Tuesday, January 31, 2012
தகவல் களம் !
பலுவார்ட் பாலம் மெக்சிகோவில் உள்ள ஒரு தாங்கு பாலம் (Baluarte Bicentennial Bridge) ஆகும். சியோரா மாட்ரோ மலை இடுக்குகளில் இது அமைக்கப்பட்டுள்ளது. 1123 மீட்டர் நீளமுடையது. பள்ளத்தாக்கில் இருந்து 402.6 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. உலகின் உயரமான தாங்கு பாலம் இதுவே. தற்போது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2012 இறுதியில் திறக்கப்பட உள்ளது.
இந்தியாவில் குகை ஓவியங்களுக்கு பெயர் போனது மகாராஷ்டிரா மாநிலம் அஜந்தாவில் உள்ள குகை ஓவியங்களே (Ajantha Cave Paintings). இங்கு இயற்கை முறையில் வரையப்பட்ட ஓவியங்கள் நிறைய உள்ளன. கி.மு.200 முதல் கி.பி. 650 வரையிலான காலத்தில் வரையப்பட்டவை இவை. புத்த மதக் கொள்கைகளை முதன்மைப் படுத்தி இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
அடிப்பாகம் மிகவும் தடிமனாகவும், மேற்பாகம் குறுகிய கிளைகளாகவும், குறைந்தளவே இலைகளை கொண்ட மரம் அடன்சோனியா கிரான்டிடியரி (Adansonia Grandidieri Tree). மடகாஸ்கரில் மிகவும் புகழ்பெற்ற மரம். இந்த வித்தியாசமான மரத்தை ஆய்வு செய்த பிரெஞ்சு தாவரவியலாளர் ஆல்ஃப்ரெட் கிராண்டியரி பெயரிலேயே இது அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
வங்கக்கடலோரம் உள்ள புதுச்சேரி சுமார் 200 ஆண்டுகள் பிரெஞ்சு காலனி பகுதியாக இருந்தது. ஆந்திராவின் காக்கிநாடா அருகே உள்ள ஏனாம், தமிழகத்தின் நாகப்பட்டினம் அருகே உள்ள காரைக்கால், கேரளாவின் கோழிக்கோட்டுக்கு அருகே உள்ள மாஹே ஆகிய பகுதிகள் புதுவை ஆட்சிப்பகுதிக்குட்பட்டவை. இங்கு தமிழ் மொழியோடு பிரெஞ்சு மொழி பேசுபவர்களும் அதிகம் உள்ளனர்.
தகவல் : டி.கார்த்திக்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
முதல் போட்டோவில் உள்ல பாலம் பிரான்ஸில் உள்ளதாகும். போட்டோக்களும் தகவல்களும் அருமை
தவறைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. இரண்டு பாலமும் ஒன்றாக இருந்ததால் வந்த குழப்பம். நன்றி நண்பரே.
தவறு சரி செய்யதாகிவிட்டது
Post a Comment