
தமிழ் நாட்டின் மாநிலப் பறவையான மரகதப் புறாவை சென்ற வாரம் பழனி மலை பகுதியில் பயணம் செய்த போது அதிகமாக பார்க்க முடிந்தது. பாச்சலூர் அருகே உள்ள வனப்பகுதியில் இவை அதிகம் காணப்படுகின்றன. தரையில் இருந்து சுமார் 1200 மீ உயரத்திற்கு மேலுள்ள பகுதிகளில் இவற்றை பார்க்க முடிந்தது. பசுமை மாறா மழைக் காடுகளில் வாழும் இவை தெற்காசிய முழுவதும் பரவி உள்ளன. பெரும்பாலும் பழங்கள், விதைகளை உண்டு வாழ்கின்றன.
அதிகம் வெளியே தென்படாமல் மறைந்து வாழ்கின்றன. இதற்கு முன் இந்த பறவையை வேறு எந்த வனப் பகுதியிலும் நான் பார்த்ததில்லை. எளிதில் கண்களுக்கு புலப்படாத இந்த பறவையை படம் எடுக்க முயற்சித்து முடியாமல் போனது.
ஐரோப்பாவில் இந்த பறவை கூண்டில் வைத்து வளர்க்கப்படுகிறது.
மரகத் புறாவைப் பற்றிய காணொளி :
மேலும் இயற்க்கை வாழ் விலங்குகள் குறித்த தகவல்களுக்கு :
http://ivansatheesh.blogspot.com/
1 comments:
பச்சைப்புறா ரத்தம் வாதநோய்க்கு நல்லது...அது இதுன்னு கிராமத்து வைத்தியர்களே முக்கால்வாசி கொன்னுட்டாங்க...
Post a Comment