Sunday, April 15, 2012

உலகின் மிக விலையுர்ந்த ஓவியங்கள் !


"மோனலிசா"

இன்றுவரை விலை மதிப்பிடமுடியாத இடத்தில் இருப்பது மோனலிசாதான். இத்தாலிய எழுச்சியின்போது, பிரபல இத்தாலிய ஓவியர் லியனார்டோ டா வின்சி இதை வரைந்தார். இப்போது பிரான்ஸ் நாட்டின் லாவ்ரே அருங்காட்சியகத்தில் பொக்கிஷமாக மாட்டி பாதுகாக்கப்படும் மோனலிசா ஓவியத்தை இன்சூரன்ஸ் செய்வதற்காக 1962-ம் ஆண்டு மதிப்பிட்டார்கள். அப்போது,'460 கோடி ரூபாய் பெரும்' என கணக்கிட்டார்கள். ஐம்பது ஆண்டுகள் கழித்து இன்றைய கணக்கில் மதிப்பிட்டால், இது சுமார் 3220 கோடி ரூபாய் ! இந்த விலையிலும் இதனை வாங்கி தங்கள் சொந்தமாக்கிக் கொள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் தயார். ஆனால், பிரெஞ்சு அரசுதான் விற்க தயாராக இல்லை.




"தி கார்டு பிளேயர்ஸ்'

"தி கார்டு பிளேயர்ஸ்' இதுவரை ஏலங்களிலும் தனிப்பட்ட முறையிலும் உலகெங்கும் விற்கப்பட்ட ஓவியங்களிலேயே மிக அதிக விலைக்கு விற்பனையாகி சரித்திரம் படைத்தது. இரண்டு பேர் சீட்டாடும் காட்சியில் அப்படி என்ன ரசனைக்குரிய அம்சம் இருக்கிறதோ தெரியவில்லை.... இதேபோல பல ஓவியங்களை வரைந்திருக்கிறார் பிரெஞ்சு ஓவியர் பால் செழான். அதில் 1892-ம் ஆண்டு வரைந்த இந்தக் குறிப்பிட்ட ஓவியத்தை கடந்த ஆண்டு கத்தார் குடும்பம் விலைக்கு வாங்கியது. பொது ஏலத்தில் இல்லாமல் தனிப்பட்ட முறையில் வாங்கியது என்பதால் சரியான விலையை அவர்கள் சொல்லவில்லை. என்றாலும், கிட்டத்தட்ட 1250 கோடி ரூபாய் கொடுத்து அவர்கள் வாங்கியதாகத் தகவல்.



"நம்பர் 5 1948"

அமெரிக்க ஓவியர் ஜாக்ஸன் போல்லாக் வரைந்த 'நம்பர் 5 1948' என்ற ஓவியம் விற்பனை சாதனையில் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. நவீன ஓவியங்களுக்கு முன் மாதிரியாகக் கருதப்படும் இது 1948-ம் ஆண்டு வரையப்பட்டது. கோடுகளும் வண்ணங்களும் தாண்டி இதில் என்ன உருவம் இருக்கிறது என்பது சாதாரணர் கணகளுக்குப் புலப்படாது. கடந்த 2006-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த ஏலத்தில் இந்த ஓவியம் 700 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.



"வுமன் 3"

நெதர்லாந்தில் பிறந்து அமெரிக்காவில் வசித்த வில்லெம் டி கூனிங் என்ற ஓவியர் வரைந்த ஓவியம் வுமன் 3 என்ற ஓவியம் இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. பெண்களை மையக் கருவாக வைத்து இவர் வரைந்த ஆறு ஓவியங்களில் இதுவம் ஒன்று. 1953-ம் ஆண்டு வரையப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு இது 681 கோடி ரூபாய்க்கு ஏலம் போனது.




'அடேல் பிளாச் பாயர்-1

இந்த பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்திருக்கும் ஓவியம் 'அடேல் பிளாச் பாயர்-1 ஹஸ்டவ் கிலிமிட் என்ற ஓவியர் 1907-ம் ஆண்டு வரைந்து முடித்த ஓவியம் இது. முழு வேலைப்பாடுகளுடன் கூடிய மங்கையை சித்தரித்து முடிக்க, 3 வருடங்கள் ஆனதாம் அவருக்கு. நியூயார்க் நகரில் உள்ள நியூ கேலரிக்காக, ரோஸ்ட் லாடர் என்பவர் 2006-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ஓவியத்தை 621 கோடி ரூபாய் விலை கொடுத்து வாங்கினார்.







தகவல்: ராஜிராதா.

1 comments:

Post a Comment