Monday, November 14, 2011

தகவல் களம் !

ஆஸ்கார் நாயகன் வாரன் பெட்டி

ஒரே படத்துக்காக சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதையாசிரியர், சிறந்த தயாரிப்பாளர் என நான்கு பிரிவுகளிலும் ஆஸ்கார் பரிசுகள் பெற்ற ஒரே மனிதர் வாரன் பெட்டி (Warren Beatty). படம் : ஹெவன் கேன் வெயிட்.
ஆண்டு : 1978.



இவர் இதே போல மீண்டும் இதே நான்கு பிரிவுகளில் ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார். 1981 ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். இவர் சாதனையை இது வரை வேறு யாரும் முறியடிக்கவில்லை.


விடுமுறை

பொதுவாக ஞாயிறுக் கிழமைதான் வார விடுமுறை என்றாலும் சில நாடுகளில் வேறு கிழமைகளிலும் விடுமுறை விடப்படுகின்றன.


கீரிஸ் - திங்கட் கிழமை, சிரியா - புதன் கிழமை, எகிப்து - வியாழக் கிழமை, ஐக்கிய அரபு நாடுகள் - வெள்ளிக் கிழமை, இஸ்ரேல் - சனிக் கிழமை.



'மாஃபியா' வார்த்தை பிறந்த விதம்


19 - ம் நூற்றண்டில் இத்தாலியின் வசம் இருந்தது சிசிலி தீவு. இதன் பிறகு பிரஞ்சுக்காரர்களின் வசம் வந்தது இத்தீவு.

இத்தாலியர்கள், பிரஞ்சுக்காரர்களின் பிடியிலிருந்து சிசிலி தீவை மீட்க ஒரு தீவிரவாத அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பே 'மாபியா' என்று அழைக்கப்பட்டது. இந்த அமைப்புக்கு கோஸா நோஸ்ட்ரா(Cosa Nostra) அல்லது கருங்கைகள் என்ற பெயரும் உண்டு.


தகவல் : முக்கிமலை நஞ்சன்.

2 comments:

stalin wesley said...

அருமை

rajamelaiyur said...

பகிர்வுக்கு நன்றி

Post a Comment