Monday, July 25, 2011

தனி ஒரு மனிதனுக்கு உணவு "இல்லாமலேயே" ஜகத்தினை அழித்திடுவோம் !

துபாயை சேர்ந்த பெரும் பணக்காரான ஹாமத், அபுதாபி அருகே உள்ள அல்புதைஷி எனும் குட்டி தீவை விலைக்கு வாங்கி இருக்கிறார். தற்போது அந்த தீவின் மீது 3 கீலோ மீட்டர் நீளத்துக்கு தன்னுடைய பெயரை 'பிரமாண்ட வடிவில்' பொறித்தி வருகிறார். ஆங்கில பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்படும் அந்த பெயரை, விண்ணில் இருந்து பார்க்கலாம் என கூறப்படுகிறது. பெயரின் ஒவ்வொரு எழுத்தும் அரை கிலோ மீட்டர் நீளத்தில் எழுதப்பட்டுள்ளன.


தற்போதைய நிலவரப்படி, சீனப் பெருஞ்சுவர் மட்டுமே விண்ணில் இருந்து பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சாதனைக்களுக்காக அதிகம் செலவு செய்து வரும் ஹாமத், உலகிலேயே மிக விலை உயர்ந்த காரை ரூ.13 கோடிக்கு சமீபத்தில் வாங்கியுள்ளார். இது தவிர, உலகிலேயே பிரமாண்டமான லாரியை வடிவமைத்து வருகிறார். சாதாரண லாரியைவிட அது 64 மடங்கு பெரியாதாக இருக்கும். மேலும், 200 வெளிநாட்டு பழமையான கார்களைக் கொண்ட அருங்காட்சியாகம் ஒன்றையும் அவர் நடத்தி வருகிறார்.

தகவல் : தினத்தந்தி-உலக செய்தி (26.07.2011)

குறிப்பு : தலைப்பை மீண்டும் வாசிக்க.....அர்த்தம் புரியும்......

0 comments:

Post a Comment