Wednesday, August 10, 2011

கிருமிகளும் பின்னே நாமும்.....



நம் உடலின் 'போர்வை'யான தோல் மீது மட்டும் சுமார் 2 லட்சம் கோடி பாக்டீரியாக்கள்... அதாவது, கிருமிகள் வாழ்கின்றன ! உதாரணமாக, கன்னத்தில் ஒரு சதுர சென்டிமீட்டர் அளவுக்கு ஒரு சதுரம் வரைந்து கொண்டால், அந்த சதுரத்துக்குள் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பாக்டீரியாக்கள் வளைய வரும்.

ஒரு மனிதனின் உடலில் இருந்து ஒவ்வொரு நாளும் 1,000 கோடி செத்துப்போன தோல் துகள்கள் வெளியேற்றப்படுகின்றன. அதுதான் அந்த பாக்டீரியாக்களுக்கு உணவு ! தினமும் நாம் (பாம்பு மாதிரி) தோல் உரிக்கிறோம். கூடவே, புதிய தோல் வளர்கிறது ! அந்த பாக்டீரியாக்கள் நம் தோலை உண்ணாவிட்டால், செத்துப்போன தோல் உடலிலேயே அப்பிக்கொண்டு யானை அளவு பெருத்துவிடுவோம் !

உடலுக்கு உள்ளே போனால்... ஜீரண உறுப்புகளில் மட்டும் 10 ஆயிரம் கோடிக்கு மேல் பாக்டீரியா உண்டு. அதுதான் நாம் உண்ணும் உணவை பிரித்து ஜீரணிக்கவைக்கிறது. இதெல்லாம் நல்ல பாக்டீரியா. கெட்ட பாக்டீரியாக்களும் உண்டு.

தகவல் : மதன்-விகடன்

0 comments:

Post a Comment