Tuesday, December 13, 2011

கொஞ்சம் தமிழும் - கொஞ்சம் தகவலும் !

எமப்பூட்டு - துமிக்கி

எமப்பூட்டு, துமிக்கி என சொல்லப்படுவது எது தெரியுமா ?

துப்பாக்கி! அதே போல் குண்டு குழாய் என்றால் பீரங்கி. சுழலி என்றால் ரிவால்வர். இப்படி தூய தமிழ் சொற்களை நமக்கு உருவாக்கி தந்தவர் 'மொழி ஞாயிறு' தேவநேயப் பாவாணர்.

ஓலை சுவடி


சங்க கால ஓலை சுவடிகளில் வார்த்தைகள் இடைவெளியின்றி தொடர்ந்து வரும். புள்ளி, புள்ளி எழுத்துகளும் இருக்காது. அவ்வாறு ஒரு வார்த்தைக்கு இடம் விட்டு, அடுத்த வார்த்தை எழுதும்போதோ, க், ச் போன்ற புள்ளி எழுத்துகள் எழுதும்போதோ, எழுத்தாணி ஓலையில் ஓட்டையிட்டு,
சேதப்படுத்திவிடும் என்பதால் இந்த ஏற்பாடு.

ஆனால், தற்போது நடைமுறை உள்ள தமிழ் வாக்கியங்களிடையே கமா,கோலன், செமி கோலன் போன்ற குறியீடுகளை அறிமுகப்படுத்தியவர் வீரமா முனிவர் என அறியப்படுகிற ஜி.யூ.போப்.

முதன் முதலாக


தமிழில் வெளிவந்த முதல் பத்திரிக்கை 'தமிழ் இதழ்' (1831).

தமிழில் வெளிவந்த முதல் வாரப்பத்திரிக்கை 'தின வர்த்தினி' (1856).

தமிழில் வெளிவந்த முதல் மாத இதழ் 'ஜன விநோதினி' (1870).

தமிழில் வெளிவந்த முதல் வரலாறு நாவல் 'மோகனாங்கி' (1875).



தகவல் : சி.பரத், கே.ஜெயலட்சுமி, ராஜசேகர், வித்யுத்.

0 comments:

Post a Comment