Wednesday, December 14, 2011

தகவல் களம் !

தேன் சிந்தும் எறும்பு


பொதுவாக எறும்புகள் பூமிக்கு அடியில் கூடுகள், புற்றுகள் கட்டிக் கொள்கின்றன. சிலவகை எறும்புகள் மட்டும் உயர்ந்த மரங்களில் புற்று கட்டி வாழ்கின்றன. இவற்றில் சற்று வித்தியாசமாக தேன் எறும்புகள் என அழைக்கப்படும் எறும்புகள் தங்கள் வயிற்றிலேயே தேன் போன்ற பொருள்களைச் சேமித்து வைக்கின்றன.

இதனால் இவற்றின் வயிறு பருத்து தேன் குடமாகக் காட்சியளிகின்றன. தேன் கிடைக்காத காலங்களில், வாய் வழியே தேனைத் துப்பி மற்ற எறும்புகளுக்குக் கொடுக்கும்.

சுறுசுறுப்பு மன்னன்


மாவீரன் நெப்போலியன் தான் பயன்படுத்தும் பொருட்களில், குறிப்பாக தன்னுடைய சிம்மாசனம் உள்பட அனைத்திலும் தேனீ உருவத்தை பொறித்திருந்தார்.

கணினி மயம்


பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள 'பிரிட்டிஷ் நூலகம்' தங்களிடம் உள்ள பழமையான தினசரிகளை சேகரித்து அவற்றை, கணினி மயமாக்கி வருகின்றனர்.

குறிப்பாக 18 - ம், 19 - ம் நூற்றாண்டைச் சேர்ந்த தினசரிகள் இதில் அடங்கும். இதன் மூலம் இந்த பழமையான தினசரிகளை இணையதளம் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம். சுமார் 40 லட்சம் பக்கங்களை கணினி மயமாக்கிவிட்டர்கள். அடுத்த பத்தாண்டில் 4 கோடி பக்கங்களை இணையத்தில் பதிவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது.

தலைகீழ் கட்டிடம்



நாம் வசிக்கும் கட்டிடம் தலைகீழாக இருந்தால் எப்படி இருக்கும். கொஞ்சம் திகிலாகத்தான் இருக்கும். அந்த திகிலை டெல்லியைச் சேர்ந்த ஏ.பி.ஏ கட்டிட நிறுவனம் உண்மையாக்கியுள்ளது. இந்நிறுவனம் கட்டியுள்ள 'கார்செல்லா கேளிக்கை விடுதி' தலைகீழாகக் கட்டப்பட்டுள்ளது. வெளிப்புறத் தோற்றம் மட்டுமே தலைகீழாக கட்டப்பட்டுள்ளது. உட்புறம் வழக்கமான முறையில் பல அறைகள் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

ரோமானிய கட்டிட தொழில் நுட்பத்தைப் பயன்ப்படுத்தி கட்டப்பட்டுள்ள இந்த கேளிக்கை விடுதி, உலகிலேயே மூன்றாவதாக கட்டப்பட்டுள்ள தலைகீழ் கட்டிடமாகும்.



தகவல் : ப்ரியா.

2 comments:

கோவி said...

தகவல் அருமை..

Siraju said...

நன்றி நண்பா.

Post a Comment