ஒரு கிராம் அளவு கூட அதிக சதை இல்லாமல் கச்சிதிமாகத் தோன்ற வேண்டும் என்பதில் ஆண்களை விட பெண்களுக்கு ஆர்வம் அதிகம்தான். அதிலும் இளம் பெண்களிடம் இந்த மோகம் தீவிரமாக உள்ளது.
ஆனால், தற்போது அதிர்ச்சி அளிக்கும் விஷயம், பள்ளி செல்லும் சுமார் 10 வயது பெண்கள் கூட மெலிதான உடலுடன் கூடிய அழகில் தோன்ற வேண்டும் என்று பட்டினி கிடந்து உடலை வருத்திக்கொள்கிறார்கள் என்பதுதான்.
10 - 11 வயதுப் பெண்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டோர் பட்டினி கிடப்பது போன்ற கடுமையான வழிகள் மூலம் மெலிதான தோற்றத்தை அடைய முயற்சிக்கிறார்களாம்.
இது தொடர்பாக 83 ஆயிரம் பள்ளி மாணவிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் அனைவரும் 10 வயது மாணவிகள். அவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் காலை உணவை உண்பதில்லை. இன்னும் மோசம் அவர்களில் 24 சதவீதம் பேர், முந்திய நாள் மதிய உணவையும் தவிர்த்திருகின்றனர்.
இளம் பெண்கள் வயது கூடக் கூட, அவர்கள் உணவை தவிர்க்கும் ஆர்வமும் கூடுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 14 - 15 வயதுப் பெண்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் தங்கள் எடையை குறைக்கவும், அதற்கு ஒரு தொடர்ச்சியான முறையை பின்பற்றவும் விரும்புகிறார்கள்.
"இளம் பெண்களுக்குத் தோற்றம் குறித்த கருத்தை உருவாக்குவதில் ஊடகங்கள் ஒரு முக்கியத்துவம் வகிக்கின்றன. ஆனால் அதற்காக பெண்கள் ஆரோக்கியமற்ற வழிகளை நாடுவதுதான் கவலையளிக்கும் விஷயம்"
என்கிறார் இந்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் லாரா வைன்ஸ்.
தகவல் : தினத்தந்தி
1 comments:
ya its really true.
Watch this video Child Labor Sexually abused in india
Post a Comment