கேள்வி : தாயின் வயிற்றில் உள்ள போது குழந்தை உணவு சாப்பிடுகிறதா ?.
அதே சமயம், அந்தக் குழந்தையின் கழிவுகள் எங்கே செல்கின்றன ?
பதில் : பெலோப்பியன் குழாயில் காத்து இருக்கும் முட்டையை ஆணின் உயிரணு துளைத்தவுடனே, முட்டை கர்ப்பப்பை நோக்கி நகர ஆரம்பிக்கிறது. போகிற வழியிலேயே செல்கள் நாலாக, எட்டாக, பதினாறாகப் பிரிய ஆரம்பிக்கிறது. அந்தப் பயணத்தின்போதே மனிதன் உருவாகத் தொடங்கிவிடுகிறான் !
பிறகு, கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டவுடன் ஆம்னியான் (Amnion) என்கிற திரை அந்தப் 'புள்ளி' மனிதனை மூடிக்கொள்ள, மூன்றாவது மாதத்துக்குள் கருவுக்கும் கர்ப்பப்பைக்கும் இடையே ரத்த நாளங்களால் ஆன 'பாலம்' கட்டப்படுகிறது. இதுதான் பிளாஸன்ட்டா(Placenta). இதன் வழியே அம்மாவின் ரத்தம் குழந்தையின் உடலுக்குள்ளும் போய்வர, ஆம்னியான் நீரில் முழ்கி மிதக்கும். குழந்தை இப்போது அம்மாவின் உடலில் ஒரு பகுதி. தனியாக மூச்சுவிடவோ, உண்ணவோ, கழிவுகளைப் போக்கவோ தேவை இல்லை.
தகவல் : மதன்-விகடன்
1 comments:
நன்றி தோழர்
Post a Comment