“சுவரெழுத்து சுப்பையா” என்றொரு ஆச்சரியமூட்டுகிற புத்தகம், சுப்பையா என்ற அபூர்வமான மனிதரின் தனித்துவமான வாழ்க்கையையும், அனல் பறக்கும் பகுத்தறிவுச் சிந்தனைப் பொறிகளையும் பேசுகிறது.
காரைக்குடி பக்கத்திலுள்ள சூரக்குடியில் பிறந்தவர். தந்தை பெரியாரின் இயக்கத் தொண்டராக வாழ்வதில் தனித்துவச் சிறப்பு வாய்ந்தவர். குறைந்த படிப்பு. பசியும் பட்டினியாக நகர் நகராக நகர்வது, சுவரெழுத்துகள், சுவரெழுத்துக்கள், சுவரெழுத்துக்கள். வண்ணக் கலவை, தூரிகை எதுவுமில்லாமலேயே கறுப்புத் தார் கொண்டு வெளிச்ச சிந்தனைகளை சுவர்களில் எழுதுவார்.
“விஞ்ஞானி கண்டது விரைவு ராக்கட்
அஞ்ஞானி கண்டது விபூதி பாக்கட்”
“வித்தகர் கண்டது பறக்கும் விமானம்
பக்தர் கண்டது பறக்காத கருட வாகனம்”
இம்மாதிரி ஒளிச்சிந்தனை தேங்கிய முழக்கங்கள் மட்டு மல்ல. வாசித்த மனசில் விவாதத் தையும் கேள்வியையும், புதிய விழிப்பையும் தரக்கூடிய தகவல் கள், துணுக்குகள், புராண இதி காசக் கதைப்புரட்டுகள் குறித்த விமர்சனங்கள், மத மூட நம்பிக் கைகளுக்கு எதிரான விளக்கங் கள், கடவுளர்கதைகள் பற்றிய எள்ளல் விமர்சனங்கள்... மானுட சமத்துவம் குறித்த சிந்தனைப் பொறிகள், சாதிய மறுப்புக் குரிய சரித்திர விளக்கங்கள் என்று வண்டி வண்டியான விளக்கங் கள்.
யோகி மாதிரி, சித்தர் மாதிரி பரப்புரையே வாழ்க்கையென அலைந்த தியாகி சுப்பையாவை இயக்கத்தோழர்கள் பராமரித் திருக்கிறார்கள். நடிகவேள் எம்.ஆர்.ராதா மூலமாக நிதி வசூல் செய்து, அவருக்கு திருமண ஏற்பாடுகூட செய்திருக் கின்றனர்.
கோவை ஆறுச்சாமி என்ற பெரியார் திராவிடர் கழகத் தொண்டர், சுப்பையாவின் டைரிகளில் இருந்த அவரது சிந்தனைச் சேகரங்கள் முழு வதையும் முறையாக நூலாக்கி, சுப்பையாவின் வாழ்வின் அருமையையும் சிந்தனைப் பொறிகளையும் கல்வெட்டு போல நிரந்தரப்படுத்திவிட் டார்.
அச்செழுத்துப் புத்தகமல்ல, கையெழுத்துப் புத்தகம். சுப்பை யாவின் ஓவியக் கைவண்ணத் தையும் உலகுக்கு அறிமுகப்படுத் துவதற்காக... டைரிகளிலுள்ள அவரது கையெழுத்துப் பிரதி களை ஸ்கேன் செய்து அப்படியே அச்சிட்டு புத்தகமாக்கியுள்ள ஆறுச்சாமியின் சேவையை எத்தனை பாராட்டினாலும் தகும்.
பலகேள்விகளையும், விவாதங்களையும் எழுப்புவதற் குரிய சிந்தனைச் சுடராக புத்தகம் விளங்குகிறது.
இந்த நூலுக்குள் விமர்சனத் துக்குரியவை இல்லாமலில்லை. ‘ஆரியனாக-பிராமணராக பிறந்தோர் அனைவரும் சதிகளும், கெடுதல்களும், ஆதிக்கமும் செய்வர்’ என்ற சிந்தனை மனுதர்மச் சிந்தனை. அங்கேயும் பாரதி உண்டு, வ.ரா.உண்டு, தமிழ்த்தாத்தாவும், வ.வே.சு.ஐயரும் உண்டு, வைத்தியநாத அய்யருண்டு, சின்னக் குத்தூசி உண்டு என்பதை யும் யோசிக்க வேண்டும். பிறப் பினால் குணம் நிர்ணயமாவ தில்லை. வாழும் வாழ்வால் தான் ஒருவர் குணம் நிர்ணய மாகும்.
இப்படி விலகி நின்று விமர்சிப்பதற்கும் இதற்குள் விஷயமுண்டு. அதையும் தாண்டி மூட நம்பிக்கை இருளை விரட்டு கிற அறிவார்ந்த சிந்தனைகளைத் தாங்கியதாக இருக்கிறது இந்த நூல்.
பக்கம், 658
விலை ரூ. 350
நூல் கிடைக்குமிடம்:
வெ.ஆறுச்சாமி,பெரியார் படிப்பகம், அரசு விரைவுப் பேருந்து நிலையம் அருகில், காந்திபுரம், கோவை.
விலை ரூ 350.
நன்றி : கீற்று இணையதளம் மற்றும் செம்மலர் ஆசிரியர் குழு
0 comments:
Post a Comment