Sunday, October 30, 2011
'கிச்சன் கேபினட்' வார்த்தை பிறந்த விதம்
அரசாங்கத் தலைவர்களின் அதிகாரபூர்வமற்ற ஆலோசகர்கள் வட்டம் 'கிச்சன் கேபினட்' என்று அழைக்கப்பட்டது.
இந்த வார்த்தை 1832 - ல் உருவானது. அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக ஆண்டரூ ஜாக்சன் என்பவர் இருந்தார். அவர் தனது நெருங்கிய நண்பர்கள் மூன்று பேருடன் அடிக்கடி அதிகாரப்பூர்வமில்லாத தனிப்பட்ட கூட்டங்களை நடத்துவார்.
அந்த நண்பர்கள் வெள்ளை மாளிகையின் பின் கதவு வழியாக நுழைந்து சமையலறை வழியாக மாளிகைக்குள் வருவார்கள். அதிலிருந்து, அமெரிக்க ஜனாதிபதியின் நெருங்கிய நட்பு வட்டத்தை 'கிச்சன் கேபினட்' என்று பத்திரிகையாளர்கள் குறிப்பிடத் தொடங்கினார்கள்.
பின்னர் படிப்படியாக, உலகம் முழுவதும் அதிகரப்பூர்வமற்ற அரசியல் ஆலோசகர்களைக் குறிக்கும் வார்த்தையாக மாறியது.
தகவல் : தினத்தந்தி
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment