Wednesday, October 12, 2011

தகவல் துளி !

கிழக்குத் தொடர்ச்சி மலை



மேற்கு தொடர்ச்சி மலை போல தொடர்ச்சியான மலை அல்ல கிழக்குத் தொடர்ச்சி மலை. மகாநதி, கோதாவரி, கிருஷ்ணா, காவேரி ஆகிய நதிகள் கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடர்க்கு இடையே பாய்வதால் இந்த மழைத் தொடர் அரிக்கப்பட்டு தொடர்ச்சி இல்லாமல் விட்டு விட்டு செல்கின்றது.

வாடகை பயணம்


இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆரியப்பட்டா, 1975 ஏப்ரல் 19 அன்று விண்ணில் பாய்ந்தது. சோவியத் யூனியனில் உள்ள கபுஸ்டின் என்ற இடத்தில் இருந்து "காஸ்மோஸ் 3 எம் லாஞ் வெஹிக்கிள்' மூலம் பயணமானது. அப்போது நம்மிடம் ராக்கெட் தொழில் நுட்பம் இல்லை.

பாம்பின் விஷம்


பாம்பின் விஷம் எவ்வளவு கொடியது என்றால், அதன் வீரியம் 32 ஆண்டுகள் வரை மாறாதிருக்கும் என்பதால்தான். அதனாலேயே சிலவகை மருந்து தயாரிப்பில் பாம்பின் விஷம் சேர்க்கப்படுகிறது.

புது புது அர்த்தங்கள்


கிரேக்க மொழி தந்த சொல் 'டெலெஃபோன்' அப்படியென்றால், ''தூரத்திலிருந்து பேசுவது" என்று பொருள். மெடிசன் என்ற சொல் 'மெடிகார்' என்ற இலத்தீன் சொல்லிருந்து வந்தது. இதற்கு "நான் குணப்படுத்துகிறேன்" என்று அர்த்தம். "நான் பார்க்கிறேன்" என்று விளக்கம் தரக்கூடிய சொல் "வீடியோ". இது இலத்தீன் சொல்லின் பரிசு.



- டி. கார்த்திக் மற்றும் வித்யுத், முத்தாரம்.

0 comments:

Post a Comment