ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் நடக்கும் உக்ரமான
போர்களில் சில வினோதமான நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. ஆரம்ப காலங்களில் போர் விமானங்கள் போருக்கான பொருட்களை கொண்டு செல்ல மட்டுமே பயன்பட்டு வந்தன.
1911 - ல் துருக்கிய போரின் போது விமானங்களில் குண்டுகளை எடுத்து சென்ற இத்தாலிய விமானி ஒருவர், இத்தனை குண்டுகள் வைத்திருந்தும் நேரடியாக போரில் ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இரண்டு குண்டுகளை கையில் எடுத்து வீசினார். இப்படி ஆரம்பித்துதான் விமானத்தில் இருந்து குண்டு போடும் (கொடுமை) முறை ஏற்பட்டது.
ஜப்பானிய போர் விமானிகளில் மிக முக்கியமானவர் ஹிரோயோஷி நிஷிசலா. தனி ஆளாக விமானத்தில் பறந்து 80 எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியவர்.கடைசியில் பயணிகள் விமானத்தில் பயணம் செய்த போது விபத்தில் சிக்கி இறந்தார்.
இரண்டாம் உலக போரின் போது கிரிமியாவின் சூடாக் என்ற இடத்தில் போர் நடந்தது. இதில் ஜெர்மனியும் ரஷ்யாவும் மோதி கொண்டன. ஆவேசமாக நடந்த இப்போர் நாட்டை காக்க அல்ல.
ஒரு பொருள் சேமித்து வைக்கும் கிடங்கை காப்பற்ற நடந்தது. அப்படி அந்த கிடங்கில் என்ன இருந்தது என்று பார்த்தால் லடசக்கணக்கான குடிமகன்களுக்கான மது பாட்டில்கள் இருந்தது.
ரஷ்யாவுக்கும் பின்லாந்துக்கும் இடையே நடந்த ஒரு யுத்தத்தில் ஒரு பின்லாந்து வீரரின் உடலுக்குள் பாய்ந்த குண்டு வெடிக்காமல் அப்படியே உடலில் பொதிந்து கொண்டது. எப்போது வெடிக்குமோ ? என்ற மரண பயத்தில் வீரர் மயங்கி கீழே விழுந்தார்.
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, வீரரின் உடலில் பாய்ந்த குண்டு வெடித்து விடுமோ என்ற பயத்துடனேயே மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அந்த குண்டை பத்திரமாக அப்புறப்படுத்தினர்.
1942 - ல் ரஷ்யாவின் விமானி கஸ்னேக்லேபாவ் விமானத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது திடீரென்று அவருடைய விமானம் தாக்குதலுக்கு உட்பட்டது. எப்படியோ தப்பித்து விட்டார். பின் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க நினைத்த போது, விபத்து நடந்த இடத்தில் எதேச்சையாக அங்கு ஒரு ஜெர்மனிய போர் விமானம் நின்று கொண்டு இருந்தது.
தான் ஏறி பயணம் செய்து கொண்டு இருப்பது எதிரி நாட்டின் விமானம் என்று தெரியாமல் ரஷ்யாவுக்குள் நுழைந்தார். அவ்வளவுதான், எதிரி விமானம் உள் நுழைந்து விட்டது என எண்ணிய ரஷ்ய நாட்டு ராணுவத்தினர் சரமாரியாக சுட அதில் இருந்து தப்பித்து வருவதற்குள் அவருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
இரண்டாம் உலகப் போரின் போது ஜெர்மன் தலைநகர் பெர்லின் மீது அமெரிக்கா, குண்டு ஒன்று வீசியது, போருக்கு சற்றும் சம்பந்தப்படாத அப்பாவி மக்களை போல அந்த குண்டு ஒரு மிருகக் காட்சி சாலையில் விழுந்து ஒரு யானை இறந்தது.
முதல் உலகப் போரின் போது அமெரிக்க ராணுவம் பயன்படுத்திய துப்பாக்கி பற்றிய தொழில்நுட்பம் ஜெர்மனிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.
ஒரு புறம், ஜெர்மன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொண்டு இருந்த அமெரிக்கா, மறுபுறம், அந்த துப்பாக்கி தொழில்நுட்பத்தின் உரிமத்திற்கான பணத்தை ஜெர்மனிக்கு தவறாமல் வழங்கி கொண்டு இருந்தது.
தகவல் : தினத்தந்தி
0 comments:
Post a Comment