நாடும் தனிமமும்
நாட்டின் பெயரிலேயே உள்ள தனிமங்கள் அமெரிஷியம்(Am), பிரான்சியம்(Fr), ஜெர்மேனியம்(Ge), பொலோனியம்(Po) இவையெல்லாம் நாட்டின் பெயர் சொல்லும் தனிமங்கள்.
செம்மொழியாம் தமிழ் மொழி
தமிழ் மொழியில் ஒரே இன எழுத்துகள் அதிகம் கொண்ட நீண்ட வார்த்தை "தித்தித்தது".
மன்னாதி மன்னன்
ராஜபுத்திர வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ரஞ்சித் சிங். இவர் மிகுந்த வீரமும், தன்மானமும் மிக்ககவர். ஆனால், முறையாக கல்வி பயிலாதவர். அதனால் தன் நாட்டு மக்கள் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும் என்பதில் அளவற்ற ஆர்வம் கொண்டு, பல கல்வி சாலைகளை நிறுவினார். பிறர் தன்னை 'மகாராஜா' என்று அழைப்பதைக்கூட விரும்பாத அளவு எளிமையானவர். ('பாய்சாப்' ) சகோதரா என்று அழைக்க சொல்லி வற்புறுத்துவார். 48 ஆண்டுகள் (1790 - 1838 ) ஆட்சி புரிந்த நல்லவர்.
தகவல் : வித்யுத், முத்தாரம் இதழ்
0 comments:
Post a Comment