Tuesday, October 25, 2011

ஏப்ரல் பூல் உளவாளி .


நாளை காலை உலகம் அமைதியாக இருக்க வேண்டுமா ? இல்லை ஆர்பாட்டமாக ஆட்டம் போட வேண்டுமா ? என்பதை தீர்மானிப்பது வல்லரசுகளின் உளவு நிறுவனங்கள்தான்.

ஒரு நாட்டை உளவு பார்ப்பதற்காக அதற்கு பகைமையான நாடுகள் தங்கள் சார்பாக உளவாளிகளை அனுப்பி வைப்பது, சரித்திரம் காலம் தொட்டு நடந்து வரும் விஷயம்.

அப்படி ஒரு உளவாளியைத் தான் அமெரிக்கா ஏற்பாடு செய்தது. அந்த உளவாளியின் பெயர் 'ஏப்ரல் பூல்' என்பது. இது ஒரு கற்பனை பெயர்தான்.


ஆனால் இவர் சதாம் உசைனின் அழிவுக்கு காரணம் என்பது யாருக்கும் தெரியாது. அமெரிக்க புலனாய்வு பிரிவு ஏற்பாடு செய்திருந்த இந்த உளவாளி திறமையாக செயல்பட்டு சதாம் உசைனை நெருங்கி விட்டார்.

கூடவே அவரின் நம்பகத்தன்மையையும் பெற்று விட்டார். அந்த நம்பிகை வீண் போகாத வகையில் அமெரிக்காவைப் பற்றி 100 சதவீதம் சரியான நம்பகமான துப்புகள் கொடுத்ததால் ஈராக் ராணுவம் ஏப்ரல் பூலை விலைக்கு வாங்கியது.

அமெரிக்கா பற்றி தரும் ஒவ்வொரு தகவலுக்கும் லட்சகணக்கில் பணம் பெற்றுக் கொண்டார். அதே நேரத்தில் அமெரிக்காவின் நம்பிகையையும் 'ஏப்ரல் பூல்' தொடர்ந்து தக்க வைத்து கொண்டார். ஈராக் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த நேரம். அப்போது " அமெரிக்கா ஈராக்கின் வடக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் இருந்து தாக்குதல் நடத்த திட்டம் போட்டிருக்கிறது" என்ற தகவல் கொடுத்தார், 'ஏப்ரல் பூல்' .

இதனை நம்பிய சதாம் உசேன் அங்கு படைகளை குவித்தார். ஆனால், அமெரிக்கா ஏற்கனவே தான் போட்ட திட்டப்படி கிழக்கு மற்றும் தென் கிழக்கு திசையில் இருந்து அமெரிக்க காலாட்படை ஆக்ரோஷமாகத் தாக்கியது. ஈராக் ஆடிப்போனது. மூன்றே வாரங்களில் பாக்தாத் விழ்ந்தது.

ஈராக் இராசயனப் பேரழிவு ஆயுதங்கள் வைத்திருப்பதாக சொல்லித்தான் போரை ஆரம்பித்தது, அமெரிக்கா. அங்கே ஆயுதங்களும் இல்லை. ஆய்வுக்கூடங்களும் இல்லை. போரின் இறுதியில் அமெரிக்காவே ஏப்ரல் பூல் ஆனது தனிக் கதை.

'கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்குத் தான்'.



தகவல் : தினத்தந்தி.

0 comments:

Post a Comment