Friday, December 30, 2011

மக்கள் போராளிகள் - 2011


உலகம் முழுக்க அணுமின் நிலையங்களுக்கு எதிராக எழும் முழக்கங்களில் சுப.உதயகுமாரனின் குரல் மிக முக்கியமானது. இன்றைய கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்ட நெருப்புக்கு 80 - களிலே கனல் எடுத்தவர் இவர். கூடங்குளத்தைச் சுற்றியுள்ள மீனவக் கிராமத்து மக்கள் இவரது தலைமையில் உறுதியாகத் திரண்ட போது இந்திய அரசே நடுங்கியது. அமைதிக் கல்வியில் முனைவரனா இவர், எத்தியோப்பியாவில் ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணி புரிந்தவர். தெருமுனைப் பிரசாரங்கள், ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், அறிவியல் மேடைகள், பட்டினிப் போராட்டங்கள் என ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தியவர்.

அணுஉலைகள், அணுக் கழிவுகளின் பாதிப்புகள் குறித்த களப் பணிகளுக்காக ஜெர்மன், ஜப்பான்,சீனா போன்ற நாடுகளுக்குச் சென்று வந்தவர். கூடங் குளம் அணு உலைகள் பற்றி இவர் உருவாக்கிய 'தி கூடங்குளம் ஹேன்ட்புக்'
என்ற புத்தகம் இன்று முக்கியமானதொரு ஆவணம். 'அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்' என்ற அமைப்பின் மூலம், ஜைதாபூர், ரவத் பாட்டா, தாராப்பூர் என அணு உலைகள் அமைந்து இருக்கும் இந்தியாவின் அனைத்துத் தளங்களிலும் போராட்ட நெருப்பைப் பற்றி எரிய செய்கிறார் உதயகுமாரன்.


பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து ஒலிக்கிறது, சண்முகத்தின் உயிர் குரல். 1992 -ஆம் ஆண்டு வாச்சாத்தி மழைக் கிராமத்தில், காவல் துறையும், வனத் துறையும் செய்த பாலியல் வன்முறையில், 18 பெண்கள் பாதிக்கப்பட்ட கொடுரத்தை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியவர்களில் முக்கியமானவர். வாச்சாத்தி மக்கள் சார்பாக வழக்குத் தொடுத்து, 19 ஆண்டுகள் இடைவிடாத சட்டப் போராட்டம் நடத்திய மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்.

இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக, குற்றம் சாட்டப்பட்ட 216 பேருக்கும் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தது நீதிமன்றம். இந்திய நீதித் துறை சரித்திரத்தில் இது ஒரு மைல் கல். அந்த எளிய மக்களின் கண்ணீருக்கு நீதி கிடைக்கப் போராடிய சண்முகம், தீண்டாமைக்கும் அதிகார வன்முறைக்கும் எதிராகத் தீப்பந்தம் எந்துவதையே தன் வாழ்க்கையாக்கி கொண்டவர்.


பிரின்ஸ் கஜேந்திரபாபு

கருணாநிதி ஆட்சியில் அமலாக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக, சமச்சீர்க் கல்விக்கு ஜெயலலிதா தடை போட்டபோது, கல்வியாளர்களுடன் பிரின்ஸ் கஜேந்திரபாபு சுழற்றிய போராட்டைச் சாட்டை அரசை மிரள வைத்தது. 'பொதுப் பள்ளிகளுக்கான மாநில மேடை' என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல ஆண்டுகளாகவே பொது மக்களுக்கான விழிப்பு உணர்வு போராட்டங்களை முன்னெடுத்து வருபவர். பொதுக் கூட்டமேடைகள், அரங்கக் கூட்டங்கள், ஊடங்கங்கள் மூலமாக சமச்சீர்க் கல்விகாகத் தொடர்ந்து இவர் மேற்கொண்ட பிரச்சாரம் ஒரு தலைமுறைக்கு இவர் தந்த கொடை.



வைகோ

தேர்தல் அரசியலையே தூக்கி வீசிவிட்டு, தமிழகத்தின் ஒவ்வொரு பிரச்னைக்காகவும் வீறுகொண்டு முன் நின்ற வைகோ மீது மரியாதை பெருகி இருக்கிறது. தூத்துக்குடியின் தூய்மைக்காக ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து இவர் பற்றவைத்த விசாரணை நெருப்பு இன்னும் தணியவில்லை. பேரறிவாளன், முருகன்,சாந்தன் மீதான தூக்குத் தண்டனையை எதிர்த்து நீதிமன்றங்களில் 'கரும் புலி'யாக உலவினார்.

விடுதலை புலிகளின் மீதான் தடையைத் தகர்க்கவும் இவரே வழக்கறிஞர் ஆனார். முல்லை பெரியாறு பிரச்னையில் எல்லைகளை மறிக்கும் போராட்டத்தில் இவர் குதிததும்தான் கேரளா அரசு மிரண்டது. சட்டமன்றத்தில் கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை. ஆனாலும், அந்த கவலை இல்லாமல் தமிழக நலனுக்காக முழக்கமிட்டு உழைக்கிறார். இலக்கியம், அரசியல், போராட்டம் என சோதனைகளுக்கு நடுவே இவரது இருப்பு மதிப்புக்கு உரியது.


தகவல் மற்றும் நன்றி : விகடன்.

0 comments:

Post a Comment