19-ம் நூற்றாண்டின் மத்தியில் சுத்தம் செய்யும் கருவியைக் கண்டுபிடிக்கப் பலர் முயன்றனர். பிரஷ் போன்ற அமைப்புகளால் தூசியைத் தட்டிவிடுதல் அல்லது சைக்கிளுக்குக் காற்றடிக்கும் கருவியைப் பயன்படுத்தி தூசியை உறிஞ்சிக் கொள்ளும் முறைதான் இருந்தது. மின்சார மோட்டார் கண்டுபிடிக்கப்பட்டதும் இக்கருவிகளின் உருவம் மாறியது. ஒரு மின் துடைப்பான் காற்றை உறிஞ்சி தரை முழுவதும் ஊதிவிடும். தூசி பறந்து வந்து குப்பைத் தொட்டியில் வந்து விழும். குப்பைத் தொட்டியில் விழுவதைவிட பல மடங்கு அதிக தூசி வீடெங்கும் சேர்வதுதான் பிரச்சனை!
1908-ஆண்டின் மின்சார எந்திரத் துடைப்பான்.
இப்படி இயங்கும் கருவிகளில் சில மாறுதல்களைச் செய்த செசில் பூத் (Cecil Booth) என்பவர், வாயில் ஒரு கைக்குட்டையைக் கட்டிக் கொண்டு உறிஞ்சத் தொடங்கினார். அவர் நினைத்தது போல தூசி உறிஞ்சப்பட்டு கைகுட்டையில் சேர்ந்தது. 1901-ல் வேக்குவம் க்ளினர் கண்டுபிடிக்கப்பட இந்த பரிசோதனை முயற்சிதான் காரணம்.
James Murray Spangler
ஆனால், அக்கருவி மிகப்பெரியதாக இருந்ததால், குதிரை வண்டியில் எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. குதிரைகளும்,வேக்குவம் க்ளினர்களும் வெளியில் இருக்க, ஹோஸ் பைப்பை மட்டும் உள்ளே எடுத்துச் சென்று சுத்தம் செய்தார்கள்.தூசியை உறிஞ்சும் போது எழும் சத்தத்தால் குதிரைகள் பயந்து கத்துவது வழக்கம். 1908-ல் ஜேம்ஸ் எம்.எஸ்.(James Murray Spangler) சிறிய வேக்குவம் க்ளினரை உருவாக்கிய பிறகே, இதன் பயன்பாடு அதிகரித்தது.
தகவல் : முத்தாரம் இதழ்.
0 comments:
Post a Comment