பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருக்கும் லோவர் அருங்காட்சியகத்தில் நிரந்தரமாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது மோனோலிஸா ஓவியம். ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் இருக்கும் பிராதா அருங்காட்சியகம் 'பளிச்' சென இருக்கும் இன்னொரு மோனோலிஸா ஓவியத்தை கடந்த வாரம் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
இடது : டாவின்சி - வலது : மாணவர்.
டாவின்சி காலத்திலேயே அவரது மாணவர் ஒருவரால் வரையப்பட்ட பிரதியாம் இது. சுமார் 500 ஆண்டுகளாக எங்கோ பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாம். அதை எடுத்து வந்து அவர்கள் வைத்திருக்கிறார்கள். அச்சு அசல் மோனோலிஸா போல இருந்தாலும், இதில் ஏராளமான வித்தியாசங்களைக் காணலாம்.அமெரிக்காவில் இருக்கும் வேலை வாய்ப்பு நிறுவனமான கேரியர்பில்டர்ஸ்.காம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அந்த விளம்பரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 'திறமைசாலிகளுக்கு நாங்கள் பொருத்தமான வேலை வாங்கித் தருகிறோம்' என்பதை உணர்த்த அந்த நிறுவனம், சிம்பன்சி குரங்கைப் பயன்படுத்தி இருக்கிறது. கோட்-டை சகிதம் ஆபிஸில் ஸ்டைலாக வேலை பார்க்கும் அந்த சிம்பன்சி, சக மனித ஊழியர்களைவிட அதிக திறமை காட்டுகிறது.
ஆனால், 'இப்படிப்பட்ட விளம்பரங்கள் மனிதர்கள் மனதில் சிம்பன்சிகள் பற்றி தவறான எண்ணத்தை விதைக்கும். அது அழிந்து வரும் அரிய விலங்கினம். சிம்பன்சிகள் மீது நாம் அனுதாபம் காட்ட வேண்டும். இந்த விளம்பரம் அவைகள் மீது வெறுப்பையும், பொறாமையையும் உண்டாக்கிவிடும்' என்று ஆதங்கப்படுகிறார்கள் அமெரிக்க வன உயிர் ஆர்வலர்கள்.
எத்தனை நாளைக்குதான் சவப் பெட்டிகளை ஒரே மாதிரி செய்து கொண்டிருப்பது? ஆறரை அடி நீள செவ்வக பெட்டியாகவே இது இருக்க வேண்டுமா ? இதிலும் புதுமை செய்யலாமே' என லண்டனில் சிலர் யோசித்ததன் விளைவுதான் இது.
சிறிய அளவிலான விமானம், காலணி, கிடார் இசை கருவி என வித விதமான கலை வடிவில் சவப் பெட்டிகளை செய்து காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். பிரிட்டனிலும், கானா நாட்டிலும் இது போன்ற சவப் பெட்டிகளைப் பயன்படுத்துவது இப்போது நாகரீகமாகிவிட்டது. இன்னும் சொல்லப் போனால், ஒரு சிலர் "தங்கள் இறந்த பிறகு எந்த மாதிரியான சவப்பெட்டி வேண்டும் என்று தங்கள் உறவினர்களிடம் முன்கூட்டியே சொல்லி விடுவார்களாம். மண்ணில் புதைந்து போகும் சவப்பெட்டியிலும் கலைத்திறன் காட்ட முடியும்.
தகவல் : ப்ரியா.
2 comments:
arumayana pathippu sir...
Informative...
melum pagirungal :)
நன்றி கார்த்திக்.
Post a Comment