Wednesday, August 10, 2011

கடவுள் இல்லா திசை !


எட்டுக்கெட்டு அறையில்
கட்டிலின் கால்மாட்டில்
கடவுள் படம்.
கடவுள் இருக்கும் திசை
கால் நீட்டாதீர்கள்
என மனைவி அதட்ட...
கடவுள் இல்லாத
திசை சொல்
கால் நீட்டிக் கொள்கிறேன்
என்றேன் !

கவிதை ஆக்கம் : சாஸ்தா செல்வராஜ்

0 comments:

Post a Comment