Monday, September 12, 2011

அறுவை சிகிச்சையும், மயக்க மருந்தும்....

அக்காலத்தில் அறுவைசிகிச்சை என்றாலே நடுங்கி கதறுவார்கள். பாதி அறுவைசிகிச்சையில் வலி தாங்கமல் உண்மையாகவே செத்துபோனவர்களும் உண்டு. ஒரு சிறுவனை நான்கு பேர் நகராமல் பிடித்துக் கொண்டதையும், சிறுவனின் அலறலையும், நடந்த அறுவைசிகிச்சையை வரலாற்று ஆய்வாளர் ஒருவர் நேரில் பார்க்க விரும்பினார்.

பிறகு, இப்படி தன் நாட்குறிப்பில் எழுதினார், 'என்னால் அந்தக் காட்சியைப் பார்க்க முடியவில்லை. நடுங்கிபோய் வெளியே ஒடி வந்துவிட்டேன். ஒராண்டுக்கு அந்த அலறல் என் மனசுக்குள் கேட்டது. எவ்வளவு பணம் கொடுத்தாலும் இன்னொரு அறுவைசிகிச்சையை நான் இனி பார்க்க மாட்டேன்!" என்றார். அவர்தான் பரிமாண வளர்ச்சியின் தந்தை சார்லஸ் டார்வின்(1809-1882).
1842-ம் ஆண்டுதான் ஈத்தர் (Either) மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது - வில்லியம் க்ளார்க் என்கிற மருத்துவரால் ! ஈத்தர் உதவியோடு, எல்லோர் முன்னிலையிலும் ஒர் இளைஞரின் பல்லைப் பிடுங்கினார் அவர். வலியே தெரியவில்லை.

1831-ல் க்ளோரோஃபார்ம் கண்டுபிடிக்கப்பட்டு, இன்றைய தேதியில் அனஸ்தீஷியா பிரமாண்டமாக முன்னேறி இருக்கிறது. மயக்க மருந்தைக் கையாளும் நிபுணர்கள் இன்று இல்லையேல், நம் நிலை அதோ கதிதான்.


தகவல் : மதன் - விகடன்

0 comments:

Post a Comment