Saturday, August 13, 2011

கண்ணீர் கதை


கண்ணீர் உப்பு சுவை உடைய நீர் என்பது அனைவரும் அறிந்ததே. கண்ணுக்கு மேலாக நம் கண்ணில் படாத மாதிரி மறைவாக லாக்ரிமல் கிளாண்ட் என்ற ஒரு சுரப்பி உள்ளது. இது சுரக்கும் லாக்ரிமா என்கிற திரவம்தான் கண்ணீராக வருகிறது.

சோகம், அளவுக்கு அதிகமான மகிழ்ச்சி, பயம் இவையெல்லாம் இந்தச் சுரப்பியைத் தூண்டிவிட்டு, கண்ணீரை வரவழைக்கிறது. பொதுவாக விழிக்கோளத்தில் தூசு பட்டால், சுத்தம் செய்து விடுவதுதான் இந்தச் சுரப்பியின் வேலை. அதனால் தேவையான நேரத்தில் தான் இது தன் வேலையைச் செய்யும். புகை மற்றும் வெங்காயம் உரிக்கும்போது இந்த சுரப்பி, வேலை செய்து கண்ணீரை வரவழைத்துவிடும்.


தகவல் : தினத்தந்தி

0 comments:

Post a Comment