Wednesday, November 23, 2011

தகவல் களம் !

மரணம் எனும் நெருக்கடி

உலகிலேயே மிகவும் நெருக்கடியான கல்லறைகள் அமைந்துள்ள இடம் இராக்கில் பாக்தாத் நகரில் உள்ள நஜாப் என்ற இடமே. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இங்கு கல்லறைகளே இருக்கின்றன. ஒவ்வொரு கல்லறைக்கு இடையேயும் ஒரு அடி மட்டுமே இடைவெளி. உலகில் எங்குமே இப்படி நெருக்கடியான கல்லறை கிடையாது.


அழிந்து போன பறவையும்-மரமும்

மொரீஷியஸ் தீவுகளில் வாழ்ந்த இப்பறவையின் பெயர் டோடோ பறவை. கிட்டத்தட்ட 90 சென்டிமீட்டர் உயரமும், 15 கிலோகிராம் எடையும் கொண்டது.

இப்பறவையின் மிகப் பெரிய குறைப்பாடு என்னவென்றால் பறக்கும் திறன் அற்றது. மொரீஷியஸ் தீவிற்கு வந்த டச்சு நாட்டவர்களின் வேட்டையின் காரணமாக இப்பறவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து 1681 - ல் முற்றிலும் அழிந்துவிட்டது.


நெல் வகை

நெல் வகைகளுக்கு இப்போது புதுப் புதுப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. ஆனால், 500 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தமிழ்நாட்டில் 44 வகை நெல்கள் இருந்திருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விவசாய தொழில்நுட்ப கற்பனைக்கும், ஒட்டுவகைப் பயிருக்கும் ஆதாரமாக விளங்கியவை.

நாளாவட்டத்தில் அவற்றின் எண்ணிக்கை குறுகி, 18 வகை மட்டும் இப்போது பதிவில் உள்ளன.

அவை :

1. செம்பவளச் சம்பா
2. மாணிக்கச் சம்பா
3. முத்துச் சம்பா
4. முத்து மாலை
5. முத்து விளங்கி
6. கருங்குறுவை
7. கருஞ்சூரை
8. கருப்புச் சாலி
9. கருப்பன்
10.குங்குமச் சம்பா
11.குங்குமப் பாளை
12.செஞ்சம்பா
13.செந்தாழை
14.செம்பிளசி
15.முழு வெள்ளை
16.வெள்ளை சம்பா
17.வெள்ளை முடங்கன்
18.மாணிக்க மாலை.


தகவல் : டி.வித்யுத் மற்றும் தினத்தந்தி

0 comments:

Post a Comment