Monday, December 5, 2011

கண்ணசைவில் ஒரு புத்தகம் !

ஜான் டொமினிக் பாபி (Jean-Dominique Bauby) என்று ஒரு எழுத்தாளர். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர். அதனால் கைகளும், கால்களும் செயலிழந்து விட்டன. பேசவும் முடியாது. தனது நெருங்கிய உதவியாளரின் உதவியுடன் அவர் ஒரு புத்தகத்தை எழுதினார்.

எப்படி ?

கண்ணசைவால், உதவியாளருக்கு ஒவ்வொரு எழுத்து, வார்த்தை, வாக்கியத்தையும் புரிய வைத்தார். உதவியாளர் தவறாக புரிந்து கொண்டால், கண்களாலேயே மறுத்து, சரியான பொருளைப் புரிய வைத்தார். இப்படி அவர் எழுதிய புத்தகம் ' த டைவிங் பெல் அண்ட் த பட்டர்ப்ளை' (The Diving Bell and the Butterfly).



டொமினிக் இறப்பதற்கு முன், 1996 - ம் ஆண்டு இந்த புத்தகம் வெளியாகி, மிக அதிகம் விற்பனையான புத்தகங்களின் பட்டியலில் இடம் பெற்றது.



ஜான் டொமினிக் பாபி



தகவல் : வித்யுத்.

0 comments:

Post a Comment