Monday, September 12, 2011
எதற்கெடுத்தாலும் மற்றவர்களிடம் நம்மைப்பற்றி புறஞ் சொல்பவர்களை எப்படி எதிர்கொள்வது ?
இதே கேள்வியுடன் ஒருவர் ஜென் குருவிடம் சென்றார். 'கழுதை, எருமை, குதிரை இவற்றில் நீ எதை போல் இருக்க விரும்புகிறாய் ?' என்று கேட்டார் குரு.
கேட்டவருக்கு ஒன்றும் புரியவில்லை.
'நீ கழுதையை அடித்தால் அது என்ன செய்யும் ?' என்று கேட்டார் குரு.
'பின்னங்காலால் உதைக்கும்' என்றார் அவர்.
'எருமையை அடித்தால்?' 'எதுவும் செய்யாது... அமைதியாக இருக்கும் ஐயா'.
நல்லது.
'குதிரையை அடித்தால்?' 'அதைக் கட்டளையாக எடுத்துக் கொண்டு இலக்கை நோக்கி வேகமாக ஒடத் தொடங்கும்'.
'இப்போது நீ முடிவுக்கு வந்திருப்பாய்' என்றார் குரு.
உங்களுக்கு பதில் கிடைத்ததா ?".
தகவல் : ஆர். மங்கை, தஞ்சாவூர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment