Thursday, July 21, 2011

சுவரெழுத்தில் புரட்சி



புதுமையை விரும்பும் பகுத்தறிவாளர்களே
என் வணக்கம்!
பதுமையாயிருக்கும் மக்களைத் திருத்த
ஏன் சுணக்கம்!
...
அறுக்கத் தாலி கட்டச் சொல்லிவிட்டு
தீர்க்க சுமங்கலி என்று புரட்டு செய்யும் பார்ப்பான்!
...
வானில் உயர்ந்து நிற்கும் கோபுரம்;
தமிழர் மானத்தைத் தாழ்த்தி நிற்கும் விகாரம்!
...
காலில் பிறந்தவன் கடை ஜாதி என்கிறான்;
தலையில் பிறந்தவனாம் தறுதலை ஜாதி!
...
வீட்டுக்குள் வளரும் செடியும், ஜாதிக்குள் வாழும் மனிதனும்
வளர்ச்சிக்குத் தடையும், மனத் தேக்கமும் ஏற்பட்டு கிளர்ச்சி கொள்ள
இயலாத தாவரமே யாவர்!
...
சாக்ரடீஸ் உண்ட உண்மை நஞ்சு கிரேக்கத்தின் ஆஸ்திகம் அழித்தது
சிவன் உண்ட புருடா நஞ்சு ஆஸ்திகர்களின் அறிவை அடியோடழித்தது!
...
சமயவாதம் என்பது சந்தர்ப்ப வாதமே!
சமயநெறி என்பது ஜாதி நெறியே!
...
தகுதி இருந்தா ஒவ்வொரு காரியத்தையும் செய்கிறோம்?
காரியத்தைச் செய்துதானே அதில் திறமை பெறுகிறோம்!
...
தானாகவே எல்லாம் மாறிவிடும் என்பவன்
எந்தத் திராணியுமற்றப் பிராணியேயாவான்!
...
நாம் விரும்பாவிட்டாலும் நமக்குச் சில
எதிரிகள் தோன்றவே செய்வார்கள்!
...
உண்மைக்கு மாறாகக் காண்பது காட்சி மாறாட்டம்;
இல்லாததை இருப்பதாக எண்ணச் செய்வது மனமாறாட்டம்!
...
வயிற்றுப் பசி உடம்பை வளர்க்கும்
அறிவுப் பசி மனிதத் தன்மையை வளர்க்கும்!
...
மனித உரிமைகளை பெண்களுக்கும் தந்துத் தன்னை
வெளிப்படுத்திக் கொள்கிறவனே மாண்புறு மனிதாபிமானி!
...
மானிடர்க்குக் கிடைத்துள்ள நீதிநெறிகள் ஏராளம்! ஏராளம்!
அவைகளால் மானுடம் அடைந்துள்ளப் பயனோ பாதாளம்! பாதாளம்!
...
பைத்தியத்தின் செய்கையும், பார்ப்பனர் செய்கையும்
அர்த்தமற்ற ஒன்றே!
...
பழத்துக்குள் வண்டு பூச்சி போல்
பொது மக்களிடையே உஞ்ச விருத்திப் பார்ப்பான்!
...
மானத்தையும், ஞானத்தையும் இழந்தவனே
பார்ப்பானை மதிப்பான்!
...
புறத்தில் கொண்ட அறியாமையே
அகத்தில் புகுந்து அச்சுறுத்தும்!
...
இலட்சியம் இல்லாத வாழ்க்கை
திக்குத் தெரியாத பாதை!
...
சலனமில்லாத தெளிவே பகுத்தறிவு;
சபலமில்லா வலிவே சுயமரியாதை!
...
தெரிந்ததை அனைவர்க்கும்
விருந்தாக்குவோம்;
தெரியாததை அறிந்திட
விரும்பி நோக்குவோம்!
...
சிந்தனை நெருப்பும்,
செயல் காற்றும் இணைந்தால்
அழியாதோ அறியாமை!
...
அறிவுக் கண்ணை சரியாகத் திறந்தால்
பிறவிக் குருடனும் தெளிவு பெறுவான்!
...
காவடி எடுத்து கூத்தாடாதே
கபாடி எடுத்துப் பாடி ஆடு!
...
யாரிடமும் பக்தி செலுத்தாதே!
யாவரிடமும் மரியாதை செலுத்து!
...
ஆண்டவா என்று வானத்தைப் பார்க்காதே!
ஆரியனை சாமீ என்று மானத்தை இழக்காதே!
...
கோயிலை சுற்றாதே!
புகையிலை குதப்பாதே!
...
