Friday, September 2, 2011

சொல் முக்கியமா, செயல் முக்கியமா ?



"இரண்டும்தான். சமயங்களில் ஒரு சொல், செயலைவிட வீரியமானதாகிவிடுகிறது. சாதகமாகவோ, பாதகமாகவோ !

அதனால்தான் 'ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் ஒர் அரசியல் இருக்கிறது' என்றார் கார்ல் மார்க்ஸ்.

சமீபத்திய உதாரணம் ஒன்று, ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளவன் உள்ளிட்டவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்று தங்கபாலு பேட்டி அளித்தார்.

அப்போது 'ராஜீவ் கொலையாளிகளைத் தூக்கில் போட வேண்டும் என்கிறீர்கள். ஆனால், இலங்கைத் தமிழர்களைக் கொடூரமாகக் கொலை செய்த ராஜபக்சேவுக்கு இந்தியாவில் காங்கிரஸ் வரவேற்பு கொடுக்கிறதே ?" என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, தங்கபாலு அளித்த பதில்,

'இலங்கை வன்முறையை காங்கிரஸூம் கண்டித்து உள்ளது. எங்கு படுகொலை நடந்தாலும் அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் குரல் கொடுக்கும்;.

நன்றாக கவனியுங்கள், இலங்கையில் நடந்தது வெறும் 'வன்முறை' மட்டும்தானாம்.

ஆனால், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டதோ 'படுகொலை'யாம். லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதை 'வன்முறை' என்று சுருக்கும் சொல்லும் வன்முறையானதுதானே ?"



தகவல் : ஆதிரை, காயல்பட்டினம்.

0 comments:

Post a Comment