Wednesday, February 29, 2012

தகவல் களம் !


பழங்கால இந்தியாவின் நலந்தா பல்கலைக்கழகத்தில் ஏராளமான அரிய புத்தகங்களுடன் இருந்த நூலகத்தை, 'முத்துகள் நிறைந்த கடல்' என்று உலகமே வியந்து பாராட்டுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியின் போது தொடங்கப்பட்ட இந்திய தேசிய நூலகம் கொல்கத்தாவில் உள்ளது. இந்த நூலகத்தில் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியான புத்தகங்கள் பல உள்ளன. இதே போல மற்றொரு இந்திய நூலகமும் புகழ் பெற்றது. அது, நம் சென்னையின் கன்னிமரா நூலகம்.


ஒரு பூனை நம்மை உற்றுப் பார்க்கிறது என்றால் அதன் பார்வை, "நீ என்ன பெரிய இவனா ?" என்று எடை போடுவது போல் இருக்கும். "நான் ஏன் உன்னை நம்ப வேண்டும் ? நீ எனக்கு யார் ? உனக்கு இங்கே என்ன வேலை ? என்பது போன்ற கூரிய விசாரணை அந்தப் பார்வையில் பதிந்திருப்பதாக விலங்கியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பூனைகள் ஆழ்ந்து தூங்குபவை. தூங்கும்போது கனவும் காண்கின்றனவாம்.



அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் அமைந்துள்ளது ட்யூபா நகரம். இங்கு பழங்காலச் சித்திர எழுத்துக்களை கண்டுபிடித்துள்ளனர் ஆய்வாளர்கள். குதிரை, மனிதனின் முகம், செடியின் வேர் என 5000 சித்திரங்கள் அங்குள்ள பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ளன. ஹோபி பழங்குடியினர் வரைந்தவையே இவை. இப்படி ஒரே இடத்தில் அதிக சித்திரக் குவியல் கிடைத்தது இதுவே முதல் முறை. ஏதோ செய்தியை மற்றவர்களுக்குச் சொல்ல இவை வரையப்பட்டிருக்கலாம் என்பதால் 'நியூஸ் பேப்பர் ராக்' (Newspaper Rock- Arizona) என்று இதற்கு பெயரிட்டு இருக்கிறார்கள்.


தங்க இழைக் கொண்டு நெய்தது போல் தகதகவென்று மின்னும் இந்த உடையை சைமன் பீர்ஸ் மற்றும் நிக்கோலஸ் கோட்லே என்பவர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். லண்டனில் இருக்கும் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் இந்த உடையை நெய்ய நான்கு ஆண்டுகள் பிடித்தது.


ஒரு வகை சிலந்தி வலையில் நெய்த ஆடை இது. மடகாஸ்கர் பகுதியில் கோல்டன் ஆர்ப் சிலந்திகள் (Golden Orb spiders) உள்ளன. இவை பின்னும் வலைகள் தங்க நிறத்தில் இருக்கும். எவ்வாறு பட்டுப் புழுவின் கூட்டிலிருந்து பட்டு நூலைத் தயாரிக்கிறோமோ, அதே போல் இந்த சிலந்தியின் வலையிலிருந்து இந்த தங்க நிற நூலைத் தயாரிக்கிறார்கள். ஒரு உடை தயாரிக்க மட்டுமே 10 லட்சம் சிலந்தி வலைகள் தேவைப்பட்டுள்ளன.




தகவல் : ராஜி ராதா, ஜக்கி விக்கி, ஷம்ரிதி, ப்ரியா.

0 comments:

Post a Comment