Wednesday, February 1, 2012
சமூக நலன் !
தேசிய அளவில் 7 லட்சத்து 4 ஆயிரம் சதுர கி.மீ. வனப்பகுதிகள் நம் நாட்டில் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரையில் 17.59 சதவிகிதம் பரப்பு வனங்கள் உள்ளன. அதாவது, 22 ஆயிரத்து 877 சதுர கி.மீ. இதில் பாதுகாக்கபட்ட தமிழக வன உயிரியல் பகுதி 4 ஆயிரத்து 309 சதுர கி.மீ. பரப்பு.
காடுகளைக் காப்போம். மழை வளம் பெறுவோம்.
உலகெங்கும் ஆண்டுதோறும் 30 கோடி டன் பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 10 முதல் 12 சதவிகிதம் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைப்போம். சுற்றுச்சூழலைக் காப்போம்.
கடந்த ஆண்டு வரை ஆண்டுக்கு 50 லட்சம் என்ற அளவில் உயர்ந்த உலக மக்கள் தொகை, இனி வரும் காலங்களில் 85 லட்சமாக அதிகரிக்கும் என அமெரிக்கா ஆய்வு மையம் ஒன்று தெரிவித்துள்ளது.
அளவான குடும்பம். ஆரோக்கியமான வாழ்வு.
தகவல் : டி.கார்த்திக், முக்கிமலை நஞ்சன்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment