Sunday, April 1, 2012
கால மாற்றங்கள் !
அடிப்படவர்களுக்குத்தானே அடுத்தவர் அனுபவிக்கும் வேதனையின் வலி தெரியும்! அப்படி நிகழ்ந்த ஓர் நெகிழ்ச்சி ஆறுதல் சம்பவம் இது. கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி தமிழகத்தைத் தாக்கிய சுனாமி கொடுரத்தை எல்லோரும் அறிவார்கள். அந்த சுனாமியில் இந்தியாவை போலவே அதிகம் பாதிக்கப்பட்டது இந்தோனேசியா நாடு. அந்த சுனாமியில் அதிகம் பேர் இறந்தது அந்த தேசத்தில்தான்! குறிப்பாக பான்டா ஏக் மாகாணம் அதிக பாதிப்புக்கு ஆளானது.
தங்களை வதைத்த சுனாமி தினத்தன்று ஆண்டுதோறும் நினைவஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தத் தவறுவதில்லை அந்த மாகாண மக்கள். கூடவே ஜப்பானையும் இந்த ஆண்டு நினைத்தார்கள். கடந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி ஜப்பானை நிலைகுலையச் செய்த சுனாமில் இறந்தவர்களுக்கு, காகித மலர்களை இப்படி அலங்கரித்து இந்த மார்ச் 11-ம் தேதி அஞ்சலி செலுத்தினார்கள் அவர்கள்.
நம்ம ஊர் ஈக்களுக்கு தாத்தா என்று சொல்லாம் இந்த 'மீஸ்லி ஈ' இனத்தை! இந்த இனத்தைச் சேர்ந்த ஆண் ஈ ஒன்றின் பாறைப் படிமத்தை சமீபத்தில் விஞ்ஞானிகள் கண்டிபிடித்தர்கள். டைனோசர்கள் வாழ்ந்த ஜுராசிக் காலத்தில் இதும் வாழ்ந்திருக்கிறது. என்ன... இப்போதைய ஈக்களைப் போல இல்லாமல் மிகப் பெரிதாக குருவி சைஸில் இருந்திருக்கிறது இது. பிரமாண்டமான டைனோசர்களின் மேல் ஒட்டிக் கொண்டு, அவற்றின் ரத்தத்தை உறிஞ்சி வாழும் வல்லமை பெற்று இருந்ததாம் இது!
கடந்த ஐந்து ஆண்டுகளில் பூமியைத் தாக்கிய மிகப்பெரிய சூரியப் புயல் எனப்பட்டது, கடந்த வாரம் பூமியை மீண்டும் அச்சுறுத்தியது. விமான சேவைகளும் தொலைத் தொடர்பு சேவையும் பெரிதளவு ஸ்தம்பிக்கும் என பயந்தார்கள். நல்ல வேலையாக பெரும் ஆபத்து நேரவில்லை. சூரியப் புயல்களின் போது, வீரியம் வாய்ந்த மின்காந்த அலைகள் பூமியின் வட துருவத்தை வந்தடைவது வழக்கம். இரவுநேர வானத்தில் இந்த அலைகள் பரவும் காட்சி பார்க்க அழகாக இருக்கும். விதம் விதமான வண்ணங்களை அப்போதும் வானம் பூசிக் கொள்ளும். வட துருவத்தை ஒட்டியிருக்கும் கனடா நாட்டின் யெல்நைஃப் பகுதியில் எடுக்கப்பட்ட சூரியப் புயல் காட்சி இது!
தகவல் : லோகேஷ்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
தகவலுக்கு நன்றி ..அப்புறம் இந்த WORD VERIFICATION நீக்குங்கள்////
நன்றி நண்பரே. கவனத்தில் கொண்டுவந்ததுக்கு.
Post a Comment