Wednesday, September 21, 2011

டயர்- டியூப் எப்படி வந்தது ?

ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஜான் டன்லப். இவர் ஒரு மிருக வைத்தியர். அவருடைய மகனின் மூன்று சக்கர சைக்கிளின் சக்கரங்கள் வீதிகளில் உள்ள கற்களில் பட்டு அடிக்கடி சேதமடைந்தன.



சக்கரங்கள் சேதமடையாமல் இருக்க எதையாவது செய்து தரும்படி அவரது மகன் டன்லப்பிடம் கேட்டுக் கொண்டார். இதுதான் டன்லப் முதன் முதலாக டயர்- டியூப் கண்டுபிடிக்க காரணமாக இருந்த நிகழ்வு. சில ஆண்டுகள் தீவிர முயற்சியில் இறங்கி 1888 முதல் டயர்- டியூப்பைக் கண்டுபிடித்தார்.



வால்வ் பொருத்தப்பட்டு அதன் வழியே காற்று அடிக்கப்பட்டு நன்கு உப்பிய டியூப் உள்ளடங்கிய சக்கர வடிவில் டயர் கண்டுபிடிக்கப்பட்டது. அவரது நினைவாகவே ஹார்வி டியூக்ராஸ் என்பவர் டன்லப் ரப்பர் கம்பெனியை நிறுவியது தனிக்கதை.


தகவல் : நீலாமணி கோவிந்தராஜன் பள்ளிக்கரணை.

0 comments:

Post a Comment