Sunday, February 26, 2012

நாங்க எல்லாம் அந்த காலத்திலேயே......


'ஜியோடிங்கியா ஜெங்கி' (Xiaotingia Zhengi) என்ற இதற்கு முன் கேள்விப்பட்டிராத சீன விலங்கின் வரைப்படம் இது. பாறைப் படிமங்களில் உறைந்து கிடந்த பழங்கால எலும்புகளை வைத்து இந்த மாதிரிப் படத்தை உருவாக்கியுள்ளனர். இரண்டு பெரிய பிரமாண்டமான இறக்கைகள், சின்ன கூர்மையான மூக்கு மற்றும் தடிமனான கால்கள் கொண்ட இவை, டைனோசர் போன்ற வடிவமுள்ள பறவை இனத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என்று சீன தொல்பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இது 'டைனோசர் லேட் ஜூராசிக்' காலகட்டத்தில் வாழ்ந்ததாம். வெறும் 800 கிராம் எடையே கொண்ட குட்டி இனமான இதுவே, பறவைகளின் முன்னோடியாக இருக்கலாம் என்கிறார்கள்.


வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த 'ஷீல்டுக்ரோக்' (Shieldcroc) என்ற இனத்து முதலையின் மாதிரிப் படம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக்கழகம். இப்போது உலகெங்கும் வாழும் முதலை இனங்கள் அனைத்துக்கும் மூதாதை இதுதானம் !


இதன் வாய்ப்பகுதிக்கு முன்பாக ஒரு பாதுகாப்புக் கவசம் அமைந்து இருந்ததாம். அதனாலேயே இப்படி பெயர் வந்திருக்கிறது. முதலை இனம் எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தது என்பதை அறியவும், அரிய முதலை இனம் அழிந்து விடாமல் காக்கவும் இந்த கண்டுபிடிப்பு உதவும் என்கிறார்கள்.



பிரான்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால மனிதனின் மண்டையோட்டு முன்நெற்றிப் பகுதியை ஆராய்ச்சி செய்கிறார் தொல்பொருள் ஆய்வாளர் மேரி ஆன்டோனி. பிரெஞ்ச் ரிவேரா பகுதியில் உள்ள குகை ஒன்றில் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இது வேட்டையாடி வாழ்ந்த ஹோமோ எரெடக்ஸ் (Homo Erectus) இனத்தைச் சேர்ந்த 25 வயது ஆணின் மண்டையோட்டுப் பகுதி.

1
லட்சத்து 70 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. ஹோமோ எரெடக்ஸ் என்ற இந்த பழங்கால மனித இனத்தவரே உணவை சமைத்துச் சாப்பிடும் பழக்கத்தை முதன் முதலில் கற்றுக் கொண்டவர்கள். அதன் பிறகே மனித இனம் பரிணாம வளர்ச்சியில் அதீத முன்னேற்றம் கண்டது.




தகவல் : ஷம்ரிதி.

0 comments:

Post a Comment