விலங்கின் தீயகுணங்கள் வீழ, நற்குணங்கள் ஓங்க மனிதரானோம்
தூய உள்ளமும் பழியற்ற வாழ்வுமே அதனை நீடித்து நிலைக்கச் செய்கிறது.
...
அனுபவப்பட்டுத் தேர்ந்த புலமை
எதற்கும் பயன் தரும்.
...
ஆராய்ந்தறியும் திறமையே
அறிவின் திறட்சிப் புலமை!
...
அறிவை உணர்ச்சி வெல்லுவது தான் இயற்கை அதன் பயன்தான் தீமை! 
அறிவால் உணர்ச்சியை வெல்லுவது வலிந்த செயற்கை அதன் பயன் தான் நன்மை!
...
தாலி கட்டாதே - பிறகு
மூலி ஆக்காதே!
...
உயிரினங்களில் மனிதன் சிரிக்க மட்டும் தானா செய்கிறான்!
துரோகம் செய்வதிலும் மனிதனைத் தவீர வேறு உயிரினம் இல்லையே?
...
எண்ணிப் பார்க்கும் தன்மையை மனிதன் என்று அடைந்தானோ 
அன்றே மிருகத்திலிருந்து மாறுபட்டவன் மட்டுமல்ல; 
மிருகத்தை விடக் கேடுகெட்டவனுமானான்!
...
ஒளியோடு ஒரு துளியாக உருளுவதை விட
இருளைக் கிழிக்கும் ஒளி வீச்சே சிறப்பு!
...
கலை என்ற எந்தக் காட்சியானாலும் அது பொய்யை ரசிப்பது தான். 
உண்மையான மதிப்பை மறைப்பதுதான்!
...
மதம் மாறாதே! மனம் மாறு!
மனிதனாகத் தேறு!
...
அய்யப்பனை காலால் மிதி!
உன்னப்பனை மனதால் மதி!
...
தன் பெயர் சொல்லப் பிள்ளை வேண்டும் என்பர்
தனது யெரைச் சொல்லிப் பிள்ளை கூப்பிடக் கூடாது என்று மறுப்பர்!
...
அழிந்தது பழந்தமிழ்க் கலைகள் அகஸ்தியனால்!
இழிந்தது தமிழர் தம் தன்மானம் கம்பனால்!
...
படித்த தமிழரைப் பாழாக்கியது ஆரிய வேதம்!
படியாத தமிழரைப் பாழாக்கியது ஆரிய போதம்!
...
உழைப்பவனுக்கு மதிப்புக் குறையுமிடத்தில்
உதைப்பவனுக்கு மதிப்பு உயர்வடையும்!
...
பரட்டைத் தலையனைப் பார்க்கவே கூசுவர்!
படிமக் கல்லிலே படி எண்ணெய் பூசுவர்!
...
மீசையை முறுக்கிப் பெண்மையைப் பழியாதே!
வேசை என்று ஓர்மையில் மொழியாதே!
...
யக்ஞம் செய்யாது உண்பது
திருட்டுச் சோறு என்கிறது பகவத்கீதை!
உழைக்காமல் உண்பதே
திருட்டுச் சோறு என்றார் பகுத்தறிவு மேதை!
...
ஆட்சி மொழி அன்னைத் தமிழே!
அகில மொழி நன்னை ஆங்கிலமே!
...
சுவர்க்க லோக ருசி
வர்க்கப் பசியைத் தணிக்காது!
...
மேதை பெண்ணிலும் உண்டு!
பேதை ஆணிலும் உண்டு!
...
ஜாதிக்குள் ஜாதி; அதற்குள் ஆயிரம் குட்டி ஜாதி;
அததற்கு வெவ்வேறு நீதி; அதில் ஒருமைப்பாடு என்னும் சதி!
...
ஆண்களின் படிப்பு கல்லைக் கடவுளாகக் கருதச் செய்கிறது
பெண்களின் படிப்பு கணவனைக் கல்லாகக் கருதச் செய்கிறது!
...
அஞ்ஞான புராணத்தை பஜனை மடத்தில் புலம்பு!
விஞ்ஞான பாடத்தைப் பள்ளிக் கூடத்தில் விளம்பு!
...
மாணவன் வீட்டு வேலைக்கு ஒத்துழையாதபோது
மாணவி வீட்டு வேலைக்கு உறுதுணையாக இயங்கச் செய்வதுதான்
பெண்ணடிமைத்தனத்திற்கு ஆரம்பக் கல்வி!


* தோழர் சுவரெழுத்து சுப்பையா

மிக்க நன்றிகள் : தோழர் தமிழச்சி மற்றும் பெரியார் திராவிடர் கழகம்


0 comments:

Post a Comment