்மையோடு நடந்துகொள்கிற அதிகாரிகளையும் வெளிபடையாக மேடை போட்டுப் பாரட்டியதில் போராட்டத்தின் அர்த்தம் முழுமை அடைந்தது.

காவல் துறையின் அத்துமீறல்களை வெளிக் கொண்டு வந்து கறைபடிந்த போலீஸ்காரர்களைச் சட்டதின் முன் நிறுத்தி தண்டனை வாங்கித் தந்ததும் எங்களின் ஒற்றுமைதான்.செஞ்சி சிறையில் நீதிமன்றக் காவலில் காவல் துறையினரால் கற்பழிக்கப்பட்ட ரீட்டா மேரி, தனி காவல் நிலையங்களில் சூறையாடப்பட்ட கல்பனா சுமதி, சிதம்பரம் பத்மினி, அத்தியூர் பழங்குடி இருளர் பெண் விஜயா எனப் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை, மனித உரிமை மீறலை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி அடைந்து இருக்கிறோம்.

மதவெறி நோக்கத்துடன், திண்டிவனம் நீதிமன்ற வளாகத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டபோது, மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் எதிர்தோம். அதற்காக 'மத நல்லிணக்கக் குழு' ஒன்றை அமைத்துப் போராடினோம்.

பல்வேறு இயக்கங்களின் கூட்டுமுயற்சி, பலம் வாய்ந்த அதிகார அநீதியை வேரோடு பிடுங்கி எறிந்தது. தனித் தனிப் பிரச்சனைகள் மட்டுமின்றி தடா, பொடா போன்ற மனித உரிமைக்கு எதிரான சட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தபோதும், மாநில அரசு அதைப் பயன்படுத்தியபோதும், திண்டிவனம் நகரம் கூட்டக இணைந்து செயலாற்றி வெற்றியடைந்திருக்கிறது.

இத்தனை உதாரணங்களும் கற்பனையானவை அல்ல, கண் எதிரே நிகழ்ந்தவை. இந்திய வரைபடத்தில் ஒரு சின்னப் புள்ளியாக இருக்கும் மிகச் சிறிய ஒரு நகரத்தின் கூட்டு முயற்சி சாதனை இது.

ஏழைப் பிள்ளைகளுக்குப் போடுகிற சத்துணவில்கூட புழுத்த அரிசியையும், அழுகிய முட்டையும் போட்டு லாபம் தேடுகிற சுயநலாவதிகள் இருக்கிற சமூகம் இது. எனவே, எங்களின் முயற்சிகளுக்கும் போராட்டங்களுக்கும் இடையூறுகள் இல்லாமல் இல்லை.அடிக்கடி நீதிமன்றம் ஏறி இறங்க வேண்டியிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் ஏறி இறங்குகிறபோது ஒரு தலைமுறைக்கு விடிவு கிடைக்கிறதே !

'ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு !' என்பதை எங்களின் ஒன்றிணைந்த போராட்டங்களின் அனுபவம் இப்படி மாற்றிச் சொல்ல வைக்கிறது.


"'ஒன்றுபட்டால் மட்டுமே உண்டு வாழ்வு! "


நூல் : தமிழ் மண்ணே வணக்கம்

Sunday, August 21, 2011

டெல்டா வார்த்தை பிறந்த விதம் !


ஆறு, கடலில் சேரும் முகத்துவாரம், 'டெல்டா' எனப்படுகிறது. கிரேக்க மொழியின் நான்காவது எழுத்து 'டெல்டா'. ஆறு கடலில் கலக்கும் இடம் அந்த வடிவத்தில் தோன்றுகிறது.

முதலில் நைல் நதி கடலில் கலக்குமிடம் 'டெல்டா' எனப்பட்டது. நைல் நதிக்குக் கொடுக்கப்பட்ட அந்தப் பெயர், பின்னர் எல்லா நதிகளும் கடலில் கலக்கும் இடத்தைக் குறிப்பதாயிற்று.


தகவல் : தினத்தந்தி.

வறுமையிலும் நகைச்சுவைத் தோன்றுமா?


பிரெஞ்சு நாவலாசிரியர் பால்சாக் வசித்த அறைக்குள் ஒரு நாள் இரவு திருடன் நுழைந்து விட்டான். மேஜை, அலமாரி என்று எங்காவது பணமோ, நகையோ கிடைக்குமா என்று அறையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு அலசத் தொடங்கினான். தூக்கம் வராமல் புரண்டுகொண்டு இருந்த பால்சாக் இதைக் கவனித்துவிட்டார். பால்சாக் சிரிப்பதைக் கண்ட திருடன், " ஏன் சிரிக்கிறாய் ?" என்று எரிச்சலுடன் கேட்டான். சிரித்தப்படி பால்சாக் சொன்னார், " நான் பகலில் காண முடியாத பணத்தை இரவில் தேடலாம் என்று இவ்வளவு சிரமப்படுகிறாயே " என்றார்.

தகவல் : அ.பேச்சியப்பன், ராஜபாளையம்.