Monday, April 9, 2012

படம் சொல்லும் சேதி !

(Veteran Artist Tim Storrier's Self-Portrait-Australia)

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒரு ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற 'வழிப்போக்கன்' ஓவியம்தான் இது. வரைந்தவர் ஓவியர் டிம் ஸ்டோர்ரியர். அந்தக்கால வழிப்போக்கனுக்கு கட்டுசோறு மூட்டை போதும். ஆனால், இப்போது என்னவெல்லாம் தேவைப்படுகிறது.



(Mammoth Reproductions in the Exhibition 'Giants of the Ice Age', Nebra, Central Germany)

ஜெர்மனியின் நெப்ரா நகரில் 'ஐஸ் ஏஜ் ஜென்ட்ஸ்' என்ற கண்காட்சி இந்த மாதம் தொடங்கி டிசம்பர் வரை நடைபெறுகிறது. பனி யுகத்தில் வாழ்ந்த பிரமாண்டமான மிருகங்களை அப்படியே உயிருள்ள உருவங்கள் போலச் செய்து கண்காட்சியில் வைக்கிறார்கள். அப்படி உருவாக்கப்பட்ட மம்மூத் யானையும், அதன் குட்டியும்...



(A Flower Horn Fish-Thailand)

தலையில் கொம்பு முளைப்பது என்பது தரையில் வாழும் விலங்கினங்களுக்கே உரிய சிறப்பம்சம். மீனுக்கு கொம்பு முளைத்தால்.... அது இப்படிதான் கொண்டை போட்டுவிட்டது போல இருக்கும். தாய்லாந்தில் அழகிய மீன் கண்காட்சி நடந்தது. அதில் எல்லோரது கவனத்தையும் ஈர்த்த இந்த மீனுக்கு பெயர் 'பிளவர்ஹார்ன் பிஷ்'. அதாவது பூக்கொம்பு மீன்.


(9.5 Crores Kelly bag- France)

பிரான்சின் புகழ்பெற்ற ஹெர்ம்ஸ் பர்கின் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்தப் புதிய கைப்பையின் விலை ஒன்பதரை கோடி ரூபாய். முதலைத் தோலில் செய்து, அதன்மீது விலை உயர்ந்த 11,303 வைரங்களும் இதர கற்களும் பதிக்கப்பட்ட கைப்பை. இதன் கைப்பிடியை கையில் மாட்டிக் கொண்டால் அழகிய பிரேஸ்லெட் போலத் தெரியும். வைரங்கள் எதுவும் சுலபத்தில் விழுந்து விடாதபடி கவனமாக பதிக்கப்பட்டு இருக்கின்றன.





தகவல் : முத்தாரம் இதழ்.

0 comments:

Post a Comment