Monday, November 28, 2011

ஆர்டிக் அபாயம் !

புவி வெப்பமடைதல் காரணமாக பருவ நிலை மாற்றம் ஏற்பட்டு ஆர்டிக் பனிக்கட்டிகள் உருகிவருவது ஏற்கனவே அனைவரும் அறிந்த செய்தி. இன்னும் 20 ஆண்டுகளில், அதாவது, 2030 - ஆம் ஆண்டுக்குள் ஆர்டிக் பனிக்கட்டிகள் முழுவதும் உருகிவிடும் என்றே இதுவரை விஞ்ஞானிகள் கூறி வந்தனர். இந்நிலையில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சி நிபுணரான பீட்டர் வாதம்ஸ் கடந்த சில ஆண்டுகளாக பூமியின் வட துருவத்தில் உள்ள ஆர்டிக் கடல் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார். அந்த ஆய்வு முடிவு நம் தூக்கத்தை கலைத்திருகிறது.

"ஆர்டிக் கடலில் உள்ள பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருவது தெரியவந்துள்ளது.அங்கு பருவ நிலை மாற்றம் அடைந்துள்ளது. வெப்பநிலை அதிகரித்துள்ளது. எனவே எதிர்பார்த்ததைவிட ஆர்டிக் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. 2030 - வரைக்குள் உருகும் என்ற நிலை மாறி, இன்னும் 3 ஆண்டுகளில், அதாவது 2015 - க்குள் பனிக்கட்டிகள் உருகிவிடும்.

இதனால் ஆர்டிக் கடலை ஒட்டியுள்ள வடக்கு ரஷ்யா, கனடா,கீரின்லாந்து உள்பட 40 லட்சம் சதுர கிலோ மீட்டர் நிலப்பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகும்.

அதேவேளையில், அங்குள்ள துருவ கரடிகள் மொத்தமும் அழிந்துவிடும் அபாயம் உள்ளது" என எச்சரித்து இருக்கிறார் பேராசிரியர் வாதம்ஸ்.



தகவல் : டி. கார்த்திக்

0 comments:

Post a Comment