Monday, July 25, 2011

அண்ட வெளியில் மிகப்பெரிய தண்ணீர் கோள் !

அமெரிக்காவில் உள்ள கலிப்போர்னியா தொழில்நுட்ப கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் குழுவினர், வானியல் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இந்த பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய தண்ணீர் கோள் ஒன்றை கண்டறிந்தனர். சூரியன், பூமி உள்ளிட்ட பல்வேறு கோள்கள் அடங்கிய அண்டவெளியில் அந்த கோளும் உள்ளது.


அந்த கோளில், பூமியில் உள்ள கடல்களின் மொத்த நீரின் அளவைவிட 140 லட்சம் கோடி மடங்கு அதிகமாக தண்ணீர் உள்ளது. பூமியில் இருந்து 1200 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் அந்த கோள் இருக்கிறது. மிகப் பிரகாசமான துகள்கள் சூழ்ந்திருப்பதால், கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் அக்கோள் காணப்படுவதாக ஆய்வு குழுவினர் தெரிவித்தனர். மேலும், சூரியனைவிட ஒரு லட்சம் மடங்கு அதிகமாக அந்த கோள் இருக்கிறது.

தகவல் : தினதந்தி- உலக செய்திகள் (25.07.2011)

0 comments:

Post a Comment