Tuesday, October 11, 2011

படம் சொல்லும் சேதி !


கின்னஸ் சாதனைக்காக ஆர்ப்பரிக்கும் கடல் அலைக்கு இடையே ஒரே சமயத்தில் 6 நாய்கள் ஒரே பலகையில் நின்றபடி அலையில் சறுக்கி வரும் சாகச நிகழ்ச்சி கலிபோர்னியாவில் ஹன்டிங்டன் கடற்கரையில் நடைபெற்றது. ஆனால், விதிமுறைப்படி 10 வினாடிகளுக்கு இந்த நாய்களால் பலகையில் நிற்க முடியாததால், கின்னஸ் முயற்சி தோல்வியில் முடிந்தது.



மலேசியாவில் நடைபெற்ற "தி கே. எல். டவர் இன்டர்நேஷனல் ஜம்ப்" நிகழ்ச்சியில் அந்தரத்தில் பறந்து வீரர்கள் சாகசம் செய்யும் காட்சி.




லியனார்டோ டாவின்சி வரைந்த 'த விட்ரூவியன் மேன்' என்ற ஓவியம் புகழ் பெற்றது. அதே ஓவியத்தை நார்வேயைச் சேர்ந்த ஜான் க்விக்லீ என்ற கலைஞர் ஆர்டிக் பனிப் படலத்தின் மேல் வரைந்துள்ளார். பாதி ஐஸ் கட்டி உடைந்து ஒரு பக்க ஓவியம் இல்லாத நிலையிலும் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது ஓவியம்.

தகவல் : முத்தாரம் இதழ்.

0 comments:

Post a Comment