Tuesday, July 26, 2011

பிரங்கி வண்டிகளில் 'டாங்க்' எனப்படுவது ஏது ?


பண்டைய இந்தியாவில் பருவகால மழையைச் சேமிக்கக் குளங்கள் வெட்டப்பட்டன. அவை 'டேங்கன்' (Tanken) என்றே அழைக்கப்பட்டன.
இந்தக் கருத்து, 17-ஆம் நூற்றாண்டில் பிரிட்டனுக்கு கொண்டு வரப்பட்டது.

ஆங்கிலத்தில் 'டேங்க்' என்று அறிமுகமாயிற்று. அதாவது தண்ணீரைச் சேமித்து வைக்கும் இடம் என்று பொருள்.

1915-ல் ஆயுதம் தாங்கிய பெரிய போர் வண்டிகளை பிரிட்டன் வடிவமைத்தது. தண்ணீர் டேங்குகள் தயாரிக்கிறோம் என்று கூறிக்கொண்டு அவை உருவாக்கப்பட்டன.


"Tanks" என்று எழுத்தப்பட்ட பெரிய பெட்டிகளில் அவை அனுப்பட்டன.
(Somme) சோம் என்ற போரில் முதன்முதலில் அவை அறிமுகப்படுத்தப்பட்டன.

தகவல்: தினத்தந்தி

0 comments:

Post a Comment