Sunday, November 20, 2011

டீ கடை நாயரும் மாதவன் நாயரும்

அதிர்ஷ்டமில்லாத எண் 13 என்று வெளிநாடுகளில் ஒரு மூட நம்பிக்கை உண்டு. குடிமக்கள் மட்டுமின்றி, பல நாட்டு அரசுகளே கூட 13 - ம் எண்ணுக்கு பயப்படுகின்றன.

வீடுகளுக்கு தரப்படும் கதவு எண் கூட 12 -க்கு அடுத்து 14 தான் இருக்கும்.பெரிய ரயில் நிலையங்களில் 12- வது பிளாட்பாரத்துக்கு அடுத்து, 14- வது பிளாட்பாரம்தான் இருக்கும். எந்த அரசு விழாவும் 13 - ந் தேதிகளில் நடைபெறாது.

இந்த மூடநம்பிகை நமது நாட்டிலும் உண்டு. அதுவும் அறிவியல் அறிஞர்கள் (?!) மிகுந்த இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்திலும் (இஸ்ரோ) இந்த நம்பிகை உண்டு என்பதுதான் ஆச்சரியமூட்டும் விஷயம்.

இஸ்ரோவின் முன்னால் தலைவர் மாதவன் நாயர் மிகவும் இறை நம்பிகை கொண்டவர். ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து ஒவ்வொரு ராக்கெட்டும் ஏவப்படும் முன்பு திருப்பதிக்கு சென்று ராக்கெட்டின் மாதிரியை வைத்து வழிப்படுவது அவரது வழக்கம். ஸ்ரீ ஹரிகோட்டாவிற்கு அருகில் இருக்கும் சூளூர்பேட்டை சங்கலம்மா கோவிலுக்கும் சென்று வழிப்பாடு நடத்துவார்.

இஸ்ரோ ஏவும் ராக்கெட்டுகள் பி.எஸ்.எல்.வி - 1, பி.எஸ்.எல்.வி - 2 என்று வரிசையாகத்தான் வரும். பி.எஸ்.எல்.வி - 12 ஏவப்பட்ட பின், அடுத்த ராக்கெட்டிற்கு பி.எஸ்.எல்.வி - 13 க்கு பதில் பி.எஸ்.எல்.வி - 14 என பெயரிட்டனர். இது உலக அளவில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 13 ராசியில்லாத எண் என்ற மூடநம்பிக்கைக்கு இஸ்ரோவும் தப்பவில்லை.


நிருபர்கள் கூட்டத்தில் பி.எஸ்.எல்.வி - 13 என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார்கள். அப்படி ஒன்று நாங்கள் தயாரிக்கவே இல்லை என்று விஞ்ஞானிகள் பதில் அளித்தனர்.


தகவல் : தினத்தந்தி.

0 comments:

Post a Comment