எழுத்தாளர் ஆல்க்ரென்
- ஆல்க்ரென் எனும் எழுத்தாளர், சில சுவையான சம்பவங்களை மட்டுமே யோசிப்பார். அவற்றை எழுதத் தொடங்கி ஒன்றுக்கொன்று முடிச்சுப் போடும் போதுதான் கதைக் கரு என்ற ஒன்றே உருவாகும்.
- மாரியக் என்ற எழுத்தாளர் எழுதத் தொடங்கிவிட்டால் அது முடியும் வரை எழுதிக் கொண்டே போவார். ஒரு நாவல், எந்தக் காரணத்துக்காகவும் ஒரு நிமிடம் கூட தடைபட்டு நிற்கக்கூடாது என்பது இவருடைய கொள்கையாகும். உணவு, உறக்கம் என எல்லாவற்றையும் மறந்து நாள் கணக்கில் இவர் நாவல்கள் எழுதியுள்ளார்.
- அன்டோனி பார்சன் என்பவர் துப்பறியும் நாவலாசிரியர். உணவுக்காகக் கூட தன் நாவலை இடையில் நிறுத்தி வைக்க மாட்டார். ஆனால், எழுதி முடித்த பின்பு வயிறு முட்ட உணவு சாப்பிட்டு விட்டு இரண்டு நாட்கள் தூங்குவாரம்.
எழுத்தாளர் ட்ரூமன் கபோட்
- ட்ரூமன் கபோட், தான் எழுத நினைக்கும் கதையை வரிக்கு வரி சிந்தித்து மனதுக்குள் கற்பனையாக ஒரு முறை எழுதி விடுவாராம். அதன் பின்புதான் முதல் வரியையே எழுதத் தொடங்குவாரம்.
எழுத்தாளர் பெர்னார்ட் ஷா
- ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஒரு நாளைக்கு ஐந்து பக்கங்களுக்கு மேல் ஒரு வார்த்தை கூட எழுதமாட்டார். ஐந்தாவது பக்கம் எழுதி முடிக்கும்போது ஒரு வாக்கியம் பாதி எழுதப்பட்டிருந்தால் கூட, எழுதுவதை நிறுத்திவிட்டு அதை மறுநாள்தான் எழுதத் தொடங்குவார்.
எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ்
- சார்லஸ் டிக்கன்ஸ் எழுதும்போது தன் எழுத்தில் உள்ள நகைச்சுவைப் பகுதியைப் படித்து தானே வயிறு குலுங்கச் சிரிப்பார். சோகமாக எழுதும்போது, அந்தப் பக்கம் முழுவதும் அவர் கண்ணீரால் நனைந்திருக்கும். அந்த அளவுக்கு உணர்ச்சிப் பிழம்பானவர்.
எழுத்தாளர் எட்கார்ட் வாலஸ்
- எட்கார்ட் வாலஸ் என்பவர், வெள்ளிக் கிழமையில்தான் எழுத ஆரம்பிப்பாராம். வெள்ளி இரவு உணவு முடித்து பின் பேனாவைக் கையில் எடுத்தால், திங்கட் கிழமை காலை ஒன்பது மணிக்குள் முடித்து விடுவார். இடையில் உணவும் இல்லை தூக்கமும் இல்லை. கற்பனை வளத்துக்காக தேநீர் மட்டும் நிறையக் குடிப்பாராம்.
கவிஞர் ஷெல்லி
- ஷெல்லி கவிதைகள் எழுதும்போது, அவருடைய வாய் எதையாவது மென்று கொண்டே இருக்கும். அப்பொழுதுதான் கறபனை தடைபடாமல் பெருக்கெடுத்து ஓடும்.
- இமானுவேல் பர்க் தனது கற்பனை வளம் குன்றும்போதெல்லாம் சூடான நீரில் கால்களை நனைத்துக் கொண்டே சிந்திப்பார். அப்பொழுதுதான் அவருக்கு கற்பனை சுரக்குமாம்!
- அப்பாஸ் என்ற எழுத்தாளர் மிகவும் இரைச்சலும் கூச்சலும் நிறைந்த மக்கள் சந்தடியுள்ள இடத்தில்தான் உட்கார்ந்து எழுதுவார். இதற்காகவே கூச்சல் மிகுந்த ஓட்டலை நாடிச் சென்று அங்கே அமர்ந்து எழுதுவாராம்!.
தகவல் : மெர்வின்.
2 comments:
ஒவ்வொரு எழுத்தாளர்கள் பற்றி தாங்கள் பதிவிட்ட விதமும் அறிய புகைப் படங்களும் அருமை. இணைந்திருப்போம்.
நேரம் இருந்தால் இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள்
http://seenuguru.blogspot.in/2012/04/blog-post_30.html
நன்றி. கண்டிப்பாக நண்பரே.
Post a Comment