Wednesday, March 14, 2012

இப்படியும் சில....


எதையாவது சம்பந்தமில்லாமல் ஒப்பிட்டு சர்ச்சைகளில் மாட்டுவதே விளம்பரத் தந்திரமாக இருக்கிறது. அமெரிக்காவின் மெக்டொனால்டு நிறுவனம் சமீபத்தில் ஒரு விளம்பரம் வெளியிட்டது. 'எங்கள் தயாரிப்பான சிக்கன் துண்டுகளை சாப்பிடுவது, ஆதரவற்ற தெரு நாயை எடுத்து வளர்ப்பதைவிட அப்படி ஒன்று ஆபத்தான விஷயம் இல்லை' என்றது அந்த விளம்பரம். விலங்குகள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே, விளம்பரத்தை திரும்ப பெற்றுக் கொண்டு மன்னிப்பும் கேட்டு இருக்கிறது அந்த நிறுவனம்.



தேவாங்கு இனத்தைச் சேர்ந்த பிராணி டார்ஸியர் (Tarsier). அழிந்து வரும் அரிய விலங்குகள் பட்டியலில் இருக்கும் இவை பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிகம் வசிக்கின்றன. பெரிய கண்களை உடைய டார்ஸியர்கள் கூட்டம் கூட்டமாக வசிக்கின்றன. இவை தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதர்களாலோ, மற்ற விலங்குகளாலோ கேட்க முடியாத அல்ட்ரா சவுண்டு அலைவரிசையில் அதிக சத்தத்துடன் ஒலியெழுப்பி ஒன்றுடன் ஒன்று பேசி கொள்கின்றனவாம்.




இணையதளப் பக்கங்களில் அதிகம் உபயோகிக்கப்படும் உருவம் ஸ்மைலி பேஸ் (Smiley Face). சிரிப்பின் குறியீடாக அறியப்படும் இது மஞ்சள் உருவத்தில் இருக்கும். சிரிக்கும் கோடாக வாய் இருக்கும். 2011 ஜூலையில் கனடா நாட்டில் 2961 பேர் கூட்டமாக நின்று இந்த உருவத்தை உருவாக்கியதே இதுவரை சாதனையாக இருந்தது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் 25 பள்ளிகளைச் சேர்ந்த 4444 மாணவர்கள் கூடி இந்த சாதனையை முறியடித்தனர்.




தகவல் : எஸ்.உமாபதி.

0 comments:

Post a Comment