Tuesday, October 18, 2011
ஓசோன் மண்டலத்தில் வட அமெரிக்காவை விட பெரிய ஓட்டை
சுற்றுசுழல் மாசு காரணாமாக பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்து உள்ளது. அண்டார்டிகா மீதான ஓசோன் மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டதை முதன் முதலாக 1970 -ம் ஆண்டுகளில் தான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இந்த ஓட்டை ஆண்டுக்கு ஆண்டு விரிவாகி வருகிறது.
2006 - ம் ஆண்டு செலுத்தப்பட்ட அமெரிக்காவின் ஆரோ செயற்கைக்கோள். அண்டார்டிகா மீது உள்ள ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டு உள்ள ஓட்டை 2 கோடியே 75 லட்சம் சதுர கி.மீ. பரப்புக்கு விரிவு அடைந்து உள்ளதை கண்டுபிடித்தது. இது வட அமெரிக்காவை விட பெரியது.
சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்கள் பூமியின் மீது விழுந்து அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படாமல் காப்பது ஓசோன் மண்டலம்தான். இந்த மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டு இது ஆண்டுக்கு ஆண்டு பெரியதாகி வருவது ஆபத்தை அதிகரிப்பது ஆகும்.
தகவல் : தினத்தந்தி.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
"இந்த மண்டலத்தில் ஓட்டை ஏற்பட்டு இது ஆண்டுக்கு ஆண்டு பெரியதாகி வருவது ஆபத்தை அதிகரிப்பது ஆகும்."
இதை தடுக்க வேண்டும் என்றால் சுற்றுசுழல் மாசு படாமல் பாதுகாக்க வேண்டும்.
நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com
நன்றி,கண்ணன்
Post a Comment